500 பெண் ஆட்டோ  ஓட்டுநர்களுக்கு தலா ரூ.1லட்சம் மானியம் – 1லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு! அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு…

சென்னை: 500 பெண் ஆட்டோ  ஓட்டுநர்களுக்கு புதிய ரிக்ஷா வாங்க தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என்றும், 1லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாப்பு வழங்கப்படும் என்ற  சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று எரிசக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. இதற்கு பதிலளித்து அமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் எரிசக்தித் துறை, தொழிலாளர் நலத்துறை, … Read more

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு- அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: டாஸ்மாக் மூலம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டில் ரூ 2,200 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்க்கப்பட்டுள்ளது  2020-21ஆம் ஆண்டில் மொத்தமாக ரூ 33,811 கோடி டாஸ்மாக் மூலம் வருவாய் கிடைத்துள்ளது அதன்படி நடப்பு ஆண்டில் மார்ச் மாதம் வரை மட்டும் ரூ 36,013 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் டாஸ்மாக் சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு ரூ .500 … Read more

அயோத்தியா மண்டபம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அரசு விசாரணை நடத்தலாம்: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அயோத்தியா மண்டபம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அரசு விசாரணை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விசாரணை அடிப்படையில் அரசு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அயோத்தியா மண்டப நிர்வாகத்தை கையகப்படுத்திய அறநிலைய உத்தரவை எதிர்த்த மேல் முறையீடு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்து அறநிலையத்துறை உத்தரவை உறுதி செய்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யப்போவதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

மத்திய அரசு வேண்டி, விரும்பி அழைக்கும் 3 நிறுவனங்கள்.. எதற்கு தெரியுமா..?!

இந்தியா மிகப்பெரிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடாக உருவெடுக்க வேண்டும் என்பதில் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக இருக்கும் நிலையில், மேக் இன் இந்தியா திட்டங்கள் தோல்வி அடைந்தாலும் தற்போது சர்வதேச நாடுகளில் டிமாண்ட் அதிகரித்துள்ளதால் புதிதாக உருவாகி வரும் வாய்ப்புகளைப் பிற நாடுகளுக்குச் செல்லும் முன்பு இந்தியா கைப்பற்ற வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு தற்போது 3 நிறுவனங்களிடம் இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைக்கத் தீவிரமாக ஆலோசனை … Read more

`ஏலியன்ஸ் கடத்திக்கிட்டு போயிடுமோனு பயமா இருக்கு!' – வீட்டுக்குள் நாள்களை கழிக்கும் 51 வயது பெண்

ஏலியன் பயத்தால் தனது வாழ்க்கையின் பெரும்பாலான நாள்களை வீட்டிற்குள்ளேயே கழித்து வருகிறார், இங்கிலாந்தை சேர்ந்த சாச்சா கிறிஸ்டி. 51 வயதான இவர், இதுவரை 9 UFO-க்கள் வானில் பறக்கும் வினோதமான நிகழ்வுகளைக் கண்டுள்ளதாகத் தெரிவித்தார். முதன் முறையாக ஏழு வயதில் இதைக் கண்டாராம். அதைத் தொடர்ந்து வாழ்வின் பல சந்தர்ப்பங்களில் இதே போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து இவருக்கு நடந்ததாகத் தெரிவித்துள்ளார். Cloud `மூன்று பறக்கும் தட்டு வீடியோக்களை உறுதிப்படுத்திய அமெரிக்கா..!’ -மீண்டும் `ஏலியன்ஸ்’ விவாதங்கள் சிறு வயதில் … Read more

தன்னை விட 28 வயது குறைவான அழகிய பெண்ணை மணக்கும் 66 வயது பிரபலம்! புகைப்படங்கள்

பிரபல கிரிக்கெட் வீரர் அருண்லால் தன்னை விட வயதில் மிக குறைவான பெண்ணை இரண்டாவது திருமணம் செய்கிறார். இந்திய அணிக்காக 16 டெஸ்ட் மற்றும் 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் அருண் லால்(66). தற்போதுமேற்குவங்க ரஞ்சி அணியின் பயிற்சியாளராக உள்ளார். இவர் தனது நீண்ட நாள் நண்பரான புல் புல் சாஹாவை மே 2 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவுள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. அருண் லால் முதல் முறை … Read more

விளையாட்டு சங்கத்தில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை?! உயர்நீதி மன்றம் கடும் காட்டம்

சென்னை: விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை என சென்னை உயர்நீதி மன்றம் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளது. தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்கத் தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கம் அனுமதி மறுத்ததை எதிர்த்து வட்டெறிதல் வீராங்கனை நித்யா சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரணை நடத்தி வந்தார். அதைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் விசாரணையைத் தொடர்ந்து வழங்கிய தீர்ப்பில், விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக விளையாட்டு வீரர்கள் மட்டுமே … Read more

இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்க 11 இடங்களில் தொழிற்பயிற்சி நிலையங்கள்- அமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானியக்கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் சி.வி.கணேசன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:- இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்கும் பொருட்டு, கடலூர் மாவட்டம் மங்களூர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, தருமபுரி மாவட்டம் அரூர், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டம் குன்னம், … Read more

நடிகை மீரா மிதுனை கைது செய்து விசாரிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகை மீரா மிதுனை கைது செய்து விசாரிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் குறித்து ஆபாசமாக பேசி ஆடியோ பதிவிட்டதாக நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன் ஜாமீன் கோரி நடிகை மீரா மிதுன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.