சென்னையில் கஞ்சா சாக்லேட் – கோவையில் போதை மாத்திரைகள் – ஊசிகள் நடமாட்டம்! இளைஞர்கள் கைது…

சென்னை: தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் நடமாட்டம் கட்டப்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் கூறி வந்தாலும் சென்னை உள்பட பல மாவட்ங்களில் கஞ்சா உள்பட போதைப்பொருட்கள் நடமாட்டம் பகிரங்கமாகவே நடைபெற்று வருகிறது.  இதை உறுதி செய்யும் வகையில், சென்னையில் உள்ள  பீடா கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்து வந்த  வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதுபோல,  கோவையில் போதை மாத்திரைகள், போதை ஊசிகள் விற்பனை செய்து வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. … Read more

வேங்கைவயல் வழக்கு – அரசு தரப்பில் அறிக்கை தாக்கல்

மதுரை: வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு கோரி வழக்கு பதிவுசெய்யப்ட்டுள்ளது.

Air Taxi சேவை: இனி ஒசூர் – பெங்களூர் விமான நிலையத்துக்கு 20 நிமிடங்களில் பறந்து செல்லலாம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட ஒசூர் மாநகராட்சிப் பகுதிகளில் எண்ணற்றத் தொழிற்சாலைகள் உள்ளன. நாட்டின் `ஐடி ஹப்’ பெங்களூரு என்றால், தமிழகத்தின் `இண்டஸ்ட்ரியல் ஹப்’ ஒசூர் எனலாம். அந்த அளவுக்கு அங்கே தொழிற்சாலைகள் உள்ளன. இந்த நிலையில் ஒசூரில் இருந்து பலரும் பெங்களூர் சென்று, அங்குள்ள கெம்பேகெளவுடா பன்னாட்டு விமான நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், ஒசூரிலிருந்து பெங்களூர் கெம்பேகெளவுடா விமான நிலையம் 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதுடன், 70 கிலோ மீட்டர் தொலைவுக்குள் 32க்கும் மேற்பட்ட சிக்னல்கள் … Read more

சவுதியில் தரையிறங்கிய மெஸ்ஸி! இன்றைய போட்டியில் ரொனால்டோவுடன் மோதல்? உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

சவுதி அரேபியாவில் தரையிறங்கிய பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நட்பு ரீதியான போட்டி இன்று நடக்கும் நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் மற்றும் ரியாத் லெவன் அணிகள் மோதுகின்றன. இதற்காக PSG அணியின் மெஸ்ஸி உள்ளிட்ட வீரர்கள் சவுதியின் ரியாத் நகருக்கு வந்து இறங்கினர். அவர்களுக்கு விமான நிலையத்தில் மாலை அணிவிக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்றைய போட்டியில் அல் நஸர், அல் ஹிலால் அணிகளின் வீரர்கள் ரியாத் … Read more

கர்நாடக மாநிலத்தில் 25வயதில் நீதிபதியான இளம்பெண்! குவியும் வாழ்த்துக்கள்…

பெங்களூரு: பங்கார்பேட்டை காரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண், 25 வயதில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் சிவில்  நீதிபதியாக தேர்வாகி உள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பங்கார்பேட்டை காரஹள்ளி கிராமத்தில் விவசாய கூலித் தொழிலாளியான நாராயணசாமி- – வெங்கடரத்னம்மா தம்பதியின் மகள் காயத்ரி, 25. ஏழ்மையான தலித் குடும்பத்தைச் சேர்ந்த காயத்ரி, அரசு துவக்கப் பள்ளி, பங்கார்பேட்டை மகளிர் அரசு உயர்நிலைப் பள்ளி, கோலார் அரசு மகளிர் கல்லுாரியில் பட்டப் படிப்பு  முடித்துவிட்டு, தங்கவயல் கெங்கல் ஹனுமந்தையா சட்டக் கல்லூரியில் … Read more

வெறுப்புப் பேச்சை தடுக்க சட்டம் இயற்ற ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு விடம் ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்

சென்னை: வெறுப்புப் பேச்சை தடுக்க சட்டம் இயற்ற ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு விடம் ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தினார். வெறுப்புப் பேச்சு என்பது பாகுபாடு, புறக்கணிப்பு, பிரிவிளையை உண்டாக்குவதற்கு அடைக்கலமாக அமைகிறது என்று கூறியுள்ளார்.  

பா.ஜ., எம்.பி. விமானத்தில் அவசர வழிக்கதவை திறக்கவில்லை: அண்ணாமலை| BJP, MP Emergency door not opened on plane: Annamalai

பெங்களூரு: விமானத்தில் அவசர வழிக் கதவை பா.ஜ., எம்.பி. தேஜஸ்வி திறக்கவில்லை என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். பெங்களூரு தெற்குத் தொகுதி எம்.பி., தேஜஸ்வி சூர்யா, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையுடன், டிச., 10ல் ‘இண்டிகோ’ விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்றார். விமானம் புறப்படவிருந்த நிலையில், தேஜஸ்வி சூர்யா அவசரக் கதவை தவறுதலாக திறந்தார். இதையடுத்து, அந்த விமானத்தில் கடும் சோதனை செய்யப்பட்டு, இரண்டு மணி நேர தாமதமாக புறப்பட்டுச் சென்றது. … Read more

அத்திக்கடவு – அவிநாசித் திட்டப்பணிகள்: பிப்ரவரி 15 -ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தின் கீழ் பவானி ஆறு காவிரியுடன் கலக்கும் பகுதியில் அமைந்துள்ள காலிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து ஆண்டுக்கு 1.50 டி.எம்.சி உபரிநீரை நீரேற்று முறையில் பம்பிங் செய்து நிலத்தடியில் பதிக்கப்பட்டுள்ள பென்ஸ்டாக் குழாய்களின் மூலமாக ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 24,468 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் 32 பொதுப்பணித் துறை ஏரிகளும், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள், 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1045 ஏரிகள், குளம், குட்டைகளில் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 500 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் என மாவட்ட ஆட்சியர் தகவல்..

ஈரோடு: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சி போஸ்டர்கள் அகற்றப்பட்டு வருவதுடன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் செய்யும் பணியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார். திருமகன் ஈவேராவின் மறைவால் ஈரோட் கிழக்கு சட்டமன்ற தொகுதி தற்போது காலியாகியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின் படி, காலியிடம் ஏற்பட்ட சட்டமன்ற தொகுதி … Read more

காவல்துறையில் 10% இடஒதுக்கீடு வழக்கும் அரசின் சட்டத்தை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

சென்னை: காவல், அமைச்சு பணியாளர் வாரிசுகளுக்கு 10% இடஒதுக்கீடு வழக்கும் அரசின் சட்டத்தை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். தமிழ்நாடு அரசின் சட்டத்தை உயர்நிதிமன்றம் றது செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.