பிரித்தானிய தூதர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ரஷ்யா: வெளியான பின்னணி

உக்ரைனுக்கு திரும்பும் பிரித்தானிய தூதர்கள் குறிவைக்கப்படுவார்கள் என பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது ரஷ்யா. ரஷ்யா மீது வெடிகுண்டு வீசுவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் ஆத்திரமூட்டும் கருத்தை வெளியிட்ட நிலையிலேயே இந்த மிரட்டல் வெளியாகியுள்ளது. ரஷ்ய கட்டமைப்புகள் மீது உக்ரேன் வான் தாக்குதலை முன்னெடுக்க வேண்டும் எனவும் அதற்கு பிரித்தானியா ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் பாதுகாப்பு அமைச்சர் James Heappey தெரிவித்திருந்தார். மட்டுமின்றி, ரஷ்யா மீது தாக்குதலை முன்னெடுக்க பிரித்தானியாவின் ஆயுதங்களை பயன்படுத்துவது என்பது முற்றிலும் சட்டபூர்வமானது எனவும் … Read more

எல்.ஐ.சி., ஒரு பங்கின் விலை 902,949 ரூபாய் என நிர்ணயம்| Dinamalar

புதுடில்லி: எல்.ஐ.சி.,யின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கான தேதியை மே. 4 ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் பங்கு வெளியீட்டின் வாயிலாக, எல்.ஐ.சி., 21 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதையடுத்து,ஒரு பங்கின் விலை 902, 949 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது. வரும் மே 4ம் தேதி துவங்கும் பங்கு வெளியீடு, 9 தேதியுடன் முடிவடைய உள்ளது. மேலும், பங்குகள் வாங்குவதில் தள்ளுபடியும் அறிவிக்கப்பட உள்ளது. குறிப்பாக, பாலிசிதாரர்களுக்கு 60 ரூபாய் வரையிலும்; … Read more

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கொளுத்திய உரிமையாளர்| Dinamalar

‘ஓலா’ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கொளுத்திய உரிமையாளர் தமிழக நிகழ்வுகள் திருப்பத்துார், :ஆம்பூர் அருகே, ‘ஓலா’ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது பெட்ரோல் ஊற்றி, அதன் உரிமையாளரே கொளுத்தியது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் நகரைச் சேர்ந்தவர் பிரித்திவிராஜ், 43; பிசியோதெரபிஸ்ட். இவர், ‘ஓலா புரோ எஸ்’ என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை, ‘ஆன்லைன்’ வாயிலாக, 1.5 லட்சம் ரூபாய்க்கு ஜனவரியில் வாங்கினார்.பழுதான போது, ஓலா நிறுவனம் சரி செய்து தந்துள்ளது. இதற்கிடையே, அந்த வாகனத்தை பதிவு செய்து தருமாறு, பிரித்திவிராஜ் … Read more

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: அணுமின் நிலையத்தின் மேல் பறந்த ரஷிய ராக்கெட்

26.4.2022 21:00: உக்ரைனில் சண்டை நிறுத்தப்படாததால் மக்களை வெளியேற்றுவதற்கான மனிதாபிமான வழித்தடங்கள் எதுவும் திறக்கப்படவில்லை என்று உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஷ்சுக் கூறுகிறார். 20:00: ரஷிய தாக்குதல்களைத் தடுக்க உதவுவதற்காக உக்ரைனுக்கு தனது முதல் கனரக ஆயுதங்களை வழங்குவதாக ஜெர்மனி இன்று அறிவித்துள்ளது. கே.எம்.டபுள்யு. நிறுவனத்திடம் இருந்து கெபார்டு விமான எதிர்ப்பு பீரங்கிகளை வழங்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக ஜெர்மனி பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்தார். முதற்கட்டமாக 50 பீரங்கிகள் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. … Read more

“அண்ணாமலை எதிர்க்கட்சித் தலைவர்போல சிறப்பாகச் செயல்படுகிறார்!" – மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏ

புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரத்தில் உள்ள ரயில் நிலையம் மிகவும் பழைமைவாய்ந்தது. இந்த வழித்தடத்தில் சென்னை – ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் அனைத்தும் நின்று சென்றுவந்தன. இதனால், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பலரும் சிரமமின்றி பயணித்துவந்தனர். இதற்கிடையே கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. மீண்டும் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, வழக்கம்போல் ரயில் சேவை தொடங்கிவிட்டபோதிலும் நமணசமுத்திரம் உள்ளிட்ட பல ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காமலேயே சென்றன. எம்.எல்.ஏ கேப்டன் தமிழ்ச்செல்வன் இதனால் … Read more

அடுத்தடுத்து 5 ரஷ்ய கோடீஸ்வரர்கள் படுகொலை: அம்பலமான விளாடிமிர் புடினின் பங்கு

ரஷ்யாவின் ஐந்து கோடீஸ்வரர்கள் அடுத்தடுத்து மரணமடைந்த விவகாரத்தில் ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு தொடர்பிருப்பதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு நெருக்கமான ஐந்து கோடீஸ்வரர்கள் சமீபத்தில் சடலமாக மீட்கப்பட்டனர். அதில் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையிலும் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையிலும், இருவர் கத்தியால் தாக்கப்பட்டு மரணமடைந்துள்ள நிலையிலும் காணப்பட்டனர். மட்டுமின்றி, மரணமடைந்த நால்வர் எரிவாயு தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் ஒருவர் மருந்து தொடர்பான துறையில் தொழில் செய்து வருகிறார். இந்த … Read more

ஐபிஎல் கிரிக்கெட் – புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறியது ராஜஸ்தான்

மும்பை: ஐபிஎல் 2022 சீசன் கிரிக்கெட்டில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடிய போட்டியுடன் இதுவரை 39 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் 8 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.  குஜராத் டைட்டன்ஸ் 7 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. ஐதராபாத் அணி 7 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று 10 … Read more

காங்கிரஸ் தலைவர்களை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை| Dinamalar

புதுடில்லி : பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கரை, கட்சியிலிருந்து இரண்டு ஆண்டு களுக்கு ‘சஸ்பெண்ட்’ செய்ய, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரைத்து உள்ளது.பரபரப்புபஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, பிப்ரவரியில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்து, ஆட்சியை பறிகொடுத்தது.இதையடுத்து, ‘காங்கிரசின் தோல்விக்கு, முதல்வராக இருந்த சரண் ஜித் தான் காரணம்’ என, பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் கடுமையாக … Read more

RCB v RR: மீட்பராக மாறிய ரியான் பராக்; மீண்டும் சொதப்பிய கோலி; முதலிடத்திற்கு முன்னேறிய ராஜஸ்தான்!

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை அடைந்திருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 145 ரன்களைக் கூட சேஸ் செய்ய முடியாமல் 115 ரன்களுக்கே ஆல் அவுட் ஆகியிருக்கிறது. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் கதையாக இந்தப் போட்டியிலும் விராட் கோலி செம சொதப்பலான ஒரு இன்னிங்ஸை ஆடி முடித்திருக்கிறார். மொத்தத்தில் டாப் கியரில் சென்று கொண்டிருந்த ஆர்சிபி திடீரென செல்ஃப் எடுக்காத வண்டியாக கரைச்சல் கொடுக்கத் தொடங்கியுள்ளது. பெங்களூரு அணியின் கேப்டனான டு ப்ளெஸ்ஸிதான் … Read more

ஜேர்மனி உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குமா?: சற்று நேரத்தில் வெளியாக இருக்கும் அறிவிப்பு

ஜேர்மனி உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்யவேண்டும் என பல நாடுகள் நீண்ட நாட்களாக அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், ஒரு வழியாக ஜேர்மனி உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க முன்வந்துள்ளது. இன்று, இன்னும் சற்று நேரத்தில் ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சரான Christine Lambrecht, ஜேர்மனியிலுள்ள அமெரிக்க இராணுவ தளம் ஒன்றில், 40க்கும் மேலான நாடுகள் கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்றில், உக்ரைனுக்கு ஜேர்மனி வழங்க இருக்கும் ஆயுதங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட இருக்கிறார். அவர் விமானங்களை சுட்டு வீழ்த்தக்கூடிய … Read more