‘மது அருந்துதல் புற்றுநோயை உண்டாக்கும்’ என்ற எச்சரிக்கை மது பாட்டில்கள் மீது அவசியம்… அமெரிக்க சர்ஜன் ஜெனரல் விவேக் மூர்த்தி வலியுறுத்தல்…

‘மது அருந்துதல் புற்றுநோயை உண்டாக்கும்’ என்ற எச்சரிக்கை மதுபான பாட்டில்கள் மீது அவசியம் என்று அமெரிக்க அரசு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிபர் ஜோ பைடன் அரசின் கீழ் உள்ள பொது சுகாதார துறையில் அமெரிக்க சர்ஜன் ஜெனரலாக செயலாற்றிவரும் விவேக் மூர்த்தி இதனை வலியுறுத்தியுள்ளார். “அமெரிக்காவில் புகை பிடிப்பது மற்றும் உடல் பருமனுக்கு அடுத்தபடியாக புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய மூன்றாவது முக்கிய காரணியாக மது அருந்துதல் உள்ளது” என்று விவேக் மூர்த்தியின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. … Read more

“கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது'' -ஒருநாள் மாணவி நிகழ்ச்சியில் பெண்கள் நெகிழ்ச்சி

சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள சக்திகைலாஷ் தன்னாட்சி பெற்ற மகளிர் கல்லூரியில் பெண்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் இல்லத்தரசிகான “ஒரு நாள் மாணவி” என்ற திட்டத்தில் சுய தொழில், தற்காப்பு மற்றும் பல்வேறு விழிப்புணர்வு சம்மந்தபட்ட வகுப்பை கடந்த இரு நாள்கள் (02.01.2025மற்றும் 03. 01.2025) நடத்தினார்கள். “சேலத்தில் கல்லூரி படிப்பை தொடங்க முடியாத திருமணமான இல்லத்தரசிகள் பலர் எந்த ஒரு யுக்தியும் இல்லாமல் சுயதொழில் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் வீட்டிலே அடைந்து இருக்கிறார்கள். அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க … Read more

விண்வெளியில் துளிர்த்த காராமணி… விண்வெளி பயிர் பரிசோதனையில் முளைவிட்ட இஸ்ரோவின் நம்பிக்கை

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ கடந்த டிசம்பர் 30ம் தேதி விண்ணில் செலுத்திய PSLV-C60 ராக்கெட் சுமந்து சென்ற POEM-4 தளத்தில் ஆய்வுக்காக கொண்டுசெல்லப்பட்ட காராமணி விதைகள் (Cowpea seeds) முளைவிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நுண் புவியீர்ப்பு விசையில் தாவர வளர்ச்சியை ஆய்வு செய்ய, சுற்றுப்பாதை தாவர ஆய்வுகளுக்கான காம்பாக்ட் ஆராய்ச்சி தொகுதி (CROPS) பரிசோதனையின் ஒரு பகுதியாக, விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC) மூலம் இஸ்ரோ நிறுவனம் எட்டு Cowpea விதைகளை அனுப்பியது. … Read more

சமூக வலைதளத்தில் பழக்கம்; 500 பெண்களிடம் பணம் பறித்த 23 வயது இளைஞர்… பகீர் பின்னணி!

Delhi: டெல்லியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் துஷார் பிஷ்ட், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி பல பெண்களை ஏமாற்றி, அவர்களிடம் பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துஷார் பிஷ்ட், பிரேசிலிய மாடலின் புகைப்படத்தை பயன்படுத்தி, தன்னை அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த மாடலாக காட்டிக் கொண்டு, பம்பிள், ஸ்னாப்சாட் போன்ற ஆப்களில் 18 முதல் 30 வயதுடைய பெண்களுடன் நட்புடன் பழகியுள்ளார். அந்தப் பெண்களின் நம்பிக்கையைப் பெற்று, அவர்களிடம் நெருக்கமாக பழகி, தனிப்பட்ட … Read more

HMPV நிமோனியா நோய் குறித்து பீதியடைய தேவையில்லை மருத்துவ விஞ்ஞானிகள் விளக்கம்

HMPV எனப்படும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (human metapneumovirus -HMPV) நோய் சீனாவில் வேகமாக பரவி வரும் நிலையில் இது கொரோனா வைரஸ் போன்று வேகமாகப் பரவக்கூடும் என்ற கவலை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. எச்.எம்.பி.வி. வைரஸின் தற்போதைய வடிவத்தில் கடுமையான தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இவ்வகை வைரஸில் புதிய மரபணு மாற்றம் ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கும் வரை இதில் பீதியடைய வேண்டிய அவசியமில்லை என்று இந்திய … Read more

Karnataka: புகார் அளிக்க சென்ற பெண்ணிடம் `பாலியல் அத்துமீறல்' – DSP கைது!

