மோசமான வானிலையால்  டெல்லியில் 100 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்

டெல்லி மோசமான வானிலை காரணமாக டெல்லியில் 100க்கும் மேற்பட்ட விமான சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.  டெல்லியில் இன்று காலை அடர்த்தியான மூடுபனி காணப்பட்டதால் அங்கு மிக  மோசமான வானிலை நிலவியது. இதன் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்ததாகவும். விமானங்கள் சற்று தாமதமாக தரையிறங்கின எனவும் எந்தவொரு விமானமும் திசைதிருப்பப்படவில்லை என்றும் அதிகாரி … Read more

நிதிஷ்குமாருக்கு இந்தியா கூட்டணியில் இணைய லாலு பிரசாத் அழைப்பு

பாட்னா இந்தியா கூட்டணியில் இணையுமாறு நிதிஷ்குமாருக்கு லாலு பிரசாத் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடந்த 2013 ஆம் ஆண்டு, பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் இணைந்து மீண்டும் முதல்வர்ஆனார். பிறகு 2017 ஆம் ஆண்டு, ராஷ்டிரீய ஜனதாதள உறவை துண்டித்துக் கொண்டு, மீண்டும் பா.ஜனதாவுடன் கைகோர்த்தார். அதன்பின் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மீண்டும் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி, … Read more

அடுத்த மாதம் 10 ஆம் தேதி முதல் பெங்களூருவில் விமான கண்காட்சி

பெங்களூரு அடுத்த மாதம் 10 ஆம் தேதி முதல் பெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெற உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை என கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இதுவரை 14 தடவை இந்திய ராணுவம் சார்பில் விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு இறுதியாக விமான கண்காட்சி நடந்தது. எனவே இந்தாண்டுக்கன விமான கண்காட்சி பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் நடைபெற உள்ளது. விமான கண்காட்சி அடுத்த மாதம்(பிப்ரவரி) 10-ந் தேதி தொடங்கி … Read more

விக்கிரவாண்டி: `செப்டிக் டேங்க்கில் விழுந்து குழந்தை இறக்கவில்லை’ – உறவினர்கள் எழுப்பும் கேள்விகள்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியைச் சேர்ந்தவர் பழனிவேல். திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வரும் இவர், தன்னுடைய மூன்றரை வயது குழந்தை லியா லட்சுமியை விக்கிரவாண்டியில்  இருக்கும் செயிண்ட் மேரீஸ் என்ற தனியார் பள்ளியில் சேர்த்திருக்கிறார். எல்.கே.ஜி படித்து வந்த லியா லட்சுமியை இன்று காலை வழக்கம்போல பள்ளியில் விட்டுச் சென்றிருக்கிறார் பழனிவேல். அதேபோல மாலை வழக்கம்போல குழந்தை லியா லட்சுமியை  அழைக்கச் சென்ற பெற்றோரிடம், குழந்தை செப்டிக் டேங்கில் விழுந்து இறந்துவிட்டதாகவும் மருத்துவமனைக்கு அழைத்துச் … Read more

மணிப்பூரில் ஆளுநராக அஜய்குமார் பல்லா பதவி ஏற்பு

இம்பால் அஜய்குமார் பல்லா மணிப்பூரின் 19 ஆம் ஆளுநராக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். மணிப்பூரின் ஆளுநர் பொறுப்பை அசாம் ஆளுநர் லஷ்மண் பிரசாத் ஆச்சார்யா கூடுதலாக வகித்து வந்தார். இந்நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த மாதம் அஜய் குமார் பல்லாவை மணிப்பூரின் புதிய கவர்னராக நியமித்தார். இன்றி மணிப்பூரின் 19-வது கவர்னராக மத்திய உள்துறை முன்னாள் செயலர் அஜய் குமார் பல்லா அம்மாநில ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். அஜய் குமார் பல்லாவுக்கு மணிப்பூர் உயர்நீதிமன்ற … Read more

பேருந்து கட்டண உயர்வு : கர்நாடக பாஜக போராட்டம்

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை எதிர்த்து பாஜகவினர் போராட்டம் நடத்தி உள்ளனர். அமைச்சரவை முடிவின்படி கர்நாடக மாநிலத்தில் பேருந்து கட்டணம்15% உயர்த்தப்பட உள்ளது. அதாவது கர்நாடகத்தில் குறைந்தபட்சமாக பஸ் கட்டணம் ரூ.2 உயர்வதால் பெங்களூருவில் இயங்கும் பி.எம்.டி.சி. பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.12 ஆக உயர்த்தப்பட உள்ளது. நாளை மறுநாள் முதல் இந்த பேருந்து கட்டண உயர்வு பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும்  அமலுக்கு வருகிறது.  பாஜக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் … Read more

நாளை முதல் தாம்பரம் – திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை நாளை முதல் தாம்ப்ரம் – திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். ”பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் வசதிக்காகவும் திருச்சி – தாம்பரம், தாம்பரம் – திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரம் – திருச்சி அதிவிரைவு சிறப்பு ரயில் வண்டி எண் (06191) நாளை முதல். 4,5,10,11,12,13,17,18,19 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து … Read more