“இந்துக்கள் மீது 1 கல் விழுந்தால், முஸ்லிம்கள் மீது..!" – ஸ்ரீராம் சேனா தலைவர் சர்ச்சைப் பேச்சு

கர்நாடகாவில், ஹிஜாப் பிரச்னையைத் தொடர்ந்து, இந்துக் கோயில்களில் முஸ்லிம்கள் கடை அமைக்க எதிர்ப்பு, ஹலால் விவகாரம், முஸ்லிம் நகைக்கடையில் இந்துக்கள் நகை வாங்கக்கூடாது என, இந்து-முஸ்லிம் இடையே தொடர்ச்சியாக வகுப்புவாத வன்முறைகள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், `இந்துக்கள் பண்டிகையின்போது ஒரு கல் எறியப்பட்டால், முஸ்லிம்கள் மீது 1,000 கற்கள் எறியப்படும்!’ என ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் பேசியிருப்பது கர்நாடகாவில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் – கர்நாடகா கர்நாடக … Read more

கனடாவில் வேலியே பயிரை மேய்ந்த கதை! காவல்துறை தலைவர் குற்றவாளி என அறிவிப்பு

கனடாவில் வேலியே பயிரை மேய்ந்தது போல உடன் பணிபுரிந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட உயர் பொலிஸ் அதிகாரி குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளார். Wikwemikong காவல்துறை தலைவராக இருந்தவர் டெரி மெக்காப்ரே. இவரிடம் கடந்த 2019ஆம் ஆண்டு வந்த சக பெண் ஊழியர் தனது தனிப்பட்ட பிரச்சனை குறித்து பேசி அழுதுள்ளார். அப்போது காவல்துறை தலைவர் என்ற அடிப்படையில் பிரச்சனையை தீர்ப்பது குறித்து பேசாமல் அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார் டெரி. இது தொடர்பான புகாரில் … Read more

6 முதல் 12 வயது குழந்தைகளுக்கு ‘கோவாக்சின்’ தடுப்பூசி செலுத்த டிசிஜிஐ அனுமதி!

டெல்லி:  கொரோனா நான்காவது அலை பரவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், 6-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு  இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) அனுமது வழங்கியுள்ளது. அதுபோல,  5-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு Corbevax க்கு அவசரகால பயன்பாட்டுக்கும் டிசிஜிஐ அங்கீகாரத்தை வழங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, … Read more

ஆம்புலன்சில் கொண்டு செல்ல பண வசதி இல்லாததால் இறந்த சிறுவன் உடலை 90 கி.மீ பைக்கில் கொண்டுசென்ற தந்தை

திருப்பதி: ஆந்திர மாநிலம் ராஜம்பேட்டை மாவட்டம் பெத்வேல் கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மலு. இவரது மகன் ஜெசேவா (வயது 10). இவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் திருப்பதி ரூயா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை ஜெசேவா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தனது மகன் உடலை ஆஸ்பத்திரியிலிருந்து தனது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தனியார் ஆம்புலன்சை அணுகினார். ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சிறுவனின் உடலை எடுத்துச் செல்ல அதிக அளவு பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு … Read more

டீசல் பதுக்கலில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்: போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் டீசலை பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் இருந்து 700 லிட்டர் டீசலை பறிமுதல் செய்து வண்ணாரப்பேட்டை போலீசார்  விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தியாவின் ஒரிஜினல் டெஸ்லா ‛‛மாட்டு வண்டி தான்: ஆனந்த் மகிந்திரா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: இந்தியாவின் எதிர்காலம் மாட்டு வண்டிகள் தான் என தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா கூறியுள்ளார். தற்போது, மின்சார வாகனங்கள் குறித்து பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. அனைத்து நாடுகளும், இந்த வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகின்றன. மக்களும் அதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் உலகளவில் மின்சார கார்கள் உற்பத்தியில் முன்னிலையில் உள்ளது. அதேபோல், இந்தியாவில் மின்சார வாகனங்களை … Read more

