பள்ளிக்கு செல்வதை தடுக்க பெண் குழந்தைகளுக்கு விஷம்; இரானில் அடுத்தடுத்து தொடரும் அவலங்கள்!

இரானில், பள்ளி செல்லும் பெண் குழந்தைகளின் கல்வியை தடுக்கும் நோக்கில் அவர்களுக்கு விஷம் கொடுக்கப்படுவதாக, அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. இரானில் உள்ள புகழ்பெற்ற கோம் நகரில், கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களின் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லையென்றாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களுக்கு சுவாசத்தை முடக்கும் விஷம் கொடுக்கப்பட்டிருந்தது. இரான் போராட்டம் கோம் நகரில் மட்டுமல்லாமல் இரானின் மற்ற நகரங்களிலும் … Read more

மாநில கேபினட் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும்! பஞ்சாப் மாநில வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து…

டெல்லி: மாநில அமைச்சர்கள் கவுன்சிலின் உதவி மற்றும் ஆலோசனைகளுக்கு அவர் கட்டுப்பட்டதால், பட்ஜெட் அமர்வைக் கூட்டலாமா என்பது குறித்து ஆளுநரால் சட்ட ஆலோசனையைப் பெற முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. மாநில ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு உட்பட்டவர் என  மீண்டும் தெளிவு படுதிதி உள்ளது. இந்த விவகாரத்தில் மாநில ஆளுநர் மற்றும் முதல்வரின் நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சனம் செய்தது. மார்ச் 3ஆம் தேதி காலை 10மணிக்கு மாநில சட்டமன்றத்தின் பட்ஜெட் அமர்வை பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் … Read more

திருச்சி லால்குடி அடுத்த அன்பில் என்ற பகுதியில் 144 தடை

திருச்சி: லால்குடி அடுத்த அன்பில் என்ற பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். ஆசிரமவள்ளி அம்மன் கோயில் விழா தொடர்பான இரு தரப்பு பிரச்சனையால் போராட்டம் நடக்க உள்ளதாக தகவல் வெளியானது. போராட்டம் நடக்க உள்ளதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு கருதி கோட்டாட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

அரசு மருத்துவமனைக்குள் புகுந்து பச்சிளம் குழந்தையை தூக்கி சென்ற தெரு நாய்: ராஜஸ்தானில் அதிர்ச்சி | Stray Dog Kills Infant Sleeping Next To Mother In Rajasthan Hospital

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், அரசு மருத்துவமனையில் தாய் அருகில் தூங்கி கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை தெருநாய் தூக்கி சென்று கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தை சேர்ந்த மகேந்திர மீனா என்பவர் உடல்நலக்குறைவால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது மனைவி ரேகா மற்றும் பிறந்த ஒரு மாதமேயான பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 3 குழந்தைகள் உடன் தங்கியிருந்தனர். ரேகா, கணவரை கவனித்து … Read more

அடிக்கடி விபத்து; வேகத்தடைகளுக்கு பெயின்ட் அடித்து சமூக சேவகியான பெண் மருத்துவர்!

கூடுவாஞ்சேரி அருகே, நெடுஞ்சாலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன விபத்துகள் ஏற்பட்டு வந்ததை அடுத்து, அவற்றின் மீது வெள்ளை பெயின்ட் அடித்த பெண் மருத்துவரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். சாலை விபத்து தாயை இழந்த குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டும் மருத்துவரின் மனைவி; வேலூர் நெகிழ்ச்சி! சென்னை அருகேயுள்ள பெருங்களத்தூர், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோரின் நுழைவாயிலாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இப்பகுதியில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் இருந்து, நெடுங்குன்றம், ஆலப்பாக்கம் வழியாக … Read more

மாதம் ஒரு முறை நீர் விரதம் இருப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

நீர் விரதம் என்பது உணவு உட்க்கொள்ளாமல் தண்ணீர் மற்றும் குடித்து இருப்பது ஆகும். இதனை 24 மணி முதல் 72 மணி நேரம் வரை செய்யலாம். புதிதாக செய்பவர்கள் 24 மணி நேரம் வரை இருக்கலாம். இதை 21 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை செய்யலாம். நீர் விரதம் மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மை இரத்ததை சீராக வைத்திருக்க உதவுகின்றது. உடல் சுத்தமாகும் எடை குறையும் இரத்த அழுத்தம் குறையும். இதய ஆரோக்கியம் அடையும். … Read more

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள் மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ராஜினாமா!

டெல்லி: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள்  மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ராஜினாமா செய்துள்ளதாக மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஹவாலா பணப்பரிமாற்றம் வழக்கில் கடந்த ஆண்டு (2022) டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஹவாலா பரிமாற்றம் தொடர்பான  வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர்  சிறையில் அடைக்கப்பட்டிருந்தும், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாமல் சிறையில் சொகுசு வாழ்க்கை நடத்தி வந்தார். கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக அவர் தனது  … Read more

100 நாள் திட்டப்பணியில் முறைகேடு புகார் தொடர்பாக ராமநாதபுரம் ஆட்சியர் விசாரிக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: 100 நாள் திட்டப்பணியில் முறைகேடு புகார் தொடர்பாக ராமநாதபுரம் ஆட்சியர் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. ராமநாதபுரம் ஆட்சியர் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. போகலூர் ஒன்றியத்தின் திட்ட மேம்பட்டு அலுவலர் ஆவணங்களுடன் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

“ரூ.1,000 கொடுத்தும் அரவக்குறிச்சியில் புறக்கணிக்கப்பட்டவர்!" – அண்ணாமலை குறித்து செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், `அண்ணாமலை ஒரு கன்னத்தில் அறைந்தால்… மறுகன்னத்தை காட்ட இயேசு நாதர் இல்லை. திருப்பி அடிப்போம்’ எனச் சொல்லியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். செந்தில் பாலாஜி கோவை: 44 எழுத்தாளர்கள்; 31அமர்வுகள்; களைகட்டிய சிறுவாணி இலக்கியத் திருவிழா! அதற்குப் பதிலளித்த செந்தில் பாலாஜி, ”இவ்வளவு வீரவசனம் பேசறீங்களே. தமிழக பா.ஜ.க-வின் உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு என்று நீங்கள் (பத்திரிகையாளர்கள்) கேட்க வேண்டும். பில் கேட்டேன். … Read more

கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை முழுமையாக திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: மாணவி மரணம் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை மற்றும்  கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை முழுமையாக திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதி கனியாமூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி கடந்த மாதம் பள்ளியில் மரணமடைந்தார். இந்த விவகாரத்தில் சமூக விரோதிகள் பள்ளிக்கு தீ வைத்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தியதுடன்,  பல கோடி மதிப்புள்ள வாகனங்களையும் தீ … Read more