ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டத்தில் மீண்டும் இணையும் பிரித்தானியா! புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் குறித்து பேசிய ரிஷி சுனக்

புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் 84 பில்லியன் பவுண்டுகள் ஹரிசொன் ஐரோப்பா திட்டத்தில் பிரித்தானியா மீண்டும் இணைய உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் உரை ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடன் பேசிய ரிஷி சுனக், பின்னர் எம்.பிக்கள் இடம் அறிக்கை அளித்ததால் அரசாங்கம் தற்போது கட்டுப்பாட்டை திரும்பப் பெற்றுள்ளது என்று கூறினார். இதுகுறித்து உர்சுலா வான் டெர் கூறுகையில், ‘ஆராய்ச்சி மற்றும் அறிவியலில் பணிபுரியும் அனைவருக்கும் … Read more

அமெரிக்க செயலர் உக்ரைனுக்கு ரகசியம் பயணம்! ஜெலென்ஸ்கியுடன் திடீர் சந்திப்பு

உக்ரைனுக்கு ரகசிய பயணம் மேற்கொண்ட அமெரிக்க கருவூல செயலர் ஜேனட் யெல்லன், ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்தார். உக்ரைனுக்கு பொருளாதார உதவி ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் பொருளாதாரத்தில் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. அந்நாட்டின் பொருளாதாரத்தை ஆதரிக்க, இந்த ஆண்டு 40 பில்லியன் டொலரில் இருந்து 57 பில்லியன் டொலர் வெளிப்புற நிதி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்யாவை எதிர்த்து போராட உக்ரைனுக்கு 1.25 பில்லியன் டொலர்களை வழங்குவதாக, கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் … Read more

ராணுவத்தினருக்கு பென்ஷன் நிலுவை உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்| Supreme Court strongly condemns pension arrears for soldiers

புதுடில்லி : ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவைத் தொகை தொடர்பான வழக்கில், ராணுவ அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ், ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. முன்னாள் படை வீரர்கள் நலச்சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2022ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி வழங்கிய தீர்ப்பில், … Read more

முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்: ஆஸ்திரிய இளவரசரின் தேனிலவுப் பயணம் தொடங்கி வைத்த அரசியல் ஆட்டங்கள்!

நான்கு பிரபல சாம்ராஜ்ஜியங்களை அழித்தது. அமெரிக்காவைப் பெரும் சக்தியாக உருவெடுக்க வைத்தது. ஐரோப்பாவின் வரைபடத்தை நிரந்தரமாக மாற்றியமைத்தது. போரில் தொழில்நுட்பத்தின் பங்கு மிக அபாயகரமானது என்பதை உணர வைத்தது. முதலாம் உலகப் போர்! இதில் எதிரிகள் திட்டமிட்டு இரு அணிகளாகப் பிரிந்து போர்க்களத்தில் சந்திக்கவில்லை. ‘எங்கோ ஒரு பட்டாம்பூச்சி சிறகை அடித்தால் அதன் விளைவு உலகின் வேறிடத்தில் புயல் உருவாகக் காரணமாகலாம்’ எனப்படு​ம் பட்டாம்பூச்சி விளைவு போல எங்கோ தொடங்கிய ஒரு நிகழ்வு ஒட்டுமொத்தமாக உலகின் பல … Read more

கொலை, கடத்தல், வன்முறையால் மோசமாகும் ஹைதி! நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க ட்ரூடோ எடுத்த முடிவு

ஹைதியில் நிலவும் நெருக்கடி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஜமைக்கா பிரதமருடன் ஜஸ்டின் ட்ரூடோ விவாதித்தார். நெருக்கடியில் ஹைதி கரீபியன் நாடான ஹைதியில் அரசியல் கொந்தளிப்பு, ஊழல், ஆயுதமேந்திய குழுக்கள் கொலை, கற்பழிப்பு, கடத்தல் மற்றும் இடைவிடாத வன்முறை என சட்ட ஒழுங்கு சீரற்றுள்ளது. இதனால் அந்நாடு கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. ஹைதியின் நிலைமையை விவாதிக்க சிறப்பு கரீபியன் சமூக பணிக்குழு ஒன்று கூடுகிறது. இதில் ஜமைக்கா உட்பட பஹாமாஸ், டிரினிடாட், டொபாகோ மற்றும் CARICOM செயலகத்தின் … Read more

