உக்ரைனில் கொல்லப்பட்ட பெண்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது! மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்

உக்ரைன் பெண்கள் கொல்லப்படுவதற்கு முன்னர் அவர்களுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பிரேத பரிசோதனையில் அம்பலமாகியுள்ளது. உக்ரைனின் புச்சா, இர்பின் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ரஷ்ய படைகள் சமீபத்தில் வெளியேறிய பின்பு அங்கு ஆய்வு நடத்தியபோது அப்பாவி மக்கள் பலரை ரஷ்ய வீரர்கள் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது. தெருக்களில் இருந்து கொத்து கொத்தாக பிணங்கள் மீட்கப்பட்டன. அந்த உடல்களுக்கு தற்போது பிரேத பரிசோதனை நடந்து வருகிறது. இதில் ரஷ்ய வீரர்கள் போட்ட வெறியாட்டங்கள் அம்பலமாகியுள்ளது. ரஷ்ய மண்ணில் … Read more

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய மறுப்பு!

டெல்லி: பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய மறுத்துவிட்டதாக, காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா டிவிட் பதிவிட்டுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் வகையில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுடன் தொடர்  ஆலோசனை நடத்தினார். 3 முறை நடைபெற்ற இந்த ஆலோசனையின் போது, அகில … Read more

கடற்கரை ரெயில் நிலைய விபத்து- என்ஜின் டிரைவரின் கவனக்குறைவே காரணம் என விசாரணையில் தகவல்

சென்னை: கடற்கரை ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை மின்சார ரெயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தின் போது ரெயிலில் பயணிகள் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. ரெயிலை பணிமனையில் இருந்து நிலையத்திற்கு கொண்டு வந்த போது விபத்து ஏற்பட்டது. இதையடுத்து டிரைவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் சென்னை கோட்ட மேலாளர் உத்தரவின் பேரில் 5 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த … Read more

டிவிட்டர் கணக்கில் இருந்து விலகுவதாக ஹாலிவுட் நடிகை ஜமீலா ஜமில் அறிவிப்பு

லண்டன்: எலன் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதை அடுத்து தனது டிவிட்டர் கணக்கில் இருந்து விலகுவதாக ஹாலிவுட் நடிகை ஜமீலா ஜமில் அறிவித்துள்ளார். நாயுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இதுவே எனது கடைசி ட்வீட் என தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து 2 மடங்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது இந்தியா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டில் மொத்தமாக இறக்குமதி செய்த கச்சா எண்ணெயை விட, கடந்த 2 மாதங்களில் இரு மடங்கு இறக்குமதி செய்துள்ளது. இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி: கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் மற்றும் டெண்டர்கள் அடிப்படையில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த துவங்கிய பிறகு, இந்தியாவில் உள்ள எண்ணெய் … Read more

அக்ஷய திரிதியை: நொடியில் தங்கத்தை வாங்கலாம்.. எப்படித் தெரியுமா..?!

தங்கத்தின் மீதான காதல் இந்தியர்களுக்கு எப்போதும் மாறாது, ஆனால் தங்கத்தை வாங்கும் முறை தற்போது பெரிய அளவில் மாற்றியுள்ளது. குறிப்பாக அக்ஷய திரிதியை பண்டிகை நெருங்கி வரும் நிலையில் வீட்டில் இருந்தபடியே தங்கத்தை வாங்குவதும் விற்பனை செய்வதும் எப்படி எனத் தெரிந்துகொள்வது பெரிய அளவில் உதவும். இல்லதரசிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை இன்றும் சரிவு.. சர்வதேச நிலவரம் என்ன? அக்ஷய திரிதியை அக்ஷய திரிதியை வருகிற மே 3ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், தங்கம் … Read more

கருணாநிதி சிலை: 3 டன் களிமண்; 2 டன் வெண்கலம்” – உருவாகிறது தமிழகத்தின் மிக பிரமாண்ட உலோகச் சிலை!

முன்னாள் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதிக்கு தமிழக அரசு சார்பில் உலோகத்தினாலான முழு உருவச்சிலை வைக்கப்படவிருக்கிறது. தமிழகத்தில் இதுவரை வைக்கபட்டுள்ள முழு உருவ உலோகச் சிலைகளிலேயே மிக உயரமான சிலையாக இது அமையவுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை அண்ணா சாலையில் சிலை அமைக்கப்படும். அதற்கான இடம் தேர்வு செய்வது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்யப்படும் என்று அறிவித்தார் முதல்வர். ஏற்கெனவே … Read more

ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும் நிலையில் சென்னை அணி: காரணம் கூறும் ஜடேஜா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவர்பிளேயில் சரியாக விளையாடாததே மிகப்பெரிய குறைபாடு என அணித்தலைவர் ஜடேஜா தெரிவித்துள்ளார். வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீழ்த்தியது. இது சென்னை அணிக்கு 6வது தோல்வியாகும். இதனால் தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் அந்த அணி உள்ளது. நேற்றைய போட்டியில் சென்னை அணித்தலைவர் ஜடேஜா கடைசி கட்டத்தில் துடுப்பாட்டம் செய்தபோது பெரிய ஷாட் ஆட முயற்சிக்கவில்லை. … Read more

மே 15ஆம் தேதி முதல் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமல்! தமிழகஅரசு தகவல்…

சென்னை: மே மாதம் 15ஆம் தேதி முதல் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட இருப்பதாக தமிழகஅரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. கோடை வாசஸ்தலங்கள் செல்லும் குடிமகன்கள், குடித்துவிட்டு மதுபாட்டில்களை காடுகளில் தூக்கி வீசுவதால், வனவிலங்குகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது,  வனப்பகுதிகளில் வீசிச் செல்லும் உடைந்த பாட்டில்களை விலங்குகள் மிதிக்கும்போது காயமடைவதாகவும், அடுத்த மூன்று மாதங்களில் … Read more

பயங்கரவாதத்தால் 64,827 காஷ்மீர் பண்டிதர் குடும்பங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறின- மத்திய அரசு

புதுடெல்லி: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் காரணமாக, 1990களின் முற்பகுதியில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து 64,827 காஷ்மீர் பண்டிதர்கள் குடும்பங்கள் வெளியேறி ஜம்மு, டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் குடியேறியதாக மத்திய அரசு கூறி உள்ளது.  ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் முதன்முதலில் தலைதூக்கிய 1990 முதல் 2020 வரை 14,091 பொதுமக்கள் மற்றும் 5,356 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜம்மு காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவலுக்கும், பயங்ரவாதத்துக்கும் தொடர்பு உள்ளது. … Read more