2025 ஹோண்டா SP160 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள் – Honda SP160 on-road price, specs and features

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனத்தின் புதிய எஸ்பி 160 பைக் மாடலின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். புதிய SP160 பைக்கினை பொறுத்தவரை முன்பாக விற்பனையில் உள்ள எஸ்பி 125 பைக்கின் வடிவமைப்பினை பயன்படுத்திக் கொண்டு யூனிகார்ன் 160 பைக்கின் என்ஜின் மற்றும் ஃபிரேம் உள்ளிட்ட அம்சங்களை பகிர்ந்து கொண்டாலும் ஸ்போர்ட்டிவான தோற்ற வடிவமைப்பினை கொண்டு புதிய எல்இடி ஹெட்லைட், டெயில்லைட் என அனைத்தும் சிறிய மாற்றங்களுடன், … Read more

`தமிழக சட்டசபையில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டுள்ளது’ – ஆளுநர் மாளிகை ட்விட்டர் பதிவும் நீக்கமும்

2025 -ன் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. தேசிய கீதம் முதலில் பாடவில்லை என்பதை கண்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் சட்டசபையைவிட்டு வெளியேறினார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ “தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் பாரத அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படைக் கடமையாகும். இது மாண்புமிகு ஜனாதிபதியின் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாராளுமன்றத்தில் பாடப்படுகிறது அல்லது இசைக்கப்படுகிறது. … Read more

இன்று ராஜினாமா செய்கிறார் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ?

ஓட்டவா: கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில்,  இன்று பதவி விலகக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவுடன் மோதல் போக்கில் செயல்பட்டு வந்த கடனா பிரதமரின் செயல் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, அவருக்கு  கட்சிக்குளும், மக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்தது. இதனால் அரசியல் களத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் இன்று (திங்கட்கிழமை) தனது பதவியை  ராஜினாமா செய்யக் கூடும் என்று தி குளோப் அண்ட் மெயில் … Read more

“அமெரிக்கா கிளம்பும்போதுதான் அரியர்ஸ் முடித்தேன்!'' – பல்கலை. விழாவில் FeTNA தலைவர் உற்சாக பேச்சு

முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு விழா… “நான் படிப்பில் சுமார்தான், இக்கல்லூரியில் படித்தபோது அரியர் வைத்து, வேலைக்காக அமெரிக்காச் செல்லும்போது முடித்த மாணவன் நான்” என்று, அமெரிக்காவில் கணினித்துறையில் பணியாற்றிவரும், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவராகவும் உள்ள விஜய் மணிவேல் நெகிழ்ச்சியாக பேசியது மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர்களையும், ஆசிரியர்களையும் உற்சாகப்படுத்தியது. கல்லூரி விழாவில் விஜய் மணிவேல் சிவகாசி தமிழர்; பப்புவா நியூ கினியா ஆளுநர்… பத்மஸ்ரீ விருது பெறும் சசீந்திரன் முத்துவேல்… யார்? மதுரை … Read more

உள்ளாட்சி எல்லைகள் விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்! தமிழ்நாடு அரசு

சென்னை:  உள்ளாட்சி எல்லைகள் விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என  தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு சமீபத்தில் மாநகராட்சி, நகராட்சிகள்  விரிவாக்கம் குறித்து அரசாணை வெளியிட்டது. இதனால் பல கிராம பஞ்சாயத்துக்குள் நகராட்சியுடனும், மாநகராட்சியுடன் இணையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பல ஊராட்சிகளை சேர்ந்த மக்கள்  கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதையடுத்து,  எல்லை விரிவாக்கம் தொடர்பாக பொது மக்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்து அதுகுறித்த … Read more

Karun Nair 2.0: `5 மேட்ச், 4 சதம், 542 ரன்கள்.. உலக சாதனை' – இந்திய அணியின் கதவை தட்டும் கருண் நாயர்

2016 டிசம்பரில் இந்தியா – இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில், சென்னையில் நடைபெற்ற 5-வது போட்டியில் நாட் அவுட் பேட்ஸ்மேனாக முச்சதம் அடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் கருண் நாயர். அந்த டெஸ்ட் தொடரில், தொடர் நாயகன் விருது வென்ற விராட் கோலி அடித்திருந்த 655 ரன்களில், கிட்டத்தட்ட பாதி ரன்களை (303*) அந்த ஒரே இன்னிங்ஸில் அடித்த கருண் நாயருக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது பலரும் வரவேற்றனர். டெஸ்ட் போட்டிகளில் சேவாக்குக்கு பிறகு முச்சதம் அடித்த … Read more

இன்று மதுரை ஜல்லிக்கட்டு போட்டி ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

மதுரை இன்று ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆனலைன் முன்பதிவு தொடங்குகிறது. அவனியாபுரத்தில் வருகிற 14-ந்தேதியும், பாலமேட்டில் 15-ந்தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன. ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. ஜல்லிக்கட்டுகான வழிகாட்டு நெறிமுறைகள் : அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று … Read more

அய்யன் திருவள்ளுவர் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் விருதுகள் அறிவிப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில், நடப்பாண்டுக்கான   அய்யன் திருவள்ளுவர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2025-ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது செந்தமிழ்ச் செம்மல் பெரும் புலவர் மு.படிக்கராமு அவர்களுக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த விருதுகள், வரும் 15ந்தேதி அன்று திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் 2025-ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது, 2024-ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது, … Read more

Relationship: பிளே பாய்ஸ் உருவான கதையும் பெண்களின் எமோஷனல் திருப்தியும்..!

பிளே பாய்ஸ் … ஆண்கள் பற்றி அடிக்கடி காதுல விழுற இந்த கேரக்டருக்கு என்ன அர்த்தம்..? இந்த கேரக்டர் கொண்ட ஆண்கள் பெண்கள் விஷயத்துல எப்படி நடந்துப்பாங்க..? இவங்க நல்லவங்களா, கெட்டவங்களா..? விளக்கமா சொல்லப்போறாங்க டாக்டர் அசோகன் மற்றும் டாக்டர் ஷாலினி. ”பிளே பாய்ஸ் ’நல்லவங்களா, கெட்டவங்களா’ என்று அலசி ஆராய்வதற்கு முன்னால், எந்த மாதிரியான ஆண்களை பிளே பாய்ஸ் என்று சொல்கிறோம் என்று தெரிந்துகொள்வோம். ஓர் ஆண் ஒரே நேரத்தில் பல பெண்களுடன் காதலில் இருப்பார். … Read more