ம.பி. ; கழிவு நீர் தொட்டியில் இருந்து 4 உடல்கள் மீட்பு

போபால், சம்பவம் குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஷிவ் குமார் வர்மா கூறியதாவது: மத்தியப் பிரதேசத்தின் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிவுநீர் தொட்டியில் இருந்து 4 உடல்கள் மீட்கப்பட்டன. இது பல கொலைகளின் வழக்காக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இந்த வீடு மாவட்ட தலைநகரிலிருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ள பார்கவான் காவல் நிலைய எல்லைக்குள் உள்ளது. கழிவுநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக உள்ளூர்வாசி ஒருவர் போலீசாருக்கு தகவல் அளித்தனின் பேரில், சம்பவ … Read more

Virat Kohli : “இந்திய அணிக்கு சூப்பர் ஸ்டார்கள் தேவையில்லை"- கோலியை கடுமையாகச் சாடும் இர்பான் பதான்

பார்டர் கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றிருக்கிறது. பெர்த்தில் நடந்த முதல் போட்டியை வென்ற போதும் இந்திய அணி தொடரை இழந்ததற்கு சீனியர் வீரர்களே மிக முக்கிய காரணம். இந்நிலையில், ‘இந்திய அணிக்கு சூப்பர் ஸ்டார் கலாசாரமே வேண்டாம். அணிக்காக ஆடும் கலாசாரத்தை உருவாக்குங்கள்.’ என கோலியை குறிப்பிட்டு முன்னாள் வீரர் இர்பான் பதான் கடும் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். Kohli பார்டர் கவாஸ்கர் தொடரில் கோலி 9 முறை பேட்டிங் ஆடியிருக்கிறார். 8 முறை அவுட் … Read more

பி எஸ் என் எல் 4 ஜி சேவை சபரிமலையில் தொடக்கம்

சபரிமலை சபரிமலையில் பி எஸ் என் எல்  தனது 4 ஜி சேவையை தொடங்கி உள்ளது. தற்போது கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயில் மகரவிளக்கு பூஜைக்காக 41நாள்கள் நடை திறக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு வருகை தருகின்றனர். இந்நிலையில்  சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக 4ஜி சேவையை பி.எஸ்.என்.எல் நிர்வாகம் சார்பில் நேற்று தொடங்கிவைக்கப்பட்டது. வனப்பகுதியில் சபரிமலை அமைந்துள்ளதால் தொலைத் தொடர்பு சிக்கல்கள் … Read more

சீனாவில் பரவும் தொற்று: கேரளா, தெலுங்கானா மாநிலங்களில் தீவிர கண்காணிப்பு

திருவனந்தபுரம், சீனாவில் எச்.எம்.பி.வி. என்னும் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாகவும், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. இருந்தாலும் இந்த வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று சீன நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் விடுபட்டுள்ள நிலையில் மீண்டும் ஒரு தொற்று பரவலா என்று உலக நாடுகள் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியுள்ளன. இந்தியாவிலேயே … Read more

புது உறவு தொடக்கம்? – மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸை புகழ்ந்து தள்ளும் சரத் பவார் மகள், உத்தவ் கட்சி

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த சில நாள்களுக்கு முன்பு நக்சலைட்கள் ஆதிக்கம் மிகுந்த கட்சிரோலிக்கு சென்றார். அங்கு 11 நக்சலைட்கள் பட்னாவிஸ் முன்னிலையில் சரணடைந்தனர். இதனை பிரதமர் நரேந்திர மோடி வெகுவாக புகந்து இருந்தார். அதோடு பட்னாவிஸை பரம எதிரியாக பார்க்கும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும் தேவேந்திர பட்னாவிஸை புகழ்ந்துள்ளது. நேற்று அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் தேவேந்திர பட்னாவிஸை புகழ்ந்து தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில் நக்சலைட் மாவட்டத்தை இரும்பு மாவட்டமாக மாற்ற தற்போதைய … Read more

எச் எம் பி வி தொற்று : கேரளாவில் தீவிர கண்காணிப்பு

திருவனந்தபுரம் சீனாவின் எச் எம் பி வி தொற்று காரணமாக கேரளாவில் தீவிர கண்காணிப்பு செய்யப்படுகிறது. கொரோனாவை தொடர்ந்து சீனாவில் எச்.எம்.பி.வி. என்னும் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாகவும், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.  சீன அசு இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாத போதும் இந்த வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று சீன நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயினும்உலக நாடுகள் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனிக்கத் … Read more

சிக்கிமில் திடீரென இடிந்த பாலம்.. ஆற்றில் கவிழாமல் தப்பிய லாரி

காங்டாக், சிக்கிம் மாநிலத்தின் வடக்கு சிக்கிம் மாவட்டத்தில் லாச்சுங் சூ ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று உள்ளது. பெய்லி என்று அழைக்கபடும் இந்த பாலம் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். அருகில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கான முக்கிய பாலமாக இது விளங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை அதிக பாரம் ஏற்றப்பட்ட சரக்கு லாரி ஒன்று இந்த பாலத்தில் சென்றபோது பாலம் திடீரென இடிந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் லாரி ஆற்றில் கவிழாமல் தப்பியது. … Read more

'விடுதலை ராஜேந்திரனுக்கு பெரியார் விருது, ரவிக்குமாருக்கு அம்பேத்கர் விருது' – தமிழக அரசு அறிவிப்பு

திருவள்ளுவர் விருது ஆண்டுதோறும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் திருநாள் விருதுகளை பெறும் விருதாளர்களை தமிழக அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும் ஜனவரி 15 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் விருதுகள் வழங்கவுள்ளார். விருது பெறுவோர் அனைவருக்கும் தலா ரூ 2 லட்சம் மற்றும் 1 சவரன் தங்கப்பதக்கம், பொன்னாடை வழங்கப்படும். மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள் விருதுகளின் பட்டியல்: அய்யன் … Read more

ஈகுவடார் நாட்டில் ராணுவ அவசர நிலை பிரகடனம்

குயிட்டோ உள்நாட்டு கலவரம் காரணமாக ஈகுவடார் நாட்டில் ராணுவ அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஈகுவடார் நாடு தென் அமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ளாது.   இங்கு செயல்படும் பல கிளர்ச்சி குழுக்களை பல ஆயுத கும்பலை பயங்கரவாத அமைப்பாக ஈகுவடார் அரசு அறிவித்துள்ளது. கிளர்ச்சியாளர்ள் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துதல், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதால் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். இதனால் குவாயாஸ், லாஸ் ரியோஸ், மனாபி உள்ளிட்ட 7 மாகாணங்களில் உள்நாட்டு கலவரம் நிலவுகிறது. ஆகவே ராணுவ … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு

திருமலை, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை அன்று உள்ளூர் மக்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி இந்த மாதத்துக்கான சாமி தரிசன அனுமதி 7-ந்தேதி நடக்கிறது. அதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) உள்ளூர் மக்களுக்கு சாமி தரிசன டோக்கன்கள் திருப்பதி மகதி கலை அரங்கத்தில் உள்ள கவுண்ட்டர்களிலும், திருமலையில் உள்ள பாலாஜி நகர் சமுதாயக் கூடத்திலும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தினத்தந்தி Related Tags … Read more