பள்ளி வகுப்பறைக்குள் செல்போன் எடுத்து வந்தால் மாணவர்கள், பெற்றோர் மீது நடவடிக்கை :வேலூர் மாவட்ட ஆட்சியர்

வேலூர் : பள்ளி வகுப்பறைக்குள் மாணவர்கள் செல்போன் எடுத்து வரக்கூடாது என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். உத்தரவை மீறினால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குமரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலூரில் வகுப்பறை மேசைகளை உடைத்த மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அகலங்கண்ணு அரசலாறு தடுப்பணை | Dinamalar

காரைக்கால், :அகலங்கண்ணு அரசலாறு தடுப்பணையை ரூ.4.32 கோடி மதிப்பீட்டில் பலப்படுத்தும் பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது.காரைக்கால் மாவட்டத்தில் மொத்த விவசாயமும் காவிரி ஆற்று நீர் பாசனத்தையே சார்ந்துள்ளது. கல்லணையிலிருந்து காரைக்காலுக்கு வரும் காவிரி நீர், நல்லம்பல் ஏரியில் தேக்கப்படுகிறது.பின், அகலங்கண்ணு அரசலாறு தடுப்பணையில் இருந்து பல இடங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.தற்போது, அகலங்கண்ணு தடுப்பணையில் கான்கிரீட் தரைதளம் சேதமடைந்துள்ளது. இதனால், நபார்டு வங்கி நிதியுதவியில் தடுப்பணையின் குறுக்கு சுவர், கான்கிரீட் தரைதளம் மற்றும் கான்கிரீட் தடுப்புக் கட்டை … Read more

மே மாதம் வங்கிகளுக்கு 10 நாள் விடுமுறை..!

இந்தியாவில் வங்கி மற்றும் நிதியியல் சேவைகளில் பெரும்பாலானவை நம்முடைய ஸ்மார்ட்போன்கள் வாயிலாகவே இன்றைய நவீன உலகில் கிடைத்துவிட்டாலும், சில முக்கியமான சேவைகளை வங்கிகளுக்குச் சென்று தான் பெற வேண்டும். அப்படி நீங்கள் வங்கிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை இருக்கும் பட்சத்தில் இந்த மே மாத வங்கி விடுமுறை நாட்களைத் தெரிந்துகொண்டு செல்லுங்கள். முதல் நாளே பெருத்த ஏமாற்றம்..

திருவண்ணாமலை: கள ஆய்வில் பல்லவர் காலத்துச் சிற்பங்கள் கண்டுபிடிப்பு!

திருவண்ணாமலையில் நடந்த கள ஆய்வில் பல்லவர் காலத்துச் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அணிகலன்கள் மற்றும் சிற்ப அமைதியை வைத்து இச்சிற்பம் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்துக் கொற்றவையாக இருக்கலாம். பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாகத் தவ்வையும் அதன் அருகே வயல்வெளியில் சிவலிங்கமும் முருகர் சிற்பமும் காணப்படுகின்றன. திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம், மேல்மலையனூர்ப் பகுதியில் உள்ள ஊர்களில் கள ஆய்வு மேற்கொண்டபோது, கிழவம்பூண்டி கிராமத்தில் உள்ள மல்லியம்மன் கோயியில் ஆய்வு மேற்கொண்டார். அவ்வூரின் … Read more

அதிமுக உட்கட்சி தேர்தல்: இன்று உத்தரவு பிறப்பிக்கிறது உயர்நீதிமன்றம்

சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது. அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதிக்க கோரி கே.சி.பழனிசாமி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னதாக மனுதாக்கல் செய்திருந்தனர்.அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது:தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின்,அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டது,கட்சியின் விதிகளுக்கு எதிரானது என்றும்,  ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளருக்கு கட்சியின் பொதுச்செயலாளரின் … Read more

தடுப்பூசி போடாதவர்களால் மற்றவர்களுக்கு தொற்று அபாயம்: ஆய்வில் கண்டுபிடிப்பு

டொரண்டோ : கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கொரோனா தடுப்பூசி போட்டவர்களும், போடாதவர்களும் இணைந்து செயல்பட்டால், அதனால் ஏற்படும் விளைவை கண்டறிய ஒரு எளிய மாதிரி ஆய்வில் ஈடுபட்டனர். அதற்காக, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை ஒருவருக்கொருவருடனும், தடுப்பூசி போடாதவர்களை தடுப்பூசி போட்ட குழுவினருடனும் இணைந்து பழக விட்டனர். இந்த ஆராய்ச்சி முடிவுகளை கனடா மருத்துவ சங்க பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். அதில், டொரண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டேவிட் பிஸ்மன் கூறியதாவது:- தடுப்பூசி போட்டுக்கொள்வது தனிநபர் விருப்பம் என்று … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட்டை இன்றுமுதல் ஆன்லைனில் பெறலாம்

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட்டை இன்றுமுதல் ஆன்லைனில் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது.

ஐபிஎல் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனை படைத்த தவான்

மும்பை:  சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் படைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இலங்கை 262 ரன்களை எடுத்தது. இதனையடுத்து விளையாடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களை எடுத்து 36 ஆவது ஓவரிலேயே வெற்றிப்பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் ஷிகர் தவான் 86 … Read more