ஜீவி-2 படத் தயாரிப்பில் மும்முரம் காட்டிவரும் மாநாடு படத் தயாரிப்பாளர்

வெங்கட்பிரபு-சிம்பு கூட்டணியில் மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப் படத்தை தயாரித்தது சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன். இந்நிறுவனம் தற்போது ராம் இயக்கத்தில் நிவின்பாலி, அஞ்சலி நடிப்பில் உருவாகும் படத்தை தயாரித்து வருகின்றது. அதேசமயம் ஜீவி-2 என்கிற படத்தையும் சத்தமில்லாமல் தயாரித்து முடித்து விட்டது. கடந்த 2019ல் நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ஜீவி. இயக்குநர் வி.ஜே. … Read more

பெரம்பலூர் அருகே விபத்து- கரூர் பைனாஸ் அதிபர், மனைவி, மகள் உள்பட 4 பேர் பலி

பெரம்பலூர்: கரூரை பூர்வீகமாக கொண்டவர் முனியப்பன்(வயது 48). இவர் மயிலாடுதுறை சீர்காழி வாய்க்கால் கரை தெருவில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கலைவாணி (40). இந்த தம்பதியருக்கு ஹரிணி (13), கார்முகிலன் (5) ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர். முனியப்பன் கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்துடன் சீர்காழியிலேயே வசித்து வந்தார். விடுமுறை நாட்களில் சொந்த ஊரான கரூருக்கு செல்வது வழக்கம். கடந்த இரு தினங்களுக்கு முன்பு கரூருக்கு குடும்பத்துடன் சென்ற அவர், நேற்று இரவு … Read more

தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி 41.66% பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி 41.66% பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் தகவல் தெரிவித்தார். ஒமிக்ரான் காரணமாக ஏற்பட்ட 3-வது அலையின் தாக்கம் பெருமளவில் இல்லை; எனினும் கடந்த ஒரு வார காலமாக வடமாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.     

கர்நாடகாவில் 19 புதிய இ.எஸ்.ஐ.,| Dinamalar

பெங்களூரு : ”கர்நாடகாவில் மங்களூரு உட்பட 19 இடங்களில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைக்கப்படும்,” என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவராம் ஹெப்பார் கூறினார்.பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:கர்நாடகாவில் 19 புதிய இ.எஸ்.ஐ., புதிய மருத்துவமனை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், தட்சிண கன்னடாவின் பன்ட்வாள், உஜிரே, கஞ்ஜிமட், உடுப்பியின் படுபித்ரேயில் தயாராக உள்ள புதிய இ.எஸ்.ஐ.,மருத்துவமனை விரைவில் திறக்கப்பட உள்ளது.இது தவிர சிஞ்சோளி, அரசிகரே, கோலார், நரசிபுரா, சண்டூர், கனகபுரா, சவுபாத், யாத்கிர், ஹத்தரகி, ராணிபென்னுார், முதோள், … Read more

சீனாவின் உற்பத்தி மாடல் இந்தியாவுக்கு சரிபட்டு வராது.. ஏன்.. ரகுராம் ராஜன் பதில் இது தான்!

உற்பத்தி துறையை அடிப்படையாகக் கொண்ட சீனாவின் உற்பத்தி மாதிரியை கண்மூடித்தனமாக இந்தியா பின்பற்றக் கூடாது. ஆனால் அதற்கு பதிலாக சேவைத் துறையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். ஏனெனில் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை போல, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும் மேற்கத்திய நாடுகளில் பின்னடைவை சந்திக்கலாம் என்றும் எச்சரித்துள்ளார். முதலீடு செய்ய இதுதான் சரியான வாய்ப்பு.. முத்தான 3 பங்குகளை பரிந்துரை செய்த நிபுணர்கள்..! மேலும் உற்பத்தி சார்ந்த வளர்ச்சிக்கு அனைத்து … Read more

“இருவிரல் பரிசோதனை அறிவியலுக்கும், பாதிக்கப்பட்டவரின் கண்ணியத்துக்கும் எதிரானது” – உயர் நீதிமன்றம்

“பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நடத்தப்படும் இரு விரல் பரிசோதனை, அரசியல் சட்டத்துக்கு முரணானது, அறிவியலற்றது, பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணியத்துக்கு எதிரானது” என்று உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை. போக்சோ 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றம், போக்சோ சட்டத்தின் கீழ் ராஜீவ் காந்திக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 7 … Read more

சென்னையில் ரயில் விபத்து: ஓட்டுநர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

சென்னை: சென்னையில் ரயில் விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஓட்டுநர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் நோக்கி செல்வதற்காக சென்னை கடற்கரை ரயில் நிலைய பணிமனையிலிருந்து புறநகர் ரயில் ஒன்று கடற்கரை ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தது. ரயில் நிறுத்துமிடம் அருகே வந்த போது ரயிலில் இருந்த லோகோ பைலர் அதனை நிறுத்த முயற்சித்துள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த ரயிலின் பிரேக் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ரயிலின் ஓட்டுநர் … Read more

பார்வையற்ற சகோதரர்களால் வடிவமைக்கப்பட்ட 29 அடி உயர தேர்

பெங்களூரு: சாதனை செய்வதற்கு வயதோ, உடல் ஊனமோ ஒரு தடை இல்லை என்று கூறுவார்கள். தற்போது பல்வேறு துறைகளில் மாற்றுத்திறனாளிகள் தங்களது திறனை வெளிப்படுத்தி சாதனைகளை புரிந்து வருகிறார்கள். இதுபோல கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையை சேர்ந்த பார்வையற்ற சகோதரர்கள் தேரை வடிவமைத்து சாதனை படைத்து உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:- பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா பேலூர் கிராமத்தை சேர்ந்தவர் மல்லப்பா. தேர்களை வடிவமைப்பதில் கைதேர்ந்தவரான இவர் பல கோவில்களுக்கு தேர்களை வடிவமைத்து கொடுத்து உள்ளார். இதற்காக … Read more

பிரான்ஸ் அதிபராக தேர்வாகியுள்ள இம்மானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து

டெல்லி: பிரான்ஸ் அதிபராக தேர்வாகியுள்ள இம்மானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இந்தியா – பிரான்ஸ் இடையேயான உறவை பலப்படுத்த இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

விலை உயருது டிவி, சாக்லெட் | Dinamalar

புதுடில்லி : ‘டிவி’, சாக்லெட் உட்பட 143 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி.,யை மத்திய அரசு உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக மாநில அரசுகளிடம் ஜி.எஸ்.டி., கவுன்சில் கருத்து கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.பவர் பேங்க், வாட்ச், சூட்கேஸ், 32 இன்ச் வரையிலான ‘டிவி’, சாக்லெட், ேஹண்ட்பேக், வாசனை திரவியம், வால்நெட், சுயிங்கம், அப்பளம், வெல்லம், வாஷ் பேசின், குளிர்பானம், தோல் பொருட்கள், கண்ணாடி உட்பட 143 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., விகிதத்தை மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் 92 சதவீத பொருட்களுக்கான … Read more