59,000 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது சென்செக்ஸ்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 487 புள்ளிகள் சரிந்து 58,976 என்ற புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 147 புள்ளிகள் குறைந்து 17,318 என்ற புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

திருச்சி: திருமணம் மீறிய உறவு; வீட்டை விட்டு வெளியேறிய மனைவி – கணவன் தற்கொலை; போலீஸ் விசாரணை

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மாந்துரை, நெடுஞ்சாலைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (30). கட்டுமான கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி திவ்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகளும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். உள்ளூரில் கட்டட வேலைகளுக்குச் செல்லும் ராஜா, அவ்வப்போது வெளியூருக்கு வேலைக்குச் செல்வதும், சமயங்களில் அங்கேயே சில நாள்கள் தங்கியிருப்பதுமாக இருந்து வந்துள்ளார். திவ்யா திருச்சியில் உள்ள பிரபலமான துணிக்கடைக்கு வேலைக்குச் சென்று வந்துள்ளார். வேலைக்குச் … Read more

திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதில் மாற்றம் கொண்டுவந்த பிரித்தானியா: சிறை தண்டனையும் அறிவிப்பு

பிரித்தானியா மற்றும் வேல்ஸ் பகுதியில் திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதில் இன்று முதல் மாற்றம் கொண்டுவந்துள்ளனர். இன்று முதல் திருமண வயது 18 இதனையடுத்து, இனிமுதல் 16 அல்லது 17 வயதுடையோர் திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதுடன், குறித்த வயதுடையோர் தனியாக வாழ்க்கை நடத்துவதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது பெற்றோரின் சம்மதத்துடன் நடந்தாலும், அது சட்டத்திற்கு புறம்பானதாகும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் வேல்ஸில் இன்று முதல் திருமண வயதை 18 என உயர்த்தியுள்ளனர். இதனால் அப்பாவி … Read more

புதுச்சேரியில் கேபிள் டி.வி.,க்கு கேளிக்கை வரி நிர்ணயம்: உள்ளாட்சித் துறை கோப்புக்கு கவர்னர் ஒப்புதல்| Entertainment Tax Fixing for Cable TV in Puducherry: Governor Approves Local Government File

புதுச்சேரி: புதுச்சேரி கேபிள் டி.வி., ஆபரேட்டர்கள் சந்தாதாரர்களிடம் வசூலிக்கும் மாதாந்திர சந்தாவில் 10 சதவீதம் கேளிக்கை வரியாக நகராட்சிக்கு செலுத்த வேண்டும். மேலும், 2 சதவீத சேவை வரியும், 1 சதவீத கல்வி வரியும் மின் கம்பங்களை கேபிள் டி.வி., ஒயருக்கு பயன்படுத்தினால் ஒரு கி.மீ., 34 ரூபாய் வரியாக செலுத்த வேண்டும். இவற்றை கேபிள் டிவி., ஆபரேட்டர்கள் முறையாக செலுத்தவில்லை. இதில் பல லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வேறுவழியின்றி கேளிக்கை … Read more

​திண்டுக்கல்​: விடுதி மாடியிலிருந்து கீழே குதித்த நர்சிங் மாணவி ​உயிரிழப்பு – என்ன நடந்தது?

​திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கேதையுறும்பு பழையபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன்​.​ இவர் மகள், திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம் சாலை அருகே தனி​யார் ​​​கல்லூரியில் முதலாம் ஆண்டு நர்சிங் படிப்பை விடுதியில் தங்கிப் படித்து வந்தார்​.​  திண்டுக்கல் அரசு மருத்துவமனை ​இந்த நிலையில், மாணவி கடந்த 21-ம் தேதி விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றதாக, ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் ​அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ​மாணவி அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று … Read more

“20 நாள்கள்தான் டைம்; அதற்குள் நிறுத்தவில்லை என்றால்..!" – தமிழக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியில், கனிம வளக் கொள்ளையைக் கண்டித்து, பா.ஜ.க சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “சூரியன் அஸ்தமனம் ஆகிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் துருக்கி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம், கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இங்கு நிலநடுக்கம் வராது என்று இல்லை… எங்கு வேண்டுமானாலும் வரலாம். கடந்த 70 ஆண்டுகளில், இந்தப் பகுதிகளிலுள்ள குவாரிகளில், 75 அடி வரை தோண்டப்பட்டிருக்கிறது. தி.மு.க ஆட்சி … Read more

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது…

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு ஈரோடு தொகுதியில் இன்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாக நேற்று மாலையே வாங்குப்பதிவுக்கு தேவையான இயந்திரங்கள் உள்பட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இன்று காலை 7மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு  தொடங்கியது. வாக்குப்பதிவு காலை  காலை 7 மணி முதல்  மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, … Read more

Motivation Story: `5 வருடங்களில் பில்லியனர்!' – சாதித்துக்காட்டிய சாமானியன் கிரான்ட் கார்டனின் கதை

`உங்களால் பறக்க முடியவில்லையா… ஓடுங்கள். உங்களால் ஓட முடியவில்லையா… நடந்து போகவும். உங்களால் நடக்க முடியவில்லையா… தவழ்ந்து போகவும். ஆனால், நீங்கள் என்ன செய்தாலும் தொடர்ந்து முன்னேறிப் போய்க்கொண்டேயிருக்க வேண்டும்.’ – மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர். அவர் பரம்பரைப் பணக்காரர் இல்லை. ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் இல்லை. பிரபல விளையாட்டு வீரர் இல்லை. அரசியலில் சாதிப்பது, சினிமாவுக்குக் கதை எழுதுவது, பாடுவது, நடனமாடுவது போன்ற தனித்துவமான திறமை ஒன்றுகூட இல்லை. அவர் ஒரு சாமானியன். ஒருகட்டத்தில் சாதித்தே … Read more

'இடது சிறுநீரகம் விற்பனைக்கு உள்ளது' பெங்களூரு இளைஞரின் போஸ்டர் வைரல்!

வாடகை வீட்டின் உரிமையாளர் கேட்கும் வைப்புத்தொகையை செலுத்த பணம் தேவைப்படுவதால், தனது இடது சிறுநீரகம் விற்பனைக்கு உள்ளதாக பெங்களூரூவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒட்டிய போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. அதிகப்படியான டெபாசிட் தொகை பெங்களூரில் வாடகைக்கு ஒரு வீட்டைப் பெறுவதற்கான அதிகப்படியான டெபாசிட் தொகை கேட்கப்படுவது இணையத்தில் பரபரப்பான தலைப்பாக மாறியது. பல சந்தை ஆய்வுகளின்படி, பெங்களூரு வீட்டு உரிமையாளர்கள் வாடகைக்கு குடியிருக்க வருபவர்களிடமிருந்து அதிக வாடகை மற்றும் டெபாசிட் பணத்தை கோருகின்றனர். தற்போது இந்த … Read more

மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டமன்ற தேர்தல்: இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு தொடங்கியது…

ஷில்லாங்: மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.   பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறும் இரு மாநிலங்களிலும் பாஜக 80 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இதில் 75 பேர் கிறிஸ்தவர்கள். காங்கிரஸும் வழக்கம் போல இதே பார்முலாவைத்தான் கடைபிடித்து களத்தில் உள்ளது. இரு மாநிலங்களிலும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு … Read more