மே 16! பள்ளி, கல்லூரிகள் திறப்பு! பள்ளிக்கல்வித்துறை| Dinamalar

பெங்களூரு:வரும் கல்வி ஆண்டில், மே 16ல் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. முன்கூட்டியே பள்ளி, கல்லுாரிகளை திறந்து, வேலை நாட்களை அதிகரித்து, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.கடந்த 2020 மார்ச்சில், கொரோனா தொற்று பரவியதால் பள்ளி, கல்லுாரிகள் சரியாக செயல்படவில்லை. இதனால் மாணவ – -மாணவியர் பாதிக்கப்பட்டனர். ‘ஆன்லைன்’ வாயிலாக வகுப்புகள் நடந்தாலும் பெயரளவுக்கு தான் நடந்தது; கற்றல் திறன் அதிகரிக்கவில்லை.முடிவுகர்நாடகத்தில் கடந்த ஆண்டு பி.யு.சி., பொதுத்தேர்வு நடத்தப்பட வில்லை. … Read more

“அண்ணன் திருமாவளவனுக்கு பரிசளிக்க 4 புத்தகங்களை வைத்திருக்கிறேன்!” – அண்ணாமலை

பிரதமர் மோடி குறித்து தனியார் நிறுவனம் எழுதிய புத்தகம் ஒன்றுக்கு இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அந்த முன்னுரையில் பிரதமர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு சில கருத்துகளை முன்வைத்திருந்தார். மேலும் மோடியின் ஆட்சியைப் பார்த்து அம்பேத்கரே பெருமைப்படுவார் என்ற வார்த்தையையும் சேர்த்திருந்தார். இதற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தை முன்வைத்துவருகின்றனர். இந்த முன்னுரை இந்திய அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், விசிக தலைவர் தொல். திருமாவளவனுக்கும் இடையே வாக்குவாதம் … Read more

மீரா மிதுனுக்கு முன் ஜாமின் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு

சென்னை: நடிகை மீரா மிதுன் நடித்த பேயை கானோம் என்ற படத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் குழு ஒன்றில்  கடந்த மார்ச் 16 ஆம் தேதி  தயாரிப்பாளர் சுருளிவேல், இயக்குநர் மற்றும் முதல் அமைச்சர் குறித்து ஆபாசமாக பேசி ஆடியோ பதிவிட்டதாக தயாரிப்பாளர் சுருளிவேல் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீரா மிது மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் நடிகை மீரா … Read more

ஹிப் ஹாப் ஆதி வீட்டின் மீது கல்வீச்சு: 2 பேர் கைது

சென்னை: சென்னை அருகே பனையூரில் நடிகர் ஹிப் ஹாப் ஆதி வீட்டின் மீது கற்களை வீசி தாக்கியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிசிடிவி காட்சிப் பதிவுகளை கொண்டு பிரேம்குமார், அர்ஜுன் ஆகிய இருவரை காவல்துறை கைது செய்தது

27.04.22 புதன்கிழமை – Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan| இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். இந்த வார ராசிபலன் : https://youtu.be/Jxoon8CISOw #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

கனடாவிலிருந்து இந்தியா வந்த இளைஞருக்கு மர்ம நபர்களால் நேர்ந்த பயங்கரம்

கனடாவிலிருந்து ஒரு வாரம் முன்பு இந்தியா திரும்பிய இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பஞ்சாபைச் சேர்ந்த Jatinderpal Singh (25) என்ற இளைஞர் சென்ற வாரம்தான் கனடாவிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 12.00 மணியளவில், Jatinderpalம் அவரது மூன்று நண்பர்களும் உணவகம் ஒன்றில் உணவருந்திவிட்டு அமிர்தசரஸுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த இருவர் Jatinderpal மற்றும் அவரது நண்பர்கள் பயணித்த காரை நோக்கி சரமாரியாக சுட்டிருக்கிறார்கள். அப்போது … Read more

காங்கிரஸ் கட்சியில் இணைய மறுத்தது ஏன்? பிரசாந்த் கிஷோர் விளக்கம்…

சென்னை: காங்கிரஸ் கட்சியில் இணைய மறுத்தது ஏன்? என்பது குறித்து பிரசாந்த் கிஷோர் விளக்கம் தெரிவித்துள்ளார். 100ஆண்டு காலம் பெருமைகொண்ட காங்கிரஸ் கட்சி கடந்த சில ஆண்டுகளாக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், அடுத்து நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில், காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியிலும், கட்சியை பலப்படுத்தவும், தேர்தல் வியூக வகுப்பாளரன பிரசாந்த் கிஷோர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.  தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் … Read more

ஆப்கானிஸ்தானில் 4.0 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று இரவு 10.12 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பைசாபாத் நகருக்கு தென்கிழக்கில் 94 கி.மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.0 ரிக்டர் அளவுகோலாக பதிவானது. கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. இதையும் படியுங்கள்…மக்கள் போராட்டம் எதிரொலி- இலங்கையில் இடைக்கால அரசு அமைக்க கோத்தபய சம்மதம்

ஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு

புனே :ஐபிஎல் டி20 போட்டி இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தற்போது ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது.

தண்டவாளத்தில் கிடந்த குழந்தை மீட்பு| Dinamalar

விஜயநகரம் : ஆந்திராவில், ரயில் தண்டவாளத்தில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தையை போலீசார் மீட்டு, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து உள்ளனர்.ஆந்திராவின், விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கொத்தவலசை ரயில் நிலையம் அருகே, நேற்று முன்தினம் காலை தண்டவாளத்தில் இருந்த பைக்குள் பச்சிளம் குழந்தை அழுது கொண்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணி ஒருவர், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார், பைக்குள் இருந்த ஆண் குழந்தையை மீட்டு, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.குழந்தையை … Read more