`நம்ம படத்துல நீங்க தான் பாடுறீங்கன்னு சொன்னாங்க… ஆனா!' – இன்ஸ்டாகிராம் வைரல் அம்மா – மகன்

`இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் திறந்தாலே கொண்டாட்டமும் குதூகலமும் தான்… அன்றாட வாழ்க்கையில் ரீல்ஸ் பார்க்காமல் அன்றைய நாள் நிறைவடையாது என்றுதான் சொல்லுமளவுக்கு ரீல்ஸ்கள் பெருகிவிட்டன. சனாதன் ஶ்ரீ கிருஷ்ணாவும், அவரின் அம்மா வசந்தாவும் `அம்மாவும் நானும்’ என்கிற கான்செப்டில் சினிமா பாடல்களைப் பாடி பல மில்லியன் இதயங்களை கொள்ளை கொண்டிருக்கிறார்கள். இருவரையும் சந்தித்துப் பேசினோம். வசந்தா அம்மாவின் குடும்பம் பாட்டுடன் தொடர்புடையது என்பதை வரவேற்பு அறையை அலங்கரித்தப் புகைப்படங்கள் விளக்கின. சனாதன் பேசத் தொடங்கினார். இன்ஸ்டா வைரல் அம்மா – மகன் … Read more

பல நூறாண்டுகால பாரம்பரியத்தை உடைக்கும் மன்னர் சார்லஸ்., முடிசூட்டு விழாவில் முக்கிய மாற்றம்

மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது முடிசூட்டு விழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத்தை உடைக்கவுள்ளார். பாரம்பரிய அரச உடை பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா ஆகியோரின் முடிசூட்டு விழா மே 6-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில், பல முற்றாண்டுகளாக மன்னர்கள் பதவியேற்கும்போது பாரம்பரிய அரச உடையை அணியும் பழக்கத்தை மன்னர் சார்லஸ் உடைக்கவுள்ளதாக, தி இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது. முந்தைய முடிசூட்டு விழாக்களில், மன்னர் பாரம்பரியமாக பட்டு காலுறைகள் மற்றும் … Read more

குடியரசு நாளை முன்னிட்டு எல்லையில் முன்னெச்சரிக்கை கண்காணிப்பு: இந்திய ராணுவ படை

டெல்லி: குடியரசு நாளை முன்னிட்டு இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் முன்னெச்சரிக்கை கண்காணிப்பில் இந்திய ராணுவம் படை ஈடுபட்டுள்ளது. ஜன.21-ல் தொடங்கிய தீவிர கண்காணிப்பு, ரோந்துப்பணி ஜன. .28 வரை தொடரும் என்று எல்லையில் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

கும்பகோணம்: மசாஜ் சென்டர் போர்வையில் பாலியல் தொழில்! – பெண்கள் உட்பட மூவர் கைது

கும்பகோணம் அருகே இரண்டு இடங்களில் மசாஜ் சென்டர் நடத்துவதாகக் கூறி வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் பாலியல் தொழில் நடந்து வந்திருக்கிறது. இது தொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். பிரசித்தி பெற்ற கோயிலுக்கு அருகிலேயே மசாஜ் சென்டர் போர்வையில் பாலியல் தொழில் நடந்து வந்தது தெரிந்து பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். விசாரணையில் போலீஸ் டீம் கும்பகோணம், திருவிடைமருதுார் பகுதிகளில் பாலியல் தொழில் அதிக அளவில் நடப்பதாக தொடர்ந்து போலீஸாருக்கு புகார் வந்திருக்கிறது. குறிப்பாக … Read more

அப்பாவை பார்த்ததும் ஆடுகளத்தில் ஓடிவந்த குழந்தை! இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு பேசிய வீரர்..நெகிழ்ச்சி வீடியோ

பிக்பாஷ் லீக் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி வீரர் டேன் கிறிஸ்டியன், தனது குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு வெற்றி குறித்து பேசிய நிகழ்வு ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. டேன் கிறிஸ்டியன் சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் ஆல்ரவுண்டர் வீரரான டேன் கிறிஸ்டியன் விளையாடி வருகிறார். நேற்று நடந்த போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சிட்னி தண்டர்ஸ் அணியை வீழ்த்தியது. தந்தையிடம் ஓடிவந்த குழந்தை போட்டிக்கு பின்னர் டேன் கிறிஸ்டியனனை நோக்கி அவரது குழந்தை ஆடுகளத்தில் … Read more

இன்றுடன் நிறைவு பெறுகிறது சென்னை புத்தக கண்காட்சி

சென்னை: சென்னையில் நடைபெற்று வந்த புத்தக கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவடைகிறது. சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளா சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த புத்தக கண்காட்சி கடந்த ஜனவரி 06ம் தேதி தொடங்கியது. இந்த புத்தக கண்காட்சியில் மொத்தம் 1000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 17 நாள்கள் நடந்த புத்தகக் காட்சிக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்திருந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர். புத்தக காட்சி … Read more

யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

நீலகிரி: கூடலூர் அருகே விறகு சேகரிக்க சென்றபோது யானை தாக்கியதில் சிவனாண்டி என்பவர் உயிர் இழந்துள்ளார். யானைகள் தாக்குதல் தொடர்பாக வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.

பிரிட்டன் நாடாளுமன்ற உள்ளரங்கில் தமிழ் மரபுத் தைப்பொங்கல் விழா!

தமிழர் பேரவை சார்பில் பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மரபுத் திங்கள் மற்றும் தைப்பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். பிரிட்டன் தமிழர் பேரவை, ஹரோ மாநகரப் பேரவையுடன் இணைந்து 2011-ம் ஆண்டு தைப் பொங்கல் விழாவை நடத்தியதைத் தொடர்ந்து, ஒவ்வோர் ஆண்டும் தைப் பொங்கல் விழா நடத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பிரிட்டன் தமிழர் பேரவை சார்பில் பிரிட்டன் நாடாளுமன்ற உள்ளரங்கத்தில் ஜனவரி 17-ம் தேதி தமிழ் மரபுத் திங்கள் மற்றும் … Read more

UFC குத்துச் சண்டை சாம்பியனுடன் மோத சென்ற ரொனால்டோ! பின்னர் செய்த செயல்..வைரலாகும் வீடியோ

UFC சாம்பியன் பிரான்சிஸ் நாஹன்னோவை சந்தித்த ரொனால்டோ, அவருடன் சண்டையிடுவதுபோல் சென்று கட்டிப்பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. UFC சாம்பியனுடன் ரொனால்டோ சவுதி அரேபியாவின் அல் நஸர் அணியில் ஒப்பந்தமாகியுள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ, இன்று நடக்கும் எட்டிபாக் அணிக்கு எதிரான போட்டியில் முதல் முறையாக களமிறங்க உள்ளார். முன்னதாக, ரொனால்டோ UFC மார்ஷியல் ஆர்ட்ஸ் சாம்பியான பிரான்ஸிஸ் நாஹன்னோவை சந்தித்தார். இருவரும் மோதிக் கொள்வது போல் சென்று சண்டைக்கு தயாராகினர். உடனே ரொனால்டோ சிரித்தபடி அவரை கட்டியணைத்தார். … Read more