இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் கொள்ளு பேரன் காங்கிரசில் இருந்து விலகல்

புதுடெல்லி, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி. ராஜகோபாலச்சாரி. இவரது கொள்ளு பேரன் சி.ஆர். கேசவன். பாரம்பரிய காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்த அவர், கட்சியில் இருந்து விலகி உள்ளார். இதுபற்றி அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கடிதம் ஒன்றையும் எழுதி அனுப்பி உள்ளார். அதன்படி, கடந்த 2001-ம் ஆண்டு அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து உள்ளார். அவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள, ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் … Read more

"இனி ஓ.பி.எஸ்ஸின் அரசியல் வாழ்க்கை `ஜீரோ' தான்!" – நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஜெயக்குமார்

அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரத்தில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த அந்தக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து அ.தி.மு.க எடப்பாடி தரப்பு தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “கௌரவர்கள் வெற்றி பெற்றதாக சரித்திரமே இல்லை. பாண்டவர்கள்தான் வெற்றி பெறுவார்கள். அந்த அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பின் மூலம் வெற்றி பெற்றிருக்கிறோம். நாங்கள் … Read more

"பழைய சோறால் தான் என் நீண்ட நாள் உடல் உபாதை சரியானது” ஸ்ரீதர் வேம்புவின் பதிவுக்கு குவியும் பாராட்டு

 தனது காலை உணவாகப் பழைய சோறு மாறிவிட்டதால் தான் என் உடல் ஆரோக்கியம் மீண்டது எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஸ்ரீதர் வேம்புக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளன. காலை உணவாக பழைய சோறு சோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நமது மூதாதையர்களின் அருமருந்தான பழைய சோறு கஞ்சி தான் எனது காலை உணவாக இருக்கிறது என்றும் அதனால் எனக்கிருந்த ஐபிஎம் என்ற உடல் உபாதை சரியானது என்று … Read more

ஓபிஎஸ் அரசியல் எதிர்காலம் ஜீரோ! ஜெயக்குமார் மரண கலாய்…

சென்னை: ஓபிஎஸ் அரசியல் எதிர்காலம் ஜீரோ என எடப்பாடி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்து உள்ளார். அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில்,  மாநிலம் முழுவதும் எடப்பாடி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையில்  உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திலும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், , … Read more

ஈபிஎஸ்சின் வலுவான ஆளுமைக்கு கிடைத்த சான்று: திருமாவளவன் ட்வீட்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்கு சான்றாக உள்ளதாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பு மீண்டும் பாஜகவை சுமக்க பயன்படும் என்றால் இங்கு யாவும் பாழே என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் அமளி; ஆம் ஆத்மி, பா.ஜ.க. பெண் கவுன்சிலர்கள் கடும் மோதல்

புதுடெல்லி, டெல்லி மாநகராட்சிக்கு கடந்த டிசம்பர் 4-ந்தேதி நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது. ஆனால் தேர்தல் முடிந்து 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் மேயரை தேர்வு செய்ய முடியவில்லை. துணைநிலை கவர்னர் நியமித்த உறுப்பினர்கள் மேயர் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக எழுந்த பிரச்சனையால் இந்த தேர்தலை நடத்த முடியவில்லை. நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது எனக்கூறி ஆம் ஆத்மி போர்க்கொடி உயர்த்தியது. இதனால் மேயர் தேர்தலுக்காக 3 … Read more

அதிகரித்த இ.பி.எஸ் பென்ஷன்… பெற என்ன செய்ய வேண்டும்? வழிகாட்டும் சுற்றறிக்கை!

இ.பி.எஃப். ஊழியர்களுக்கு பிராவிடண்ட் ஃபண்ட் தொகையுடன் 1995 முதல் பென்ஷனும் தரப்படுகிறது. சம்பள வரம்புக்கு உட்பட்டிருந்தது இ.பி.எஃப் பென்ஷன். 2014-ல் பென்ஷன் விதிமுறைகளில் திருத்தம் வெளியிட்ட, இ.பி.எஃப் அமைப்பு, சம்பள வரம்புக்கும் அதிகமாக பென்ஷன் பெற விரும்பும் சந்தாதாரர்கள் ஆறு மாத காலத்துக்குள் அதற்கான இசைவு (Option) தெரிவிக்க ஒரு கடைசி தேதியை (Cut off Date) நிர்ணயத்திருந்தது. Provident Fund “பென்ஷன் எங்களது அடிப்படை உரிமை… அதை அடைந்தே தீருவோம்…!’’ போராடத் தயாராகும் அரசு ஊழியர்கள்… … Read more

பிரித்தானிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி

பிரித்தானிய பாஸ்போர்ட்டில் செய்யப்பட இருக்கும் ஒரு முக்கிய மாற்றம் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பிரித்தானிய பாஸ்போர்ட்டில் செய்யப்பட இருக்கும் ஒரு முக்கிய மாற்றம் இந்த கோடையில் பிரித்தானிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் பாஸ்போர்ட்டில் ஒரு முக்கிய மாற்றத்தைக் கவனிக்கலாம். சார்லஸ் பிரித்தானியாவின் மன்னரானதைத் தொடர்ந்து பாஸ்போர்ட் தொடர்பிலான விதிகளில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட உள்ளது. அதாவது, தற்போது பிரித்தானிய பாஸ்போர்ட்கள் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பெயரால் வழங்கப்பட்டுவருகின்றன. விதி மாற்றங்களைத் தொடர்ந்து, இனி பிரித்தானிய … Read more

ஈரோடு கிழக்கு தொகுதியில் சீமான் பரப்புரை மேற்கொள்ள தடை! தேர்தல் அலுவலர் தகவல்

ஈரோடு: ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சி சீமான் பரப்புரை செய்ய அனுமதி கிடையாது என தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தில் அருந்ததியினர் சமுகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நேற்று இரவு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சி  தலைவர் சீமான், ஈரோடு கிழக்கு வீரப்பன் சத்திரம் அருகே காவிரி சாலையில் பரப்புரை மேற்கொண்டார். … Read more

ஆப்கானிஸ்தான் நாட்டின் பாயிசாபாத் அருகே 5-வது முறையாக நிலநடுக்கம்

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் பாயிசாபாத் அருகே 5-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காலையில் 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் பகல் 12.15 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பாயிசாபாத்தில் இருந்து 287 கி.மீ. தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.