பணியில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை விட ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை அதிகம் : மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

பணியில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை விட ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக மத்திய பணியாளர் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். 50 – 60 லட்சம் பேர் தற்போது அரசுப் பணியில் சேவை செய்து வரும் நிலையில் ஓய்வூதியம் பெறுபவர்கள் எண்ணிக்கை 77 லட்சமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார். ஓய்வூதியம் பெறுவோரில் சுமார் 6,000 -7,000 பேர் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் பழைய ஓய்வூதிய சட்டப்படி அவர்கள் பெற்ற சம்பளத்திற்கு இணையான … Read more

பொருளாதார வளர்ச்சியில் உலக நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தில் இருக்கிறது: குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் உரை

சென்னை: உலக அரங்கில் ஒளிரும் நட்சத்திரமாக இந்தியா திகழ்கிறது என்று ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடியில் புத்தாக்க வசதி மையத்தை திறந்து வைத்து குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் உரையாற்றினார். பொருளாதார வளர்ச்சியில் உலக நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தில் இருக்கிறது. 2014க்கு பிறகு நாடு வளர்ச்சியை நோக்கி செல்கிறது எனவும் ஜெகதீப் தன்கர் கூறினார்.

கொலை முயற்சி குற்றச்சாட்டு: சரிதா நாயர் ரத்த மாதிரிகள் டெல்லிக்கு அனுப்பி வைப்பு

திருவனந்தபுரம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் பெண் தொழில் அதிபர் சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சரிதா நாயர், அப்போதைய முதல் மந்திரி உம்மன்சாண்டி உள்பட பலர் மீதும் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பின்பு ஜாமீனில் விடுதலையான சரிதா நாயர் அவ்வப்போது கேரள அரசியல் பிரமுகர்கள் … Read more

“இது நாங்கள் பார்த்த ஆஸ்திரேலியா இல்லை"- விமர்சனம் செய்த ஹர்பஜன் சிங்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில் அந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை தக்க வைத்திருக்கிறது. இதனிடையே ஆஸ்திரேலிய அணியுடனான 3 வது டெஸ்ட்  நாளை (மார்ச் 1ம் தேதி) இந்தூரில் தொடங்க உள்ளது. பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி மனதளவில் … Read more

மர்மமான முறையில் மாயமான இளைஞர்: மீனவர் ஒருவர் பிடித்த சுறா வயிற்றில் கண்ட அதிரவைத்த காட்சி…

அர்ஜெண்டினாவில், மர்மமான முறையில் மாயமான ஒருவரின் உடல் பாகங்கள், சுறா ஒன்றின் வயிற்றுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கடற்கரைக்கு சென்ற கணவன் மாயம் Virginia Brugger என்னும் பெண், இம்மாதம் 18ஆம் திகதி, கடற்கரைக்குச் சென்ற தன் கணவரான Diego Alejandro Barria (35)ஐக் காணாததால் பொலிசாரிடம் புகாரளித்துள்ளார். பொலிசார் Diegoவின் நான்கு சக்கர வாகனத்தையும் ஹெல்மெட்டையும் கடற்கரை ஒன்றில் இரண்டு நாட்களுக்குப் பின் கண்டுபிடித்துள்ளனர். எட்டு நாட்களாகியும் கணவனைக் காணாமல் Virginia கவலையடைந்திருந்த நேரத்தில் … Read more

டி20 போட்டியில் 10 ரன்களுக்கு ஆலவுட் குறைந்த ரன்கள் எடுத்து சாதனை படைத்த அணி…

டி20 போட்டியில் 8.4 ஓவரில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆலவுட் ஆன ஐஸல் ஆப் மேன் அணி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. ஸ்பெயின் அணிக்கு எதிராக விளையாடிய ஐஸல் ஆப் மேன் அணி முதலில் விளையாடி 8.4 ஓவரில் ஆலவுட் ஆனது. இதனையடுத்து 11 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஸ்பெயின் 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் குறைந்த ரன் இலக்கை சேஸ் செய்து வெற்றி பெற்ற அணியாக ஸ்பெயின் … Read more

எல்லா வரியையும் ஒன்றிய அரசு பெற்று பின்னர் அதை பகிர்ந்து அளிப்பது முறையில்லை: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாடல்

சென்னை: எல்லா வரியையும் ஒன்றிய அரசு பெற்று பின்னர் அதை பகிர்ந்து அளிப்பது முறையில்லை என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி செயல்பாட்டை ஒன்றிய அரசு இன்னும் சிறப்பாக முன்னெடுக்கலாம். மகளிர் உரிமை தொகை தொடர்பாக முதல்வர் என்ன சொன்னாரோ அது நடக்கும் என பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

எங்கிருக்கிறாய் மதுமதி? – 70ஸ் பெண்ணின் நட்பதிகாரம் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் அப்பாவுக்கு மத்திய அரசு உத்தியோகம் என்பதால் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு ஊரில் என் படிப்பு. 1981 ஆம் வருடம் அப்பாவுக்கு “எடப்பாடி”க்கு மாற்றலாகியது. எடப்பாடி பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் என்னை சேர்க்க அப்பா அழைத்துச் சென்றார். அப்பொழுதுதான் முதன்முதலாக அவளைப் பார்த்தேன். நின்று, … Read more

வாணியம்பாடி: தறிக்கெட்டு ஓடி மோதிய கார் – பள்ளி மாணவர்கள் 3 பேர் பலியான பரிதாபம்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகிலிருக்கும் வளையாம்பட்டு எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த 13 வயதே ஆன ரஃபீக், விஜய், சூர்யா ஆகிய மூன்று மாணவர்களும், அருகிலிருக்கும் கிரிசமுத்திரம் அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்புப் படித்து வருகிறார்கள். இன்று காலை வழக்கம்போல், சைக்கிளில் மூன்று பேரும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, வேலூரில் இருந்து சுற்றுலா தலமான ஏலகிரி மலைக்கு அதிவேகமாகச் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடியது. சாலையின் நடுவே இருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு, எதிரே … Read more

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,555 கோடி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு

சென்னை:  அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,555 கோடி ஒதுக்கீடு செய்து, நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கருணாநிதியின் கனவுத்திட்டமான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி கிராம திட்டம் மீண்டும் செயல்பாட்டிற்கு வருகிறது. அதற்காக ரூ.1,555 கோடி மதிப்பில்  நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2022 – 23ம் ஆண்டில் 2,544 கிராமங்களில் மேம்பாட்டு திட்டப் பணிகள் நடைபெற உள்ளன.  அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்த தலைமைச் செயலாளர் தலைமையில் … Read more