தவறான செய்தி கூறிய 16 யூடியூப் செய்தி சேனல்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி

புதுடெல்லி: தவறான செய்திகளை ஒளிபரப்பும் 16 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல்களை 16 சேனல்கள் ஒளிபரப்பியதாகவும், இதனை அடுத்து அந்த சேனல்கள் முடக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது நாட்டின் மத நல்லிணக்கம் வெளியுறவு பாதுகாப்பு குறித்து தவறான தகவல்கள் உறுதி செய்யப்படாத தகவல்கள் ஆகியவற்றை 16 யூடியூப் சேனல்கள் ஒளிபரப்பிய நிலையில் இதில் பாகிஸ்தானைச் … Read more

அம்பதி ராயுடு போராட்டம் வீணானது – 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஷிகர் தவான் 88 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். பனுகா ராஜபக்சே 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் … Read more

உயர்கல்வியை மாற்றியமைக்க தேசிய கல்விக் கொள்கை செயல்படுத்த வேண்டும்: ஆளுநர் ஆர்.என். ரவி

சென்னை: காலத்தின் தேவைக்கேற்ப உயர்கல்வியை மாற்றியமைக்க தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர் என் ரவி கூறியுள்ளார். தேசிய கல்விக் கொள்கையை அதன் உண்மையான உணர்வில் செயல்படுத்த வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

மகாவீரர் ஜெயந்தி ஊர்வலம்| Dinamalar

மறைமலை நகர் : செங்கல்பட்டு மாவட்டம்,மறைமலை நகர் அடுத்த கீழக்கரணை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் அமைந்துள்ள ஜைன மத கோவிலில் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு சமண இயக்க ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஊர்வலமாக ஜி.எஸ்.டி., சாலை வழியாக முக்கிய வீதிகளில் சென்று மீண்டும் கோவிலை அடைந்தனர். சிறப்பு அபிஷேகம் பூஜைகள் செய்யப்பட்டு தேய்பிறை அஷ்டமி பூஜையும் நடைபெற்றது. மறைமலை நகர் : செங்கல்பட்டு மாவட்டம்,மறைமலை நகர் அடுத்த கீழக்கரணை தமிழ்நாடு … Read more

மோசமான நிலையில் மும்பை இந்தியன்ஸ்.. மஹேலா ஜெயவர்த்தனே எடுத்துள்ள முடிவு!

மும்பை இந்தியன்ஸ் அணியில் சில மாற்றங்களை செய்ய தயாராக இருப்பதாக அதன் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வெற்றி கூட பெறாமல், தொடர்ச்சியாக 8 தோல்விகளை சந்தித்து மோசமான சாதனையை படைத்துள்ளது. இதனால் கடுமையான விமர்சனங்களை அந்த அணித் தலைவரும், அணி நிர்வாகமும் சந்தித்து வருகின்றனர். நெருக்கடியான இந்த சூழலில் அடுத்த போட்டிக்கு எப்படி தயாராவது என மும்பை இந்தியன்ஸ் ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில் அணியில் … Read more

பெரியார் போல எந்த தலைவரும் எந்த இனத்துக்கும் கிடைத்தது இல்லை – ஸ்டாலின் புகழாரம்

சென்னை: பெரியார் போன்று எந்த தலைவரும் எந்த இனத்துக்கும் கிடைத்தது இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெரியார் திடலில் நீட் தேர்வு எதிர்ப்பு பிரச்சார பயணத்தின் நிறைவு விழா கூட்டம் இன்று நடைபெற்றது வருகிறது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார், அப்போது, இந்த அரசு மக்களுக்கானது, எனவே முடியுமா என்று எண்ணத் தேவையில்லை. முடியாத பலவற்றை நாம் முடித்துக் காண்பித்துள்ளோம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், எந்த நுழைவுத்தேர்வும் … Read more

நீட் விலக்கு: போஸ்ட்மேன் வேலையைக் கூட ஆளுநர் செய்ய மறுப்பது அழகல்ல- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: நீட் எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு தொடர் பிரசாரப் பயண நிறைவு சிறப்புப் பொதுக்கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். அவரது உரை பின்வருமாறு: இன்றைக்கு தமிழ்நாட்டில் அமைந்துள்ள ‘திராவிட மாடல்’ ஆட்சியை எந்தக் காலத்திலும் – எந்தச் சூழ்நிலையிலும் – எந்த சமரசத்துக்கும் இடமளிக்காமல் திராவிடப் பேரியக்கக் கொள்கைகளின் வழிநின்று நான் … Read more

ஒன்றிய அரசை மாற்ற வேண்டும்: கனிமொழி எம் பி

சென்னை:மொழித் திணிப்பு மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசை மாற்ற வேண்டும் என்றும் எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். மொழித் திணிப்பு என்பது வெறும் மொழி மட்டுமின்றி வரலாறு கலாசாரத்தை அழிக்கும் முயற்சியாகும் என்று திமுக எம் பி கனிமொழி கூறியுள்ளார்.

கோவா செல்லும் டாக்சி, சுற்றுலா வாகனங்களுக்கு அபராதம்| Dinamalar

பெங்களூரு : கர்நாடகாவிலிருந்து, கோவாவுக்கு செல்லும் டாக்சி ஓட்டுனர்கள், எல்லையை கடக்க சிறப்பு உரிமம் பெற வேண்டும். இல்லையென்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.அபராதம் முந்தைய வாரம், பெங்களூரிலிருந்து, கோவாவுக்கு பயணித்த 40 டாக்சிகள், எல்லையை தாண்ட சிறப்பு உரிமம் பெற்றிருக்கவில்லை. இவர்கள் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தினர்.பெங்களூரின் போக்குவரத்து அலுவலகங்கள் உட்பட மற்ற மாவட்டங்களில், ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் மாதக்கணக்கில் மூடப்பட்டிருந்ததால், டாக்சி ஓட்டுனர்களால் உரிமம் பெற முடியவில்லை.சிறப்பு உரிமம் பெற, … Read more