ரூ.1,300 கோடி சொத்து வரியை வசூல் செய்த சென்னை மாநகராட்சி!

சென்னை: சென்னை  மாநகராட்சி பகுதியில்  இதுவரை ரூ.1,300 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ள சென்னை மாநகராட்சி, சொத்து வரி கட்ட மார்ச் 31ந்தேதி கடைசி நாள் என்றும், அதற்குள் சொத்து வரி கட்டாதவர்களுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும், சொத்து வரி, மின்கட்டணம், கழிவுநீர் வரி உள்பட பல வரிகளை உயர்த்தியுள்ளது. சென்னை போன்ற நகர்புறங்களில் சொத்து வரி 50 சதவிகிதம் முதல் 200 சதவிகிதம் … Read more

சிறுமலர் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்: பள்ளிச் சிறுமிகளோடு இணைந்து கேக் வெட்டினார்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிறுமலர் பள்ளியில் முதலமைச்சர் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. பள்ளிச் சிறுமிகளோடு இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

கோர்ட்டில் டிப் டாப்பாக உலா வந்த `போலி' வக்கீல்; நம்பி ஃபீஸ் கட்டி ஏமாந்த பெண்! – என்ன நடந்தது?

​தேனி மாவட்டம், அரண்மனைபுதூரை​ச்​ சேர்ந்தவர் துர்க்கை அம்மாள்​. இவர் தன்னுடைய தந்தை பாண்டியன், பூர்வீக சொத்தை மகன், மகள்களுக்குத் தெரியாமல் வேறொரு நபருக்கு விற்பனை செய்தது தொடர்பாக தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தி​​லுள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொ​டர முடிவெடுத்திருக்கிறார். இதையடுத்து அவர் நீதிமன்றம் சென்றபோது ​​அங்கிருந்த சக்திவேல் என்பவரிடம், `சொத்து தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு போட வேண்டும், யாரைப் பார்ப்பது’ எனக் கேட்டிருக்கிறார். ​ தேனி நீதிமன்றம் வெள்ளை சட்டை, கருப்பு பேன்ட் அணிந்து ​​வழக்கறிஞர் போல் இருந்த ​அவர், ​​“நானும் வழக்கறிஞர்தான். … Read more

பழைய ஓய்வூதிய திட்டம்? அனைத்து துறைகளிடமும் அறிக்கை கோரியது தமிழ்நாடு அரசு…

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது, அது தொடர்பாக அனைத்து துறைகளும் அறிக்கை தாக்கல் செய்ய  நிதித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக விரிவான அறிக்கையை அனுப்ப அனைத்துத்துறை செயலாளர்களுக்கு தமிழ்நாடு அரசுசு உத்தரவிட்டுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து, பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் என அனைத்து துறை … Read more

தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது தீவிரமான நடவடிக்கை தேவைப்படுகிறது: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது தீவிரமான நடவடிக்கை தேவைப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. தொடர்ந்து குற்றத்தில் ஈடுபடுவோர் மீது தீவிர குற்ற நடவடிக்கை எடுப்பது பற்றி அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

கேரளா திரிச்சூர் கோயிலுக்கு ரோபோ யானை நன்கொடை| Robot elephant donated to Kerala Thrissur temple

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் திரிச்சூர்: கேரளாவில் திரிச்சூர் ஸ்ரீகிருஷ்ணன் கோயிலுக்கு ரோபோ யானை நன்கொடையாக வழங்கப்பட்டது. கேரளாவின் திரிச்சூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் பல்வேறு சடங்குகளை செய்வதற்காக ரோபோ யானையை விலங்குகள் நல அமைப்பான பீட்டா நன்கொடையாக வழங்கியுள்ளது. 11 அடி உயரமும், 800 கிலோ எடை கொண்ட ரோபோ யானைக்கு இரிஞ்சடப்பள்ளி ராமன் என பெயரிடப்பட்டுள்ளது. .5 லட்சம் செலவில் ரோபோ யானையை உருவாக்கப்பட்டுள்ளது. மின்சார சக்தியால் இயங்க கூடிய … Read more

புதுச்சேரி: சாலை விதிகளை மீறுபவர்களுக்கு `செக்’ வைத்த காவல்துறை! – நடைமுறைக்கு வந்தது ’இ–செலான்’

புதுச்சேரியில் அதிகரித்துவரும் வாகன விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக சாலை விதிகளை மீறுபவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கும் ‘ இ-செலான்’ முறை இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கான கையடக்க கருவியை அனைத்து காவல் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ-க்களுக்கு ஐ.ஜி சந்திரன் வழங்கினார். அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சமீபத்தில் தற்கொலை செய்த 3 காவலர்களில் 2 பேர் உடல்நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்துகொண்டனர். அவர்களின் தற்கொலைக்கு மன அழுத்தமோ, வேலை பளுவோ … Read more

பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

டெல்லி: இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை டெல்லியில் பிரதமர் மோடியை  நேரில் சந்தித்தார். அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியை உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளார். தலைநகர் டெல்லிக்கு இரண்டு நாட்கள் பயணமாக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றுள்ளார். அவர்,  தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும் பஞ்சாப் மாநிலத்தின் தற்போதைய ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித்தின் பேத்தியின் திருமண … Read more

புதிய வைரஸ்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளது: உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா தகவல்

ஜெனிவா: புதிய வைரஸ்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நம்முடன்தான் இருக்கும்; தடுப்பு, நோய் எதிர்ப்பு சக்தியால்தான் தடுக்க முடியும். காய்ச்சல் வருவது சாதாரணமானது; எதனால் வருகிறது என பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரில் ஜியோ 5-ஜி சேவை துவக்கம்| Jio 5-G service launch in Jammu and Kashmir

ஸ்ரீநகர்: ஜம்மு -காஷ்மீரில் 5 ஜி சேவையை துணை நிலை கவர்னர் இன்று துவக்கி வைத்தார். இந்தியாவில் 5ஜி சேவை கடந்தாண்டு அக்டோபரில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.பல்வேறு பெருநகரங்களில் 5-ஜி சேவையை ஜியோ, ஏர்டெல் அகிய தொலை தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றனர்.இந்நிலையில் இன்று ஜம்மு-காஷ்மீரில் ஜியோ 5ஜிசேவையை துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா கவர்னர் மாளிகையில் துவக்கி வைத்தார். இதன் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு பல்வேறு பயன்பாட்டிற்கு அதிவிரைவு இணைய சேவை கிடைக்கும் என … Read more