LSG v MI: `இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!' மீண்டும் சொதப்பிய மும்பை; மீண்டும் சதமடித்த ராகுல்!

`தெய்வத்துக்கே மாறு வேஷமா… சாம்பியன்ஸ் இப்போ டேபிள் பாட்டமா!’ என சோக இசையுடன்தான் இந்த சீசனைக் கடந்து கொண்டிருக்கிறது மும்பை இந்தியன்ஸ். முதல் 7 போட்டிகளையும் தோற்ற அணி என்ற மோசமான சாதனையுடன், `வித விதமாகத் தோற்பது எப்படி?’ என ஆன்லைன் கிளாஸ் எடுக்க அனைத்து தகுதிகளுடனும் இன்று லக்னோவை சந்தித்தது மும்பை. டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்தது. கடந்த போட்டியில் தோற்றிருந்தாலும், மற்ற போட்டிகளை ஒப்பிடுகையில் சி.எஸ்.கேவுடனான தோல்வி கௌரவமான தோல்வி. அதனால், அதே … Read more

20 ஆண்டுகளில் முதன்முறை… மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய இமானுவல் மேக்ரான்

பிரான்ஸ் ஜனாதிபதியாக மீண்டும் இமானுவல் மேக்ரான் பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரான்சின் 11வது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட இமானுவல் மேக்ரான் முதற்கட்ட தகவலின் அடிப்படையில் 57.6% வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி மேக்ரானை எதிர்த்து போட்டியிட்ட மரீன் லீ பென் 42.40% வாக்குகளைப் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டில் மேக்ரான் 66.1% வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருந்தார். தற்போது இமானுவல் மேக்ரான் மீண்டும் ஆட்சியை … Read more

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: ஐ.நா. பொது செயலாளர் ரஷியா செல்வது நியாயமில்லை – அதிபர் ஜெலன்ஸ்கி

25.4.2022 00.25: உக்ரைன், ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஐ.நா. சபை இறங்கி உள்ளது. ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் நாளை மாஸ்கோ செல்கிறார். அங்கு அதிபர் புதின், வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்நிலையில்,  ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் ரஷியா செல்வது எந்த நீதியும் இல்லை, சரியான முறையும் கிடையாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 17 லட்சம் பேருக்கு எய்ட்ஸ்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நம் நாட்டில் 10 ஆண்டுகளில் 17 லட்சத்திற்கும் அதிகமானோர் ‘எய்ட்ஸ்’ பாதிப்பிற்கு ஆளாகி உள்ளதாக, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்து உள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர், நாட்டின் ‘எய்ட்ஸ்’ பாதிப்பு நிலவரம் குறித்து, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் விபரம் கோரினார். இதற்கு, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு சமீபத்தில் அளித்த பதில் … Read more

25.04.2022 திங்கட்கிழமை – Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். இந்த வார ராசிபலன் : https://youtu.be/Jxoon8CISOw #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

வெவ்வேறு நாட்டில் குடும்பத்தோடு இறந்து கிடந்த 2 ரஷ்ய குடும்பங்கள்! நீடிக்கும் மர்மம்., தொடரும் விசாரணை

வெவ்வேறு நாடுகளில் 24 மணிநேர இடைவெளியில் தங்கள் மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் இறந்து கிடந்த இரண்டு ரஷ்ய தன்னலக்குழுத் தலைவர்கள் மரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மற்றும் ஸ்பெயினில் உள்ள தங்கள் ஆடம்பர வீடுகளில் ரஷ்ய எதேச்சதிகார தலைவர்களான Vladislav Avayev மற்றும் Sergey Protosenya மற்றும் அவர்களது குடும்பத்தினர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். புலனாய்வாளர்கள் தற்கொலைகள் அல்லது திட்டமிட்ட கொலை போன்ற அனைத்து கோணங்களையும் ஆராய்ந்து வருகின்றனர். … Read more

கே.எல்.ராகுல், குருணால் பாண்ட்யா அசத்தல் – மும்பையை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல் 62 பந்துகளில் 12 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 103 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.  மும்பை சார்பில் … Read more

களைகட்டிய கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா  சுற்றுலா பயணியர் வருகை அதிகரிப்பு| Dinamalar

பெங்களூரு : இரண்டு ஆண்டுகளாக, வெறிச்சோடி காணப்பட்ட லால்பாக் பூங்கா, கப்பன் பூங்கா களை கட்டியுள்ளது. சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.பெங்களூரின் லால்பாக், கப்பன் பூங்காக்கள் வரலாற்று பிரசித்தி பெற்றவை. தினமும் ஆயிரக்கணக்கானோர், காலை, மாலையில் இப்பூங்காக்களில் நடை பயிற்சி செய்வர். வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்து சுறறுலா பயணியர் வருவர். இதனால் இப்பூங்காக்கள் எப்போதும் களை கட்டியிருக்கும்.கொரோனா பரவியதால், மாதக்கணக்கில் பூங்காக்களில் சுற்றுலா பயணியர், பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. வெறிச்சோடி காணப்பட்டது.தற்போது தொற்று குறைந்ததால், … Read more

உக்ரைனில் அமைதி நிலவ இவை உதவாது: அர்ஜெண்டினா

உக்ரைனில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக அமைதியை அடையவும், பேச்சுவார்த்தையை வளர்க்கவும் ரஷ்யா மீதான இந்த பொருளாதார தடைகள் உதவாது என அர்ஜெண்டினாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சாண்டியாகோ கஃபீரோ தெரிவித்துள்ளார். உக்ரைனில் தொடுத்துள்ள போர் காரணமாக அமெரிக்காவும், ஐரோப்பாவிலும் அதற்கு அப்பால் உள்ள அதன் நட்பு நாடுகளும், ரஷ்யா மீது முன் எப்போதும் இல்லாத வகையில் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இந்த தடைகளானது எரிபொருள் ஏற்றுமதியை இலக்காக கொண்டுள்ள மாஸ்கோவின் நிதி, வங்கி துறைகள், விண்வெளி மற்றும் … Read more

கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்த துணை ஜனாதிபதி

பெங்களூரு: கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக, கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப்போட்டிகள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. கண்டீரவா ஸ்டேடியத்தில் கலைநிகழ்ச்சிகளுடன் துவக்க விழா நடைபெற்றது.  விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு  விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், மல்லர்கம்பம் போன்ற உள்ளூர் விளையாட்டுகளை இப்போட்டியில் சேர்க்கவேண்டும் என்ற யோசனையை வரவேற்றார். உள்நாட்டு விளையாட்டுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறிய அவர், போட்டியில் பங்கேற்றுள்ளவர்கள் … Read more