சோழர் உலா: சிற்பங்களின் அழகுக்கும் சோழர் கட்டடக் கலைக்கும் சிறந்த உதாரணமாக விளங்கும் திருபுவனம்!

கும்பகோணத்திலிருந்து கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருபுவனம். பட்டுக்கும் பக்திக்கும் பெயர் பெற்ற ஊர் இது. சோழர்களின் பெருமைக்கு பெருமை சேர்க்கும் 4 ஆலயங்களில் இங்குள்ள கம்பகரேஸ்வரர் ஆலயமும் ஒன்று என்பர். மற்றவை, தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயம். திருபுவனம் ‘சோழமண்டலத்து உய்ய கொண்டார் சோழவள நாட்டு திரைமூர் நாட்டு திரைமூர்’ என்று அழைக்கப்பட்டது என்று வரலாறு கூறுகின்றது. திரைமூர் என்ற இந்த ஊரே மூன்றாம் … Read more

ராணுவ உதவிகள் தாக்குதலை தீவிரப்படுத்தும்… அமெரிக்காவை கண்டித்து கடிதம் அனுப்பிய ரஷ்யா!

 செய்தி சுருக்கம்:  ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போராட இதுவரை மொத்தமாக அமெரிக்கா 1122 மில்லியன் டாலர்கள் உதவி. ராணுவ நிதியுதவியை கண்டித்து அமெரிக்காவிற்கு ரஷ்யா கடிதம்.  அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ராணுவ நடவடிக்கையை அதிகரிக்க தான் செய்யும். உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்குவதை ரஷ்யா கடுமையாக எதிர்கிறது என அந்த நாட்டின் அரசு அதிகாரி அனடோலி அன்டோனோவ் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்ய இடையிலான ராணுவ மோதல் 60 நாள்களை கடந்தும் தாக்குதல் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டு வருகிறது. … Read more

ஆளுநருக்கு எதிரான சட்டப்பேரவை மசோதா குறித்து விவரிக்கும் கார்ட்டூன் – ஆடியோ

துணைவேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்துக்கு  எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்ட மசோதா குறித்து  ஒவியர் பாரியின் கார்டூன் விவரித்துள்ளது. https://patrikai.com/wp-content/uploads/2022/04/WhatsApp-Audio-2022-04-25-at-4.58.24-PM.ogg

துணை வேந்தர் நியமன மசோதா தேவையில்லாதது- பாலகுருசாமி கருத்து

சென்னை: துணை வேந்தர்கள் நியமன மசோதா குறித்து முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி கூறியதாவது:- துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வேண்டும் என்ற மசோதா தேவை இல்லாதது. துணை வேந்தர்கள் நியமனத்தில் அரசியல் குறுக்கீடுகள் இருக்கக் கூடாது. தற்போதைய கவர்னரை பிடிக்காது என்பதால் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. கல்வியின் தரத்தை உயர்த்த மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. துணை வேந்தர்களை முதல்-அமைச்சரே நியமித்தால் 100 சதவீதம் அரசியல் தலையீடு வந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

தருமபுரியில் விதிமீறி செயல்பட்ட அதிமுக நிர்வாகி டி.ஆர்.அன்பழகனின் தார் ஆலைக்கு சீல்..!!

தருமபுரி: தருமபுரியில் விதிமீறி செயல்பட்ட அதிமுக நிர்வாகி டி.ஆர்.அன்பழகனின் தார் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அளவுக்கு அதிகமான புகை மாசு ஏற்படுத்தியதாக புகார் எழுந்ததையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்தது.

புதிதாக 3 பேருக்கு தொற்று பாதிப்பு

புதுச்சேரி : புதுச்சேரியில் புதிதாக 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 14ம் தேதிக்கு முன்பு வரை, கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்து வந்தது. கடந்த 14ம் தேதி மேற்கொண்ட சோதனையில் காரைக்காலைச் சேர்ந்த 3 பேருக்கு தொற்று பாதித்து, வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வந்தனர்.கடந்த 19ம் தேதி இருவரும், 21ம் தேதி ஒருவர் என 3 பேரும் குணமடைந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக புதிதாக … Read more

மிஸ்டர் எலான் மஸ்க்.. இது தான் உண்மையான டெஸ்லா வாகனம்.. ஆனந்த் மஹிந்திராவின் குறும்புத்தனமான பதிவு!

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருப்பவர். மனதிற்கு பிடித்தமான, மற்றவர்களை சிந்திக்க வைக்க கூடிய தரமான பதிவுகளை பகிர்வதும், போடுவதும் இவரின் வழக்கமான செயல்களில் ஒன்று. இவரின் ட்வீட்டுகளுக்கு ஏராளமான ரசிகர்களும் உண்டு. அந்த வகையில் தற்போது ஏராளமானோரை கவரும் விதமாக ஒரு போட்டோவினை பகிர்ந்துள்ளார். அதனையும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்கினை டேக் செய்து, பகிர்ந்துள்ள புகைப்படும் ஒன்று வைரலாக பரவி வருகின்றது. இது … Read more

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புதுச்சேரி விசிட் | போட்டோ ஆல்பம்

புதுச்சேரி விமான நிலையத்துக்கு ராணுவ ஹெலிகாப்டரில் வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா. மத்திய அமைச்சர் அமித் ஷாவை வரவேற்க்கும் கவர்னர் தமிழிசை மற்றும் முதல்வர் ரங்கசாமி மத்திய அமைச்சர் அமித் ஷாவை வரவேற்க்கும் சபாநாயகர் செல்வம் மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பாரதியார் இல்லத்தை பார்வையிட வந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவை பாரதியார் வேடமிட்ட சிறுவர்கள் வரவேற்றனர் பாரதியார் இல்லத்தை பார்வையிட்ட மத்திய அமைச்சர் அமித் ஷா பாரதியார் படத்துக்கு மலர்தூவி வணங்கினார் பாரதியார் … Read more

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் மனைவி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுடன் சந்திப்பு: புகைப்படம்

நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த நடிகர் விவேக் கடந்தாண்டு ஏப்ரல் 17ஆம் திகதி மாரடைப்பால் மரணமடைந்தார். விவேக் மறைந்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் அவர் மனைவி அருட்செல்வி இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்தார். மறைந்த திரைப்பட நடிகர் திரு. விவேக் அவர்களின் மனைவி திருமதி அருட்செல்வி அவர்கள் … Read more

புளியங்குடி அமில சுண்ணாம்பு, தூயமல்லி அரிசி மற்றும் விருதுநகர் சம்பா வத்தல் புவிசார் குறியீடுக்கு விண்ணப்பம்!

சென்னை: நெல்லை மாவட்டம் புளியங்குடி அமில சுண்ணாம்பு, தூயமல்லி அரிசி மற்றும் விருதுநகர் சம்பா வத்தல் (காய்ந்த மிளகாய்) ஆகிய மூன்று தமிழ்நாட்டைச் சார்ந்த தயாரிப்புகள் புவிசார் குறியீடு (ஜிஐ) பெற விண்ணப்பித்துள்ளன. நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குடிசை தொழிலாக சுண்ணாம்பு தயாரிப்பு தொழில் நடைபெற்று வருகிறது. சுண்ணாம்பு தயாரிக்க 10 முதல் 15 அடி உயர அளவிலான கன்வாய் அமைக்கப்படுகிறது. இதற்குள் ஓடைக்கல், கரித்துள் ஆகியவற்றை அடக்கி அடியில் தென்ன மட்டை, பனங்கொட்டை, தேங்காய் … Read more