பகுதி நேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் மற்றும் பணி நிலைப்பு வழங்க வேண்டும்! டாக்டர் ராமதாஸ்

சென்னை: அரசு பள்ளிகளி ல் 13 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை மற்றும் பணி நிலைப்பு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையில் 13 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிலைப்புக் கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் நிலையில், பொங்கல் திருநாளையொட்டி தங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை யையும் தமிழக … Read more

டெல்லி சட்டசபை தேர்தல் தேதியை இன்று மதியம் அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

புதுடெல்லி, 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு நடப்பு ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதி பற்றிய அறிவிப்பை இன்று மதியம் 2 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தேர்தலில் போட்டியிடும் 29 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது. இதில், புதுடெல்லி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவாலுக்கு எதிராக முன்னாள் எம்.பி. பர்வேஷ் வர்மாவை அக்கட்சி நிறுத்தியது. இதேபோன்று … Read more

ஜல்லிக்கட்டு: `காளை வளர்த்தால் உதவித்தொகை; தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?’ – கேட்கும் காளை வளர்ப்போர்

“ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு காளைகளை கொண்டு செல்லும்போது டோல்கேட்டுகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும், காளை வளர்ப்போருக்கு உதவித்தொகை, வீரர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்ய வேண்டும்” என் காளை வளர்ப்போர், வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்னும் சில தினங்களில் நடைபெறுவதை முன்னிட்டு காளைகளை உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர். உலகத்தமிழரின் பண்பாட்டுத் திருநாளான பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதில் முக்கியமாக … Read more

ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்! சென்னை போராட்டத்தில் ஆலந்தூர் பாரதி, கனிமொழி உள்பட பலர் பங்கேற்பு…

சென்னை; ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும்  இன்று திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்து வரும் நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆலந்தூர் பாரதி, கனிமொழி எம்.பி., தயாநிதி மாறன் எம்.பி. உள்பட பலர் பங்கேற்றனர் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலை கண்டிக்கும் வகையில்,  தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைமை நேற்று  அறிவித்திருந்தது. அதன்படி, … Read more

Justin Trudeau:`இந்தியாவுடன் உரசல்… பொருளாதார சிக்கல்' – ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா பின்னணி என்ன?

கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 2015-ம் ஆண்டு தன் லிபரல் கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவந்தார். அப்போது அவருக்கு வயது 43. அரசியலில் புதிய முகம், இளம் தலைவர், வெளிப்படையான குடியேற்றக் கொள்கையை மையமாகக் கொண்ட புதிய அரசியல் உத்தி, செல்வந்தர்கள் மீதான வரியை அதிகரித்தது, காலநிலை மாற்றத்துக்கேற்றவாறு திட்டங்கள் என மக்கள் விரும்பும் தலைவராக வளர்ந்துவந்தார். அதே நேரம், ஊழல் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. அதைத் தொடர்ந்து, சமீபமாக கனடாவில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம், பணவீக்கம் என, அவரது … Read more

தமிழக சட்டப்பேரவையின் புத்தாண்டு கூட்டத்தொடர் 11ந்தேதி வரை நடைபெறும்! சபாநாயகர் அப்பாவு

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் புத்தாண்டு கூட்டத்தொடர் 11ந்தேதி வரை நடைபெறும்  என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குவதாக அறிவித்த நிலையில்,  சட்டசபையின் நிகழ்வில் பங்கேற்ற ஆளுநர், தேசியகீதம் இசைக்கவில்லை என கூறி, அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதையடுத்து, சபாநாயகர் ஆளுநர் உரையை வாசித்தார். பின்னர்,  சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு கூடி, பேரவை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை முடிவு செய்தது. இதையடுத்து … Read more

`விசிக எம்.பி-க்கு அம்பேத்கர் விருது' – எதிர்க்கும் தமிழ்ப்புலிகள் கட்சி… சொல்வதென்ன?

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாருக்கு தமிழக அரசின் அம்பேத்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது சமூக, அரசியல் தளத்தில் ஆதரித்தும், விமர்சிக்கப்பட்டும் வருகிறது. ரவிக்குமார் எம்.பி விசிக, கம்யூனிஸ்டுகளைத் தொடர்ந்து காங்கிரஸ்… மதுரையில் கலெக்டருக்கு எதிராக குற்றச்சாட்டு ஏன்? “அருந்ததியர் சமூகத்தினருக்கு கலைஞர் ஆட்சியில் வழங்கிய உள் ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், அதை விமர்சித்தும், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும் வந்த ரவிக்குமாருக்கு … Read more

அசாம் நிலக்கரி சுரங்க வெள்ளத்தில் சிக்கிய 15 நபர்கள்

திமா ஹசோவா அசாம் மாநில நிலக்கரி சுரங்கத்தில் வெள்ளம் புகுந்து 15 பேர் சிக்கி உள்ளனர். அசாம் மாநிலத்தின் மலைப்பிரதேச மாவட்டங்களில் ஒன்றான திமா ஹசாவோவில் உள்ளடங்கிய பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு நிலக்கரி சுரங்கத்தில் வெள்ளம் புதுந்ததால், வேலை செய்து வந்த தொழிலாளர்களில் 15 பேர் வெளியே வர முடியாமல் சிக்கி கொண்டனர். அக்க்கு வேலை செய்து வந்த ஒரு சிலர் சுரங்கத்தில் இருந்து தப்பி வெளியே வந்து சுரங்க உரிமையாளர் மற்றும் உள்ளூர் போலீசாரிடம் … Read more

முன்னாள் அமைச்சர் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கு உத்தரவிட்டுள்ளது முந்தைய அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி மற்றும் அதிமுக முன்னாள் நிர்வாகியான விஜய நல்லதம்பி ஆகியோர் ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் அளித்த புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி ஆகியோருக்கு … Read more