தொடர் மின்வெட்டு பிரச்சினை: ஜார்கண்ட் அரசுக்கு கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி கேள்வி

நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் எதிரொலியால், பல்வேறு மாநிலங்களிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு  பிரச்சினைக்கு மத்தியில் ஜார்கண்ட் மாநிலத்தில் நிலவும் மின் நெருக்கடி தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்‌ஷி சிங் அம்மாநில அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து சாக்‌ஷி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ஜார்கண்டின் வரி செலுத்துபவராக, இங்கு பல … Read more

சுருக்குமடி வலை பயன்படுத்த அனுமதி கோரி மனு: ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

டெல்லி: கடலில் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி கோரி ரிட் மனுவுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் பனிச்சமேடு குப்பத்தைச் சேர்ந்த ஞானசேகர் உள்ளிட்ட 9 மீனவர்கள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

பிள்ளைச்சாவடி பள்ளியில் முப்பெரும் விழா| Dinamalar

புதுச்சேரி, :பிள்ளைச்சாவடி வரதன் அரசு நடுநிலைப் பள்ளியில் சமுதாய நலப்பணித் திட்டம் மற்றும் தேசிய பசுமைப் படை சார்பில், சாலை பாதுகாப்பு, இயற்கையை காப்போம், கல்வியின் முக்கியத்துவம் குறித்த முப்பெரும் விழா நடந்தது.தலைமையாசிரியை திலகவதி தலைமை தாங்கினார். தமிழாசிரியர் ஜெகதீசன் வரவேற்றார். போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் சண்முக சத்யா, சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பொம்மலாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கும் உதவி சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் பரிசு வழங்கினார். தொடர்ந்து, … Read more

முன்னாள் ராணுவ வீரரிடம் லஞ்சம் – நில அளவையரை பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்!

கரூர் – மதுரை பைபாஸ் சாலையில் உள்ள எல்.வி.பி நகர் பகுதியில் வசிப்பவர் சரவணன் (வயது 46). இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர், தனது நிலத்தை கூட்டுப்பட்டாவிலிருந்து தனிப்பட்டாவிற்கு மாற்ற, நில அளவையர் துறையை அணுகியிருக்கிறார். அங்குள்ள பீல்டு சர்வேயரான ரவி (40) என்பவர், இந்த தனிப்பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது. முதலில் ரூ 8 ஆயிரம் கேட்டாராம். ஆனால், சரவணன், ‘அவ்வளவு முடியாது’ என்று கூற, இறுதியில் ரூ 5 ஆயிரம் தான் … Read more

ரஷ்ய மண்ணில் உக்ரைன் படை கால் வைத்தது உண்மை தான்! குண்டு வீசி தாக்குதல்.. பெண் உள்ளிட்டோருக்கு நேர்ந்த நிலை

தங்கள் மண்ணில் உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதை ரஷ்யா உறுதி செய்துள்ளது. அதன்படி ரஷ்யாவில் உள்ள ஒரு கிராமத்தில் உக்ரைன் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாகவும் அதில் இரண்டு பொதுமக்கள் காயமடைந்ததாகவும், பல வீடுகளை சேதப்படுத்தியதாகவும் ரஷ்ய பிராந்தியத்தின் கவர்னர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் Belgorod பிராந்தியத்தின் கவர்னர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தான் இத்தகவலை வெளியிட்டுள்ளார். ரஷ்யா தோல்வி! உக்ரைன் வெற்றி பெற்றுள்ளது… அமெரிக்கா பரபரப்பு தகவல் அவரின் சமூகவலைதள பதிவில், ஒரு கிராமம் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வீச்சுக்கு … Read more

துணைவேந்தர்களை தமிழகஅரசே நியமிக்கும் மசோதா! ஒப்புதலுக்காக இன்று ஆளுநர் மாளிகை செல்கிறது…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில், நேற்று நிறைவேற்றப்பட்ட துணைவேந்தர்களை தமிழகஅரசே நியமிக்கும் மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்காக இன்று ஆளுநர் மாளிகையான ராஜ்பவனுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று தாக்கல் செய்யப்பட்டு நிறை வேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு அதிமுக, பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. இந்த மசோதா குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராகவும் , இணை வேந்தராக … Read more

விரைவில் எனது அரசியல் பயணத்தை தொடங்குவேன் : சசிகலா பேட்டி

சென்னை : ஆன்மீக சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு தற்போது சசிகலா சென்னை திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம்,  ஆன்மீக பயணத்தை நிறைவு செய்த நிலையில் அரசியல் பயணத்தை எப்போது தொடங்க போகிறீர்கள் என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், ‘அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிச்சயம் மேல்முறையீடு செய்வேன். விரைவில் எனது அரசியல் பயணத்தை தொடங்குவேன், ‘என்றார்.

முன்னாள் கவர்னருக்கு மக்கள் அஞ்சலி| Dinamalar

பாலக்காடு : கேரளா காங்., மூத்த தலைவரும், மஹாராஷ்டிரா முன்னாள் கவர்னருமான சங்கரநாராயணன்,89, கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்தார்.பாலக்காடு சேகரிபுரத்திலுள்ள வீட்டில் நேற்று முன்தினம் இரவு காலமானார். உடல் நேற்று மதியம் 2 மணி வரை வீட்டில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. பின்னர் திருச்சூர் மாவட்டம், செறுதுருத்திக்கு கொண்டு செல்லப்பட்டு, அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடந்தது.முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, சபாநாயகர் ராஜேஷ், அமைச்சர் … Read more

எலான் மஸ்க்: 44 பில்லியன் டாலர்.. பங்குச்சந்தையிலிருந்து வெளியேறும் டிவிட்டர்..!

டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ-வான எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்ற டிவிட்டர் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் வரலாற்றிலேயே எலான் மஸ்க் முதல் முறையாக 44 பில்லியன் டாலர் என்ற மிகப்பெரிய தொகையைப் பணமாகக் கொடுத்தது டிவிட்டரை வாங்க உள்ளார். பல எதிர்ப்புகளையும் தாண்டி டிவிட்டரின் கைப்பற்றும் எலான் மஸ்க், டிவிட்டரை பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்ற உள்ளார். இதன் மூலம் டிவிட்டர் இனி தனியார் நிறுவனமாக இருக்கப் போகிறது. டிவிட்டர் விற்பனை.. இறுதி … Read more

தமிழகத்தில் எண்ணெய், எரிவாயு எடுக்க அனுமதி கேட்கும் வேதாந்தா நிறுவனம்! – ஒரு சுற்றுசூழல் பார்வை

தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இயற்கை எண்ணெய் எரிவாயு எடுப்பதற்கான அனுமதிகேட்டு, வேதாந்தா குழுமத்தின் கெய்ர்ன் ஆயில் & கேஸ் நிறுவனம் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்திருக்கிறது. மீனவ, விவசாய மக்களின் வாழ்வாதாரம், கடல்வளம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என பல்வேறு அரசியல், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கின்றனர். ஹைட்ரோகார்பன் திட்டம்: தமிழக அரசு எதிர்த்தும் அரியலூரில் ஓ.என்.ஜி.சி அனுமதி கேட்பது ஏன்? வேதாந்தா விண்ணப்பம் கடந்த … Read more