’லிப்ட்’ கொடுப்பதுபோல் கடத்தி பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை – உடலை கிணற்றில் வீசிய கொடூரம்

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் 35 வயது நிரம்பிய பெண் அம்மாநிலத்தின் துஷா மாவட்டத்தில் வசித்து வரும் தனது பெற்றோர் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். ஜெய்ப்பூரில் இருந்து பஸ்சில் சென்ற அந்த பெண் துஷா மாவட்டத்திற்கு வந்தடைந்துள்லார். தனது பெற்றோரின் வீடு அமைந்துள்ள ஊருக்கு அந்த பெண் நடந்து சென்றுள்ளார். அப்போது, அவ்வழியே காரில் வந்த சிலர் நாங்களும் அவ்வழியாக செல்கிறோம் உங்களுக்கு ‘லிப்ட்’ தருகிறோம் என கூறியுள்ளனர். இதனை நம்பிய … Read more

உக்ரைன்-க்கு ஜீரோ வரி.. பிரிட்டன் கொடுத்த இன்ப அதிர்ச்சி..!

ரஷ்யா உடனான போரில் உக்ரைன் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்ட உக்ரைன் நாட்டிற்கு உதவும் வகையில் உலக நாடுகள் பல வகையில் உதவி செய்து வரும் நிலையில், உக்ரைன் நாட்டிற்குப் பயன்படும் விதமாகப் பிரிட்டன் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதலீடு செய்ய இதுதான் சரியான வாய்ப்பு.. முத்தான 3 பங்குகளை பரிந்துரை செய்த நிபுணர்கள்..! இந்த அறிவிப்பு மூலம் போர் மூலம் பாதிக்கப்பட்டு உள்ள உக்ரைன் நாட்டின் வர்த்தகச் சந்தை மீண்டு வர முடியும். உக்ரைன் பொருளாதாரம் உக்ரைன் … Read more

Chennai Football: "அரை நூற்றாண்டு கால வரலாற்றை விரல் நுனியில் வைத்திருந்தவர் C.N.மூர்த்தி"- T.N.ரகு

சென்னை பச்சையப்பாஸ் ஹாரிங்டன் கால்பந்து கிளப்பின் நிறுவனரான C.N.மூர்த்தி சென்ற வாரம் காலமானார். சென்னை கால்பந்திற்கு அளவிட முடியாத தொண்டுகளை ஆற்றியவர் இவர். அவருடனான நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் பத்திரிகையாளர் T.N.ரகு “ சென்னை கால்பந்தின் அரை நூற்றாண்டு கால வரலாற்றை தன் விரல் நுனியில் வைத்திருந்தவர் மூர்த்தி சார். சென்னை லீக் தொடர் முதல் இங்கு நடக்கும் ஒவ்வொரு கால்பந்து போட்டி பற்றிய அனைத்து விஷயங்களும் அவருக்குத் தெரிந்திருக்கும். மேலும் சென்னையில் கால்பந்து ஆடும் வீரர்களில் … Read more

ஒரேநாளில் இரவில்…ரஷ்யா நடத்திய பயங்கர தாக்குதல்: 500 ராணுவ வீரர்கள் பலி!

செய்தி சுருக்கம்:  உக்ரைனில் ஒரேநாள் இரவில் 87 ராணுவ இலக்குகளில் ரஷ்யா தாக்குதல். 500 வீரர்கள் வரை கொல்லப்பட்டதாக ரஷ்ய செய்தி ஊடகமான TASS தகவல். போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 15,000 வீரர்களை ரஷ்யா இழந்துள்ளதாக பிரித்தானிய உளவுத்துறை அறிக்கை.  உக்ரைனில் ஒரே நாளில் நடத்திய 87 வான்வழி தாக்குதலில் 500 உக்ரைனிய அதிகாரிகள் வரை கொல்லப்பட்டு இருப்பதாக ரஷ்ய செய்தி ஊடகமான TASS தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள் முன்றாவது வாரத்தை … Read more