வரான் பபெட்-ஐ முந்திய கௌதம் அதானி.. உலகின் 5வது பெரிய பணக்காரரானார் அதானி..!

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான கௌதம் அதானியின் வர்த்தக வளர்ச்சிக்கு ஏற்ப அவரது சொத்து மதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் மூலம் கடந்த 6 மாதத்தில் அவ்வப்போது டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்தும் வெளியேறி வந்த கௌதம் அதானி கடந்த ஒரு மாதமாக 8 மற்றும் 9வது இடத்தில் இருந்தார். இந்த நிலையில் அதானி பவர், அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்த காரணத்தால், இன்று உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். … Read more

வேலூர்: வகுப்பறைக்குள் மேஜை, நாற்காலிகள் உடைப்பு! – 10 மாணவர்கள் சஸ்பெண்ட்

தமிழகத்தில், சமீப காலமாக பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களிடம் ஆபாசமாகப் பேசுவது, மிரட்டல் விடுப்பது போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மாணவர்களின் ஒழுங்கீனச் செயல் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மன வேதனையையும் உண்டாக்கியிருக்கிறது. கடந்த வாரம் கூட திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவன் ஒருவன் ஆசிரியரை ஆபாசமாகத் திட்டி அடிக்கப் பாய்வது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, … Read more

உக்ரைனுக்கு பணத்தை வாரி வழங்கிய அமெரிக்கா…புடின் குறிக்கோளில் தோற்றுவிட்டார்: பிளிங்கன் கருத்து!

செய்தி சுருக்கம்:  ”சுதந்திர உக்ரைன்” புடினின் ரஷ்யாவை விட நீண்டநாள் நீடிக்கும்.   ரஷ்யா தோற்கிறது, உக்ரைன் வெற்றி பெறுகிறது பிளிங்கன் கருத்து.   உக்ரைனின் ராணுவ உதவிக்காக 322 மில்லியன் டாலர்கள் அமெரிக்கா வழங்குவதாக உறுதி. உக்ரைனில் போரை தொடங்கியதற்கான நோக்கத்தில் ரஷ்யா தோல்வி அடைந்து விட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்ய போரானது முன்றாவது மாதத்தை தொட்டு இருக்கும் சூழ்நிலையில், போர் தொடங்கிய காலத்திற்கு பிறகு … Read more

திருச்சி அருகே பயங்கர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் நசுங்கி பலி.!

திருச்சி: திருச்சி அருகே நடைபெற்ற வாகன விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். இந்த சோக சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி அருகே உள்ள கரூரில் பைனான்ஸ் தொழில் செய்து வரும் முனியப்பன் . இவர் தனது மனைவி கலைவாணி, தாய் பழனியம்மாள், மகள் ஹரிணி, மகன் கார்முகில் ஆகிய 5 பேருடன் இன்று அதிகாலை காரில் சீர்காழி நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.  கார் திருச்சி-சென்னை தேசிய … Read more

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று தென்தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் … Read more

கோவையில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவிகள் விடுதி அறையில் 4ம் ஆண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

கோவை: கோவையில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவிகள் விடுதி அறையில் 4ம் ஆண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். விடுதி அறையில் தங்கியிருந்த மாணவி நந்தினி பிளேடால் கையை அறுத்தும், பின்னர் தூக்கு மாட்டியும் இறந்துள்ளார். மாணவி நந்தினியின் தற்கொலை குறித்து சென்னையில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக பூமி தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உலக பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஆண்டியார் பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியை சின்னமேரி தலைமை தாங்கினார். அறிவியல் ஆசிரியர் செல்வம் வரவேற்றார். ஆஷா பணியாளர் ஏழைமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆண்டியார் பாளையம் தாய், சேய் நல மையத்தின் மருத்துவ அதிகாரி மீனா கடந்த 1970ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டு ஏப்., 22ம் … Read more

குஜராத் கடற்கரை அருகே ரூ.280 கோடி மதிப்புள்ள போதைப் பொருளுடன் பிடிபட்ட பாகிஸ்தான் படகு

அகமதாபாத், இந்தியகடலோரக் காவல்படையினர் குஜராத் கடற்கரை அருகே பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பாகிஸ்தானை சேர்ந்த படகு ஒன்று இந்திய கடல் எல்லைக்குள் வந்துள்ளது. இதையடுத்து அந்த படகை பிடித்து அதில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, அதில் ரூ.280 கோடி மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருள் இருப்பது தெரிய வந்தது.  இதையடுத்து படகில் இருந்த ரூ.280 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்த அதிகாரிகள், படகுடன் சேர்த்து அதில் இருந்த 9 பேரையும் விசாரணைக்காக குஜராத்தின் கட்ச் … Read more

இப்பவே இப்படியா.. 6 வார உச்சத்தில் பாமாயில் விலை.. இந்தோனேசியாவின் நடவடிக்கைக்கு பிறகு என்னவாகும்?

சர்வதேச அளவில் மிகப்பெரியளவில் பணவீக்க விகிதமானது உச்சம் தொட்டு வரும் நிலையில், அதன் தாக்கத்தினை பல நாடுகளும் உணரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகள் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளன. ஏற்கனவே ரஷ்யா – உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் சன் பிளவர் எண்ணெய் விலையானது மிக மோசமான ஏற்றத்தினை கண்டுள்ளது. இதற்கிடையில் உள்நாட்டில் விலையை கட்டுப்படுத்த இந்தோனேசியாவும், இம்மாத இறுதியில் இருந்து பாமாயில் இறக்குமதி தடை விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கு இந்தோனேசியா கொடுத்த ஷாக்.. … Read more

கொரோனா காலத்தில் ஆயுர்வேதப் பொருள்கள் விற்பனை குறைந்துவிட்டதா? ஆய்வு முடிவும் மருத்துவர் விளக்கமும்

கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே ஆயுர்வேத மருத்துவம் குறித்த பேச்சு அதிகமாக இருந்து வந்தது. முன் எப்போதும் இல்லாத அளவில் ஆயுர்வேத மருந்தின் பயன்பாட்டும் பெருந்தொற்று காலத்தில் உயர்ந்தது. இப்படி ஆயுர்வேத மருத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட்டுவரும் வேளையில், சமீபத்தில் வந்த ஓர் ஆய்வின் கருத்து இதற்கு முரணாக உள்ளது. ஆயுர்வேத பொருள்களுக்கான வரவேற்பு கோவிட்-19 தொற்றுப் பரவல் காலத்துக்குப் பிறகு குறைந்துவிட்டதாக சமீபத்தில் வெளியான புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. Nielsen என்னும் புள்ளிவிவர நிறுவனம் … Read more