28.02.23 | Daily Horoscope | Today Rasi Palan | February – 28 | செவ்வாய்க்கிழமை | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

உக்ரைனில் தனது அணு ஆயுதத்தை ரஷ்யா நிலைநிறுத்தினால்? பகீர் கிளப்பும் சிஐஏ இயக்குநர்

ரஷ்யா தனது அணு ஆயுதத்தை உக்ரைனில் நிலைநிறுத்தினால் அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும் என சி.ஐ.ஏ இயக்குநர் எச்சரித்துள்ளார். சி.ஐ.ஏ இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் உக்ரைன் – ரஷ்யா போர் ஓர் ஆண்டை கடந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சி.ஐ.ஏ இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் இந்த போர் குறித்து நேர்காணலில் பேசியுள்ளார். புடின் குறித்து கருத்து தெரிவித்த பர்ன்ஸ், உக்ரைனை அடிபணிய வைக்கும் ராணுவத்தின் திறனில் விளாடிமிர் புடின் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார் என கூறியுள்ளார். … Read more

சென்னை: திருநங்கை கொலை வழக்கு; லாரி டிரைவரைக் கைதுசெய்த போலீஸ்! – என்ன நடந்தது?

சென்னை, மாதவரம் அருகிலுள்ள மாத்தூர் 200 அடி சாலையில் ஒரு தனியார் பெட்ரோல் பங்க் செயல்பட்டுவருகிறது. அந்தப் பகுதியில் பலரும் சரக்கு எடுத்துவரும் கனரக வாகனங்களை நிறுத்துவது வழக்கம். அப்படி, கடந்த 22-ம் தேதி மணலி பகுதியைச் சேர்ந்த ஒரு லாரி ஓட்டுநர், அந்தப் பகுதியில் நிறுத்திவைத்திருந்த லாரியை எடுக்கச் சென்றிருக்கிறார். அப்போது, லாரியின் அருகே ஒரு திருநங்கை கைகள் கட்டப்பட்ட நிலையில் முகத்தில் ரத்தக் காயங்களுடன் உயிரிழந்து சடலமாகக் கிடந்திருக்கிறார். சனா இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த … Read more

பிறந்தநாளில் கோல் அடித்த இளம் வீரர்! முதலிடத்தைப் பிடித்த அணி

நேற்று நடந்த பண்டஸ்லிகா தொடர் போட்டியில் பாயர்ன் முனிச் அணி அணி 3-0 என்ற கோல் கணக்கில் யூனியன் பெர்லின் அணியை வீழ்த்தியது. பாயர்ன் முனிச் ஆதிக்கம் அல்லியன்ஸ் அரேனா மைதானத்தில் நடந்த போட்டியில் பாயர்ன் முனிச் மற்றும் யூனியன் பெர்லின் அணிகள் மோதின. தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய பாயர்ன் முனிச் அணியில், ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் எரிக் மாக்ஸிம் கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து அந்த அணியின் கிங்ஸ்லி கோமன் 40வது நிமிடத்தில் கோல் … Read more

சென்னை போரூர் அருகே அய்யப்பன்தாங்கலில் கஞ்சா விற்ற 3 கல்லூரி மாணவர்கள் கைது

சென்னை: சென்னை போரூர் அருகே அய்யப்பன்தாங்கலில் கஞ்சா விற்ற 3 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வரும் கவுதம் (20), அஜ்ஜி (20), ஷியாம் (20) ஆகியோரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.