நாளை ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

சென்னை நாளை தமிழகம் முழுவதும் ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் பாஜக ஆளும் மாநிலங்களில் அமைதியாக இருக்கும் ஆளுநர்கள், பாஜக அல்லாத மாநில அரசுகளில் தனி ராஜாங்கம் நடத்த முயல்கிறார்கள். ஆளுநர் மாளிகைகளை வைத்து மாநில நிர்வாகத்தை முடக்குவதை ஒரு வாடிக்கையாகவே வைத்திருக்கிறது மோடி அரசு. அதன் வெளிப்பாடுதான் இன்றைக்கு தமிழக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வு. ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் மாநில உரிமைகளை சிதைத்து, மாநில … Read more

மகாராஷ்டிராவில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

பால்கர் இன்று மகாராஷ்டிர மாநிலத்தில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது/ கடந்த சில நாட்களாகஇந்தியாவின் வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. இவற்றால் பாதிப்பு எதுவும் இல்லாவிட்டாலும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த வரிசையில் இன்று அதிகாலை சுமார் 4.15 மணி அளவில் மகாராஷ்டிர  மாநிலம் பால்கர் பகுதியில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவானதாக மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து … Read more

சென்னை: தொழிலதிபரை நம்பவைத்து ரூ.10 லட்சம் மோசடி; `சென்ட்டிமென்ட்' சங்கர் சிக்கியது எப்படி?

திருச்சி மாவட்டம், இளங்காகுறிச்சி, பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் முகமது நசுருதீன் (43). இவர் கட்டட பொருள்கள் சப்ளை மற்றும் பெயின்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு தொழில் முறையில் சுதன் என்பவர் மூலம் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த சங்கர் என்பவர் அறிமுகமானார். பின்னர் சங்கரும் முகமது நசுருதீனும் நட்பாக பழகி வந்தனர். கடந்த 2024-ம் ஆண்டு சங்கர், தனது தங்க நகை அடமானத்தில் உள்ளதாகவும் அந்தக் கடனை அடைக்க உதவி செய்யுங்கள் என முகமது நசுருதீனிடம் … Read more

HMPV வைரஸ் குறித்து புதிதாக அச்சப்பட ஒன்றுமில்லை… எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் : ஜெ.பி. நட்டா

HMPV வைரஸ் குறித்து புதிதாக அச்சப்பட ஒன்றுமில்லை என்றும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயாராக சுகாதாரத் துறை தயாராக உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி. நட்டா கூறியுள்ளார். 2001ம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த மனித மெட்டாநிமோனியா வைரஸ் (HMPV) ஒரு புதிய வைரஸ் அல்ல என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த வைரஸ் சுவாச தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய நியூமோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்தது. இது பொதுவாக இருமல், காய்ச்சல், சளி அல்லது மூக்கில் அடைப்பு மற்றும் தொண்டை … Read more

Canada: பதவி விலகுகிறாரா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ? – பரபரக்கும் தகவல்கள்… என்ன நடக்கிறது அங்கே?

கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்யவிருக்கிறார் எனத் தகவல் பரவிவருகிறது. இது குறித்து அவர் உறுதியான முடிவை எடுக்கவில்லை எனினும், ராஜினாமா செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக அவர் 9 ஆண்டுகள் வகித்துவரும் கனடாவின் ஆளும் கட்சியான லிபரல் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவார் என ஊடகங்கள் தெரிவித்தன. வரும் புதன் அன்று நடைபெறவுள்ள லிபரல் கட்சியின் (Liberal Party of Canada) தேசிய … Read more

தமிழக சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன் : ஆளுநர் மாளிகை விளக்கம்

சென்னை தமிழக சட்டசபையில்  இருந்து ஆளுநர் வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இன்று ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டபடி, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9 மணியளவில் தொடங்கியது. பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு வருகை தந்தனர். மேலும், சபாநாயகர், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரும் அவைக்கு வருகை தந்தனர். , ஆண்டின் முதல் கூட்டத்தொடருக்காக கூடிய சட்டசபைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு … Read more

`அதிஷி தனது தந்தையையே மாற்றிவிட்டார்' – பாஜக வேட்பாளர் மீண்டும் சர்ச்சை… அழுத டெல்லி முதல்வர்

ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் டெல்லியில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தகைய சூழலில், கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் எம்.பி டேனிஷ் அலிக்கெதிராக வகுப்புவாத கருத்துகளைப் பேசி சர்ச்சையை ஏற்படுத்திய அப்போதைய பா.ஜ.க எம்.பி ரமேஷ் பிதுரி, “கல்காஜி தொகுதியில் பிரியங்கா காந்தியின் கன்னங்கள் போல மென்மையான சாலைகள் அமைத்துத் தருவேன்” என நேற்று முன்தினம் சர்சையைக் கிளப்பினார். டெல்லி பா.ஜ.க வேட்பாளர் ரமேஷ் பிதுரி இந்த சர்ச்சை ஓய்வதற்குள், டெல்லி முதல்வர் … Read more

கங்கனா ரணாவத் நடிக்கும் எமெர்ஜென்சி பட டிரெய்லர் வெளியீடு

மும்பை நடிகை கங்கனா ராணாவ்த் இந்திரா காந்தியாக நடிக்கும் எமெர்ஜென்சி பட  டிரெய்லர் வெளியாகி உள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும்  ‘எமர்ஜென்சி’. படத்தில், இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்து படத்தை அவரே இயக்கியும் உள்ளார். இப்படத்தில் அனுபம் கெர், சதீஷ் கவுசிக், பூமிகா சாவ்லா, ஷ்ரேயாஸ் தல்படே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் திரைக்கதை மற்றும் … Read more

TN Assembly: "எமெர்ஜென்சியை நினைவூட்டுகிறது… இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல" – ஆளுநர் மளிகை

தமிழ்நாடு சட்டமன்றத்தின், இந்த ஆண்டின் முதல் கூட்டம் இன்று (ஜனவரி 6) தொடங்கிய நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று கூறி, ஆளுநர் ஆர்.என். ரவி அவையிலிருந்து வெளியேறிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளாகியிருக்கிறது. இதுகுறித்து, ஆளுநர் மாளிகை தனது எக்ஸ் தளப் பக்கத்தில், தேசிய கீதம் இசைக்குமாறு சபாநாயகரிடமும், முதல்வரிடமும் ஆளுநர் வேண்டுகோள் விடுத்ததாகவும், அது மறுக்கப்பட்டதால் தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என அவர் … Read more