கர்நாடகாவில் துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP) பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வீடியோ பரவவியதைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 58 வயதான ராமசந்திரப்பா துமகுரு மாவட்டம் மதுகிரியில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த வியாழன் அன்று பெண் ஒருவர் அவரது அலுவலகத்துக்கு நில தகராறு தொடர்பாக புகார் அளிக்கச் சென்றுள்ளார். அந்த பெண் கூறியிருப்பதன்படி, அவரைத் தனி அறைக்கு அழைத்து தகாத முறையில், அனுமதியில்லாமல் தொட்டு அருவறுப்பாக நடந்து கொண்டுள்ளார் ராமசந்திரப்பா. பாலியல் வன்கொடுமை இந்த சம்பவத்தை தனியறையின் … Read more

பொங்கல் விடுமுறை ஜனவரி 17ம் தேதி வரை நீட்டிப்பு… தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 17ம் தேதியும் விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 17.01.2025 அன்று விடுமுறை விடப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 14.01.2025 செவ்வாய்கிழமை அன்று தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதாலும், 15.01.2025, 16.01.2025, 18.01.2025 மற்றும் 19.01.2025 ஆகியவை அரசு விடுமுறை நாட்கள் என்பதாலும் மாணவர்கள், … Read more

அடகு வைக்க செல்லும்போது காணமல் போன கம்மல்… சாதுர்யமாக மீட்டு கொடுத்த ஊராட்சி துணை தலைவர்!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உள்ள சேரம்பாடி, பாலவாடி பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா. தான் அணிந்திருந்த தங்க காதணிகளை குடும்ப சூழ்நிலை காரணமாக அடகு வைப்பதாற்காக சேரம்பாடி கடைவீதிக்கு கொண்டு சென்றிருக்கிறார். சேரங்கோடு ஊராட்சி பகுதிகளில் முறையான குடிநீர் விநியோகம் இல்லாத காரணத்தால் ஊராட்சி அலுவலகத்தில் சுற்றுவட்டார மக்கள் முறையிட சென்றுள்ளனர். மல்லிகாவையும் அழைத்துள்ளனர். தங்க நகையை பத்திரமாக வைத்திருக்குமாறு மகன் கையில் கொடுத்துவிட்டு குடிநீர் பிரச்னைக்கு மக்களோடு சேர்ந்து குரல் கொடுக்கச் சென்றிருக்கிறார். திரும்பி வந்து … Read more

“ஃபார்மில் இல்லாததால் விலகி இருக்கிறேன்… நான் ஓய்வு பெறவில்லை” ரோஹித் சர்மா

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை, அவருக்கு பதிலாக பும்ரா கேப்டனாக உள்ளார். இதையடுத்து ரோஹித் சர்மா போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அவர் விரைவில் அணியில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும் செய்திகள் வெளியானது. இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள ரோஹித் சர்மா, கடந்த சில போட்டிகளாக ஃபார்மில் இல்லாத காரணத்தால் அணியில் இருந்து தாமாகவே விலகியிருப்பதாகக் கூறியுள்ளார். ஒரு பேட்ஸ்மேனாக … Read more

Yuzvendra Chahal: விவாகரத்து பெறப்போகிறாரா?- மனைவியுடனான புகைப்படங்களை நீக்கிய சஹால்

கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹாலும் அவரின் மனைவி தனஸ்ரீ வர்மாவும் விவாகரத்து பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் யுஸ்வேந்திர சஹாலின் செயல் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹால் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி கூர்கானில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. நடிகை, நடன இயக்குநர், யூ-டியூபர் மற்றும் பல் மருத்துவர் என பல பரிமாணங்கள் கொண்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் தனஸ்ரீ வர்மா … Read more