நாகாலாந்து, மேகாலயாவில் மதியம் 1மணி வாக்குப்பதிவு நிலவரம்…

டெல்லி: 60 தொகுதிகளைக்கொண்ட நாகலாந்து, மேகலாயா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 11மணி வரை மேகாலயாவில் காலை 11 மணி வரை 44,73% வாக்குப்பதிவு; நாகாலாந்தில் 57,06% வாக்குகளும் பதிவாகி உள்ளன. வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து மற்றும் மேகாலயா சட்டப்பேரவை தேர்தல்  வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.  இரு மாநிலங்களிலும், வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இரு மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை முதலே வாக்காளர்கள் தங்களது … Read more

கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை 10 ஆண்டு சிறை தண்டனையாக குறைப்பு

மதுரை: கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் பிறப்பித்த ஆயுள் தண்டனையை 10 ஆண்டு சிறை தண்டனையாக குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூர் சின்னகாளை பகுதியில் 2017 அக்.9-ல் பொன்னம்பலம் என்பவரை கொலை செய்த வழகில் ரங்கநாதன் என்பவர் கைது செய்யப்பட்டார். கொலை வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரங்கநாதன் மேல்முறையீடு செய்தார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு| So far only Rs 12.35 crore has been allocated to Madurai AIIMS Hospital

புதுடில்லி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து, தோப்பூரில் 224 ஏக்கரில் இடம் ஒதுக்கப்பட்டு, கடந்த 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுமான பணிக்கு நிதியை ஜப்பானை சேர்ந்த ஜைக்கா நிறுவனம் ஒதுக்கியுள்ளது. இதற்காக முதல் கட்டமாக 1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. கட்டுமான பணிகள் தாமதமாகிய நிலையில், இந்த நிதியை அதிகரித்து ரூ.1,977 கோடியாக அறிவித்தது. மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் இதுவரையில் ரூ.12.35 கோடி மட்டுமே … Read more

மேகாலயா, நாகாலாந்து தேர்தல்: வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து புதிய சாதனை படைத்திடுக – பிரதமர் மோடி

புதுடெல்லி, மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். மூத்த வாக்காளர்களும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த நிலையில், மேகாலயா, நாகாலாந்து தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து புதிய சாதனை படைத்திட வேண்டும் என … Read more

சிட்ரோன் eC3 எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

இந்திய சந்தையில் குறைந்த விலையில் ஸ்டைலிஷான சிட்ரோன் eC3 எலெக்ட்ரிக் எஸ்யூவி ₹.11.50 லட்சம் முதல் ₹ 12.43 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது விற்பனையில் உள்ள IC என்ஜின் மாடலின் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் மின்கல மின்சார வாகனமாக மாற்றப்பட்டுள்ளது. டாடா டியாகோ EV, டிகோர் EV மற்றும் வரவிருக்கும் MG ஏர் EV ஆகிய தொடக்கநிலை EV கார்களுக்கு மாற்றாக Citroen eC3 போட்டியாக அமைந்துள்ளது. Citroen eC3 விலை … Read more

“சிசோடியாவை அரசியல் அழுத்தத்தால் கைது செய்திருக்கிறார்கள் சிபிஐ அதிகாரிகள்" – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் மதுபானக்கொள்கையை உருவாக்கி அதை அமல்படுத்தியதில் ஊழல் நடந்திருப்பதாக பா.ஜ.க-வும், சி.பி.ஐ-யும் குற்றம்சாட்டின. ஏற்கெனவே இந்தப் புகார் தொடர்பாக டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் ஜெயின் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இதில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது. மணீஷ் சிசோடியா இது குறித்து விசாரணை நடத்திவந்த சி.பி.ஐ நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி மணீஷ் சிசோசியாவுக்கு சம்மன் அனுப்பியது. இதையடுத்து, நேற்று காலை சி.பி.ஐ அலுவலகத்துக்கு செல்லும்போதே, “நான் 7-8 மாதங்களுக்குச் … Read more

டொனால்டு டிரம்புடன் ஜனாதிபதி போட்டியில் மோதும் தென்னிந்தியர்: யார் இந்த விவேக் ராமசாமி?

இந்தியாவின் கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட 37 வயது விவேக் ராமசாமி, அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான போட்டியில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு போட்டியாக களமிறங்கியுள்ளார். கேரளாவின் பாலக்காடு மாவட்டம் இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான விவேக் ராமசாமி குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவராக அயோவாவில் இருந்து களம் காண்கிறார். கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் வடக்காஞ்சேரி பகுதியை சேர்ந்த ராமசாமி மற்றும் கீதா தம்பதியின் இரு மகன்களில் ஒருவரான விவேக் ராமசாமி சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த … Read more

அதானி விவகாரத்தில் உண்மைகள் வெளிவரும் வரை கேள்விகள் எழுப்புவோம்! ராகுல்காந்தி

ராய்பூர்: அதானி விவகாரத்தில் உண்மைகள் வெளிவரும் வரை கேள்விகள் எழுப்புவோம், ஓய்ந்துவிட மாட்டோம் என்று ராய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  அதானியின் நிறுவனங்கள் நாட்டை காயப்படுத்துகின்றது, நாட்டின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் பறித்துக்கொண்டிருக்கின்றது எனவும் கடுமையாக சாடினார். சத்தீஸ்கர் மாநிலம்  ராய்பூரில் 3 நாட்கள் காங்கிரஸ் கட்சியின் 85வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 2024 சட்டமன்ற தேர்தல் உள்பட பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை – 26ந்தேதி) … Read more

நாளை, நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: நாளை, நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கர்நாடாகாவில் 2வது பெரிய விமான நிலையம்: திறந்து வைத்தார் பிரதமர் மோடி| 2nd largest airport in Karnataka: inaugurated by PM Modi

பெங்களூரு: கர்நாடகாவில் ஷிமோகா மாவட்டம், ஷிகாரிபுராவில் இன்று(பிப்.,27) புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இது கர்நாடகாவில் பெங்களூருவுக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய விமான நிலையம் ஆகும். சிறப்பம்சங்கள்: * ரூ. 384 கோடி செலவில் 775 ஏக்ர் பரப்பளவில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. * இங்கு 3,200 மீட்டர் தூரத்திற்கு ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. * இரவில் விமானங்கள் தரையிறங்கும் வசதி இடம் பெற்றுள்ளது. * இது கர்நாடகாவில், பெங்களூருவுக்கு அடுத்தபடியாக … Read more