குற்றப்பத்திரிகை பொது ஆவணம் கிடையாது| Criminal report is not a public document

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: குற்றப்பத்திரிகை பொது ஆவணம் அல்ல என கூறியுள்ள உச்ச நீதிமன்றம், அதை பொது தளத்தில் வெளியிட முடியாது என்றும் தெரிவித்துள்ளது. குற்றப்பத்திரிகையை பொதுமக்கள் இலவசமாக அணுக உத்தரவிடும் பொது நல வழக்கு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இறுதி தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: குற்றப்பத்திரிகையை பொது தளத்தில் … Read more

பேனட் மீது மரண பயத்தில் இளைஞர்; 3 கி.மீ-க்கு வேகமாக காரை ஓட்டிய பெண்! – பெங்களூரில் அதிர்ச்சி

கர்நாடக மாநிலம், பெங்களூர் நகரில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு, வாகனம் ஓட்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் முதியவரை ஒரு கிலோ மீட்டருக்கு தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு குறைவதற்குள் இன்று மதியம், பெங்களூர் ஞான பாரதி நகரில், உல்லால் ரோட்டில், கார் பேனட் மீது வாலிபர் ஒருவர் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அலற, காரை நிறுத்தாமல் ஆக்ரோஷமாக மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு, ஒரு பெண் … Read more

காவ்யா மாறனை திருமணம் செய்யும் ஆசையை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க ரசிகர்! வைரல் வீடியோ

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இணை உரிமையாளர் காவ்யா மாறனுக்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ரசிகர் ஒருவர் திருமண முன்மொழிவை செய்துள்ளார். காவ்யா மாறன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இணை உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் இணையத்தில் மிகவும் வைரலான பெண் என்பதை எந்த சந்தேகமும் இல்லை. இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் காவ்யா என்பது புதிய பெயர் அல்ல. ஐபிஎல் போட்டிகளின் போது ஸ்டேடியங்களில் காணப்படுவதைத் தவிர, கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் ஏலத்தின் போது தனது அணியான … Read more

மத்திய பட்ஜெட்டின் சில பகுதிகளை திருட்டுத்தனமாக வெளியிட்ட நிதித்துறை ஊழியர் கைது – தொடர் விசாரணை

டெல்லி: வரும் நிதியாண்டுக்கான பொதுபட்ஜெட் பிப்ரவரி 1ந்தேதி தாக்கல் செய்ய உள்ள நிலையில், பட்ஜெட்டின் முக்கிய தகவல்களை கசியவிட்டதற்காக நிதி அமைச்சக ஊழியரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். நடப்பு ஆண்டுக்கான நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி  தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இரு அவைகளின்  கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து,  பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.  இந்த கூட்டத்தொடர் 2 கட்டங்களாக … Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு ஒத்திவைப்பு

சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு ஒத்திவைக்கப்பட்டது. திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலில் பதிவான சிசிடிவி காட்சிகளை முறையாக ஆய்வு செய்யவில்லை என யுவராஜ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. கோயிலின் அமைப்பு,  சிசிடிவி கேமராக்கள் அமைந்துள்ள இடம் குறித்து ஜனவரி. 22-ல் பார்வையிட நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். 

பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது விசாரணை நடத்த 7 பேர் கொண்ட குழு அமைப்பு| 7-member panel constituted to probe Brijbhushan Charan Singh

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பாலியல் புகாரில் சிக்கிய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது விசாரணை நடத்த 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக உ.பி., லோக்சபா எம்.பி., பிரிஜ் பூஷன் சரண் சிங், கடந்த 2011 முதல் உள்ளார். இவர் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தன. இதையடுத்து ஒட்டுமொத்த இந்தியாவின் முன்னணி மல்யுத்த நட்சத்திரங்கள் பிரிஜ்பூஷன் … Read more

செரெங்கெட்டி தேசியப் பூங்கா: முடிவில்லாச் சமவெளியில் ஒரு முடிவற்ற ஊர்வலம் – 4

அழகின் உறைவிடமான கிரேட்டரை பார்த்துவிட்டு அங்கிருந்த விலங்குகளைப் படம் எடுத்துக்கொண்டு, செரங்கெட்டி தேசிய பூங்காவை நோக்கி நமது பயணம் ஆரம்பமாகிறது. செரெங்கெட்டி தேசியப் பூங்கா “காடுகளின் அரசன்” முடிவில்லாச் சமவெளியில் ஒரு முடிவற்ற ஊர்வலம் ! “செரங்கெட்டி” என்பது மசாய் மொழிப்பெயர், இதற்கு தமிழில் “முடிவில்லாச் சமவெளி” என்று பொருள்.  எவ்வளவு அழகான பொருள் பொதிந்த பெயரை சூட்டி இருக்கிறார்கள் அந்த மசாய் பழங்குடியினர் என்பதை அறிந்த போது வியப்பாக இருந்தது, அவர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் … Read more

2030-க்குள் அடுத்த தலைமுறை விமானங்களை உருவாக்கவுள்ள நாசா

நாசா 2030-க்குள் அடுத்த தலைமுறை விமானங்களை உருவாக்கவுள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, குறைந்த கார்பனை வெளியிடும் அடுத்த தலைமுறை வணிக விமானத்தை உருவாக்க, விமானப் போக்குவரத்து நிறுவனமான போயிங்குடன் கைகோர்த்துள்ளது. “Sustainable Flight Demonstrator” (SFD) எனும் இந்த திட்டத்தில் அடுத்த ஏழு ஆண்டுகளில், NASA 425 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்யவுள்ளது, அதே நேரத்தில் போயிங் மற்றும் அதன் பங்குதாரர்கள் 725 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவழிக்கவுள்ளன. சுற்றுச்சூழலுக்கும், வணிக விமானப் போக்குவரத்துத் … Read more

லடாக் அருகே இந்திய சீன எல்லையில் சீன ராணுவத்தின் தயார் நிலையை ஆய்வு செய்தார் சீன அதிபர் …

சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது ராணுவத்தின் தயார்நிலையை இன்று ஆய்வு செய்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் அருகே இந்திய சீன எல்லையை ஒட்டிய க்ஹுஞ்சரப் கணவாய் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களின் போர் தயார் நிலை குறித்தும் ஆய்வு செய்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீன புத்தாண்டை ஒட்டி ராணுவத்தின் தயார் நிலை குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் அதிபர் ஜி ஜின்பிங் ஆய்வு செய்தார். எல்லைப் பாதுகாப்பு, கடலோரப் பாதுகாப்பு, வான் … Read more

கூகுள் நிறுவனத்திலிருந்து 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக தலைமை செயல்அதிகாரி சுந்தர் பிச்சை தகவல்

கலிபோர்னியா: கூகுள் நிறுவனத்திலிருந்து 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக அதன் தலைமை செயல்அதிகாரி சுந்தர் பிச்சை தகவல் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்புகளை அறிவித்து வரும் நிலையில் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.