சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை காப்பாற்றிய பெண் காவலர்: குவியும் பாராட்டு

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை பெண் காவலர் காப்பாற்றினார். துரிதமாக செயல்பட்டு பயணியை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப்படை பெண் காவலர் மாதுரிக்கு உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கிராம சபை கூட்டம்: ஆணையர் பங்கேற்பு

திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தையொட்டி 18 கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.திருக்கனுார் அரசுப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் தலைமை தாங்கினார். உதவிப் பொறியாளர் மல்லிகார்ஜுனா, திருக்கனுார் உதவி வேளாண் அலுவலர் திருமுருகன், வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் சிறு விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. விவசாய கடன் அட்டை குறித்து … Read more

புல்டோசரை கொண்டு வந்து ஏ.டி.எம் இயந்திரத்தை தூக்கி சென்ற திருடர்கள்..! வைரலாகும் வீடியோ

மும்பை, சமூகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் திருட்டு, கொள்ளை போன்ற பல குற்ற சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. அதற்கு அதிகரித்து வரும் விலைவாசியும், வேலையில்லா திண்டாட்டமும் காரணமாக கருதப்படுகிறது.  ஏ.டி.எம் மையத்தில் பணம் கொள்ளை போனது என்ற செய்தியை பலமுறை நாம் கேள்விபட்டிருக்கிறோம். ஆனால், ஏடிஎம் இயந்திரத்தை அப்படியே பெயர்த்து எடுத்துக் கொண்டு போன சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. புல்டோசர் கொண்டு ஏ.டி.எம் இயந்திரம் அபேஸ்  மராட்டிய மநிலம் சாங்க்லீ பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம் … Read more

இலங்கை: 2 வாரத்திற்கு பின் துவங்கிய பங்குச்சந்தை.. 30 நிமிடத்தில் 13% சரிவு.. மீண்டும் முடங்கியது..!

பொருளாதாரச் சரிவு, விலைவாசி உயர்வு, நாடு முழுவதும் மக்கள் போராட்டம், மின் வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு, நிதி நெருக்கடி, எப்போது வேண்டுமானாலும் அரசு வீழும் அபாயம், நாணய மதிப்புச் சரிவு, அரசு சொத்துக்கள் மக்களால் அடித்து நொறுக்கப்படும் நிலை, நாட்டைக் காப்பாற்ற ஐஎம்எப்-டம் கடன் கேட்டு பணத்திற்காகக் காத்திருக்கும் இலங்கையில், பங்குச்சந்தை 2வது முறையாக மூடப்பட்டு உள்ளது. மொத்த வர்த்தகச் சந்தையும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் இலங்கை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மொத்த பணத்தையும் இழந்து உள்ளனர். கைவிட்ட … Read more

தொலைதூரக் கல்வி முறையில் சட்டம் படிப்பதற்கான வாய்ப்பு உள்ளதா?| Doubt of common man

விகடனின் ‘Doubt of common man’ பக்கத்தில் வாசகர் ஒருவர் ,” தொலைதூரக் கல்வி முறையில் சட்டம் படிப்பதற்கான வாய்ப்பு உள்ளதா? இல்ல எனில் சட்டம் தொடர்பான வேறென்ன படிப்புகள் உள்ளன? ” என்று கேள்வி எழுப்பியிருந்தார். அவரது கேள்விக்கான பதிரை இந்தக் கட்டுரையில் காண்போம். Doubt of common man வாசகரின் கேள்விக்கு விளக்கமாக பதிலளிக்கிறார் கல்வியாளர் ராஜராஜன் “ தொலைதூரக் கல்வியில் சட்டம் படிக்க BGL என்ற கோர்ஸ் உள்ளது. ஆனால் சட்டப் படிப்பு … Read more

சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறி மீண்டும் சொந்த நாடு திரும்பும் உக்ரைன் அகதிகள்: என்ன காரணம்?

சுவிட்சர்லாந்துக்கு அகதிகளாக வந்துள்ள உக்ரைனியர்கள், மீண்டும் உக்ரைனுக்கே திரும்பத் துவங்கியுள்ளதாக சுவிஸ் மாகாண புலம்பெயர்தல் செயலரான Christine Schraner தெரிவித்துள்ளார். இதுவரை சுவிட்சர்லாந்து சுமார் 40,000 உக்ரைன் அகதிகளுக்கு இடமளித்துள்ளது. ஆனால், உக்ரைனியர்களில் சிலர், டான்பாஸ் பகுதியைச் சுற்றி மட்டுமே ரஷ்யப் படையினர் அதிக கவனம் செலுத்துவதால், உக்ரைனின் சில பகுதிகள் பாதுகாப்பானவையாக ஆகியுள்ளதாக நம்புகிறார்கள். உக்ரைன் போலந்து எல்லையில் இருக்கும் போலந்து நாட்டு பொலிசார், சென்ற வாரம், உக்ரைனிலிருந்து மக்கள் வெளியேறுவது குறையத் துவங்கியதாகவும், இப்போதோ, … Read more

பல்கலைக்கழக துணை வேந்தர்களை தமிழகஅரசே நியமிப்பதற்கான மசோதா மீது முதல்வர் ஸ்டாலின் உரை -வீடியோ

சென்னை: அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிப்பதற்கான மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீது உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்,  பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்திலேயே துணை வேந்தர் நியமன அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலத்திலும் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது. 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக … Read more

இந்து சமய அறநிலையத்துறைக்கு நவீன வசதிகளுடன் கூடுதல் கட்டிடம்- மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக கோவில்களின் வளர்ச்சிக்கான திட்டங்களையும், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்டம், ரூ.2600 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு, மூன்று கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம், கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்பதற்கு 38 மாவட்டங்களில் வட்டாட்சியர்கள் உள்பட 108 பணியிடங்களை உருவாக்கியது. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய … Read more

மறைந்த நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும்: முதலமைச்சரிடம் விவேக் மனைவி கோரிக்கை

சென்னை: மறைந்த நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என அவரது மனைவி கோரிக்கை விடுத்தார். நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.

மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரியில் இ.பி.யு.எஸ் பரிசோதனை வசதி அறிமுகம்

புதுச்சேரி : மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் நுரையீரல் சிறப்பு மருத்துவ பிரிவில் ‘இ.பி.யு.எஸ்’ எனும் நுரையீரல் உள்நோக்கும் அல்ட்ரா சவுண்டு பரிசோதனை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.இவ்வசதி, மாநிலத்திலேயே முதல் முறையாக இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையானது, நாட்டின் சில மருத்துவ கல்லுாரிகளில் மட்டுமே அமைந்துள்ளது. இப்பரிசோதனையின் மூலம் நுரையீரல் உள்ளே உள்ள திசுவினை பரிசோதித்து நோயின் தன்மையை கண்டறிய இயலும். இப்பரிசோதனை துவக்க நிகழ்ச்சி, மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் தலைவர் … Read more