கேரளாவிற்கு அதிகளவில் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற 5 லாரிகளுக்கு அபராதம் விதிப்பு

கன்னியாகுமரி: தக்கலை வழியாக கேரளாவிற்கு அதிகளவில் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற 5 லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக கனிம வளங்களை ஏற்றிச் சென்ற லாரிகளுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் நாய்க் கண்காட்சி! விஜயகாந்த் மகன் விஜய்பிரபாகரன் வளர்க்கும் நாயும் இடம் பெற்றது!

மெட்ராஸ் கெனல் கிளப், சேலம் கெனல் கிளப் மற்றும் கொடைக்கானல் கெனல் அசோசியேஷன் சார்பில் தேசிய அளவிலான  நாய்கள் கண்காட்சி கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 48 வகைகளை சேர்ந்த 286 நாய்கள் கலந்து கொண்டன. நாய் “கடந்த ஆண்டுவரை அரசு செலவு செய்து பராமரித்த குளத்தைக் காணவில்லை!” – விவசாயி குற்றச்சாட்டு! நாய்களின் உரிமையாளர்கள் தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளை வரிசையாக அழைத்து வந்து பார்வைக்கு வைத்தனர். இவ்வாறு அழைத்து … Read more

ரூ.93.40 கோடி மதிப்பீட்டில் 7 நகரங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: 7 நகராட்சிகளில் ரூ.93.40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  அதன்படி, ஆற்காடு, எடப்பாடி, ராமநாதபுரம், திருவள்ளூர், மேட்டூர், சிதம்பரம் மற்றும் உசிலம்பட்டி ஆகிய 7 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.93.40 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்,  கடந்த ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி நகர்ப்புற  உள்ளாட்சி அமைப்புகளில், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், 24 … Read more

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் சென்னை மாநகராட்சி கூட்டம் தொடங்கியது..!!

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் சென்னை மாநகராட்சி கூட்டம் தொடங்கியது. வழக்கமாக சென்னை மாநகராட்சி கூட்டம் திருக்குறளுடன் தொடங்கும் நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தொடங்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு: முதல் வாக்காளர்கள்(?) ; இரவு வரை நீடித்த வாக்குப்பதிவு – முழு தொகுதி ரவுண்ட்அப்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தொகுதியில் மொத்தமுள்ள 238 வாக்குச்சாவடிகளிலும் காலையில் இருந்தே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். – ஈரோடு சம்பத் நகரில் உள்ள அம்மன் மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, தனது மனைவி பிரசிதாவுடன் காலை 7.15 மணிக்கே வந்து வரிசையில் நின்று வாக்கு செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வாக்குப்பதிவு அமைதியான முறையில் தொடங்கியுள்ளது, 5 … Read more

லண்டன் மக்களை நடுங்கவைத்த சம்பவம்… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று இளைஞர்கள்

கிழக்கு லண்டனின் ரோம்ஃபோர்ட் பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தை அடுத்து மூன்று இளைஞர்கள் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். கத்திக்குத்து தாக்குதல் ரோம்ஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ள Popeyes உணவகத்தில் ஏற்பட்ட கருத்து மோதலே, இறுதியில் கத்திக்குத்து தாக்குதலில் முடிந்துள்ளது. திங்கட்கிழமை, உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 5.30 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. @English38938960 அதிகாரிகள் மற்றும் லண்டன் ஆம்புலன்ஸ் சேவையும் சம்பவயிடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். தாக்குதலில் இலக்கான மூவரும் 15, 16 மற்றும் 17 … Read more

முதுநிலை ‘நீட்’ தேர்வை தள்ளிவைக்க கோரிய மனு தள்ளுபடி! உச்சநீதிமன்றம்

டெல்லி: நீட் பிஜி 2023 தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நுழைவுத் தேர்வு அசல் அட்டவணை யின்படி நடத்தப்படும் என கூறியுள்ளது. அதாவது மார்ச் 5. “முதல் சாளரத்தில், கிட்டத்தட்ட இரண்டு லட்சத்து மூவாயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். இன்டர்ன்ஷிப் காலக்கெடு நீட்டிக்கப்பட்ட பிறகு ஆறாயிரம் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்தனர். முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ முதுநிலை தேர்வு வருகிற மார்ச் 5-ந் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், … Read more

நாகர்கோவில் அருகே வலம்புரி விளையில் உள்ள மாநகராட்சி உரங்கிடங்கில் தீ விபத்து

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே வலம்புரி விளையில் உள்ள மாநகராட்சி உரங்கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உரக்கிடங்கில் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் முயற்சித்து வருகின்றனர்.

Doctor Vikatan: காலை சிற்றுண்டிக்கு ஏற்றவையா திரவ உணவுகள்?

Doctor Vikatan: தினமும் காலை உணவுக்கு சத்துமாவுக் கஞ்சியோ, கோதுமை ரவைக் கஞ்சியோ குடிக்கலாமா? தின உணவுதான் சாப்பிட வேண்டும் என ஏதேனும் விதி உள்ளதா? -asw, விகடன் இணையத்திலிருந்து… பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன் ஸ்ரீமதி வெங்கட்ராமன் இதற்கு பதில் தெரிந்துகொள்ள முதலில் நீங்கள் உடலைப் புரிந்து கொள்ள வேண்டும். சிலர் காலையில் திட உணவு சாப்பிட்டால், ரொம்பவும் ஹெவியாக உணர்வார்கள். பல மணி நேரத்துக்கு … Read more