வானில் பறந்த ரஷ்ய விமானத்தை… அதிரடியாக சுட்டுவிழ்த்திய உக்ரைன் ராணுவம்: வீடியோ ஆதாரம்!

செய்தி சுருக்கம்: உக்ரைனின் கார்கிவ்-வில் ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் இரண்டு ரஷ்ய விமானிகள் பாதுகாப்பாக தப்பினர். உக்ரைனுக்குள் அத்துமீறி நுழைந்த ரஷ்ய விமானத்தை உக்ரைனின் ஆயுதப் படை வீரர்கள் வானிலேயே சுட்டுவிழ்த்தியுள்ளனர். உக்ரைனின் தலைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ரஷ்யா தனது ராணுவ படைகளை பின்னகர்த்தி தற்போது உக்ரைனின் கிழக்கு பகுதி நகரங்களான டான்பாஸ் மற்றும் கார்கிவ் அகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. In the #Kharkiv region, the … Read more

விருதுநகரில் மேலும் ஒரு பாலியல் சம்பவம்: திமுக பிரமுகர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

விருதுநகர்: விருதுநகரில் மேலும் ஒரு பாலியல் சம்பவம்  நடைபெற்றுள்ளது. சிறுமியிடம் பாலியல் சேட்டை செய்ததாக  திமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது குற்றம் சாட்டி, அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே விருதுநகர் மாவட்டத்தில் 22வயது தலித் இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துவந்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், 2 திமுக இளைஞர் அணி … Read more

இலங்கையிலிருந்து வருவோரை அகதிகளாக அறிவிக்க வேண்டும்- மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதாரம் காரணமாக அங்கு வாழ வழியில்லாத தமிழ் மக்கள், தஞ்சம் தேடி தமிழ்நாட்டுக்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் அவர்கள் அகதிகளாக மத்திய அரசால் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவர்களுக்கு உணவு, நிதி உள்ளிட்ட உதவிகளை சட்டப்பூர்வமாக தமிழக அரசால் வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இலங்கை அரசு கடைபிடித்து வந்த தவறான கொள்கைகளால் மீள முடியாத கடன் … Read more

ஐபிஎல் டி20 போட்டி: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு

ஐபிஎல் டி20 போட்டி இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி களமிறங்க உள்ளது.

தவறான தகவல் பரப்பிய மேலும் 16 யூடியூப் செய்தி சேனல்கள் முடக்கம்| Dinamalar

புதுடில்லி: இந்தியா குறித்து தவறான தகவல்களை பரப்பிய 10 இந்திய யூடியூப் சேனல் மற்றும் 6 பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் என மொத்தம் 16 யூடியூப் செய்தி சேனல்களை மத்திய அரசு முடக்கி உள்ளது. தவறான தகவல்களை பரப்பி வரும் யூடியூப் சேனல்களுக்கு எதிராக, இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் 22 யூடியூப் சேனல்களுக்கு அதிரடியாக தடை விதித்தது. இந்நிலையில், மேலும் 16 யூடியூப் சேனல்களுக்கு எதிராக மத்திய … Read more

சுந்தர் பிச்சை பாவம்.. 2021 போனஸ் தொகையில் பெரும் ஓட்டை..!

கொரோனா தொற்று உலக நாடுகள் எந்த அளவிற்குப் பாதித்தோ அதே அளவு பல நிறுவனங்களின் வர்த்தகத்தைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில் கொரோனா தொற்று அதிகம் இருந்த 2020-2021ஆம் ஆண்டுக் காலத்தில் அதிக வருமானம் மற்றும் லாபத்தைப் பெற்ற நிறுவனங்களின் தலைவர்களுக்குப் போனஸ் தொகை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்துள்ளது. பண்டமாற்று முறைக்கு தள்ளப்பட்ட சீனா மக்கள்.. கொரோனா வெறியாட்டம்..! போனஸ் தொகை ஆனால் ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓவும் தமிழருமான … Read more

புதின் உத்தரவு… திடீர் தற்காலிகப் போர் நிறுத்தம் – என்ன நடக்கிறது மரியுபோலில்?!

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே கடந்த 8 வாரங்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் போரில், உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான மரியுபோல் நகரை கடந்த வாரம் ரஷ்யப்படை கைப்பற்றிவிட்டதாக, ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ரஷ்யப் படையின் இந்த வெற்றியைப் பாராட்டி, ரஷ்ய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த அதிபர் புதின், மரியுபோல் நகரிலுள்ள `அசோவ்ஸ்டல்’ இரும்புத் தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தாமல் அந்தத் தொழிற்சாலையைக் கைப்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, மரியுபோல் நகரில் … Read more

ரஷ்யாவைக் கண்டு அமெரிக்காவுக்கு பயமா?: புடினுடைய இரகசிய காதலி மீது தடை விதிக்க பயந்ததாக தகவல்

புடினுடைய இரகசிய காதலி மீது தடை விதித்தால் புடினுடைய கோபத்துக்கு ஆளாகக்கூடும் என அஞ்சி, அவர் மீது தடைகள் விதிக்கும் திட்டத்தை கடைசி நேரத்தில் அமெரிக்கா கிடப்பில் போட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான Alina Kabaeva (39), புடினுடைய இரகசிய காதலி என அழைக்கப்படுபவர். அவர் வேறொரு நாட்டில் பாதுகாப்பாக மறைந்திருப்பதாக கருதப்பட்ட நிலையில், இப்போது புதிய தோற்றத்துடன் வெளியே வந்து தொலைக்காட்சிகளில் பேட்டியளித்துக்கொண்டிருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதும், புடினுக்கு … Read more

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் நாளை தொடங்குகிறது…

டெல்லி: நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு  மாணவர்களுக்ன 2வது பருவ பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. இந்த தேர்வு  ஜூன் 14 வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் நாளை 10,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள்  இரண்டு கட்டமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதல்கட்ட பருவத்தேர்வு தொடங்கி உள்ள நிலையில், இரண்டாவது பருவத் தேர்வு ஏப்ரல் 26ந்தேதி முதல் ஜூன் 14 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, நாட்டில் கொரோனா … Read more

தொற்று அதிகரித்து வருவதால் மாஸ்க் அணிவது கட்டாயம்-சட்டசபையில் மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்று சட்டசபையில் விவாதிக்கப்பட்டது.  எதிர்க்கட்சி துணை தலைவர் ஒ.பன்னீர்செல்வம் பேசும்போது, முகக்கவசம் அணியாமல் இருந்த சட்டமன்ற உறுப்பினர்களை சுட்டிக்காட்டி பேசும் விதமாக, முகக்கவசம் கட்டாயம் என்பது பொதுமக்களுக்கு மட்டும் தான் பொருந்துமா ? சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொருந்தாதா? என கேள்வி எழுப்பினார். அப்போது … Read more