கிட்டதட்ட 2 மடங்கு அதிகரிப்பு.. $119 பில்லியன் செலவு.. இந்தியாவினை வதைக்கும் எண்ணெய் விலை..!

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியானது கடந்த 2022ம் நிதியாண்டில் கிட்டதட்ட இருமடங்கு அதிகரித்து, 119 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், கச்சா எண்ணெய் விலையானது கடுமையான விலையேற்றம் கண்ட நிலையில் இந்தளவுக்கு அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் இந்தியா மிகப்பெரியளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் ஒரு நாடாகும். 143 பொருட்களுக்கு விலையேற்றமா.. ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுக்கு செவி சாய்க்குமா மாநில அரசுகள்..! இறக்குமதி மதிப்பு கடந்த ஏப்ரல் 2021ல் இருந்து … Read more

`மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை உள்ளாட்சி அமைப்புகளால்தான் மக்களிடம் சேர்க்க முடியும்' -ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும், தேசிய ஊராட்சி தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக ஆண்டுக்கு 4 முறை நடத்தப்பட்டு வந்த கிராம சபைக் கூட்டமானது, இனி ஆண்டுக்கு 6 முறை நடத்தப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் செங்காடு கிராமத்தில், இன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். கூட்டத்தில், கிராம மக்களிடம் கலந்துரையாடிய ஸ்டாலின், அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து … Read more

போர் களத்திற்கு திரும்பும் உக்ரைனின் காயப்பட்ட சிங்கங்கள்: பாதுகாப்பு அமைச்சகம் தகவல்!

செய்தி சுருக்கம்: வெற்றி விழா நாளுக்குள் உக்ரைனின் கிழக்கு எல்லை நகரை கைப்பற்ற ரஷ்ய ராணுவம் தீவிரம். 80 சதவீகித உக்ரைனிய ராணுவ வீரர்கள் மீண்டும் தங்களது சேவைகளுக்கு திரும்பினர் . உக்ரைன் ரஷ்யா போரினால் இதுவரை காயமடைந்த 80 சதவிகித உக்ரைனிய ராணுவ வீரர்கள் மீண்டும் தங்களது சேவைகளுக்கு திரும்பி இருப்பதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்ய இடையிலான போர் தாக்குதல் முன்றாவது வாரத்தை தொட்டிருக்கும் நிலையில், உக்ரைனின் பெரும்பாலான நகரங்களை … Read more

ஐ.ஐ.டி.யில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு… மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை…

சென்னை ஐ.ஐ.டி.யில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள 7300 பேரில் 2015 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதில் 60 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 54 … Read more

அரசியலில் உறவும் தேவையில்லை பகையும் தேவையில்லை- கமல்ஹாசன்

சென்னை: தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி இன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகிறது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் காணொலி மூலம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கிராம சபைகள் பற்றி மக்கள் மத்தியில் கொண்டு சென்றதில் மக்கள் நீதி மய்யத்தின் பணி மகத்தானது. இது மக்களுக்கு கிடைத்த வெற்றி. மக்கள் நீதி மய்யத்துக்கு கிடைத்த வெற்றி. கிராமசபை கூட்டங்களை வருடத்துக்கு 6 ஆக உயர்த்திய தமிழக அரசின் முடிவு … Read more

குளத்தில் மூழ்கி 2 மாணவிகள் பலி: போலீஸ் விசாரணை

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிங்குளத்தில் குளித்த அரசு பள்ளி மாணவிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 7-ம் வகுப்பு படிக்கும் சத்தியா மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் தனுஷ்கா ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் இச்சம்வம் தொடர்பாக போலீசார் விசாரணை நடந்தி வருகிறார்கள்.

11 ஆண்டுகள் கழித்து மிகப்பெரிய சர்பிரைஸ்.. ஹெச்டிஎஃப்சி முதலீட்டாளார்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!

ஹெச்டிஎஃப்சி 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதன் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, ஒரு பங்குக்கு 15.5 ரூபாய் டிவிடெண்டினை அறிவித்துள்ளது. இது 1550% ஆகும். தனியார் துறையை சேர்ந்த இந்த வங்கி கடந்த 2011ம் ஆண்டில் அதன் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு 16.50 ரூபாய் டிவிடெண்டாக வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதே கடந்த 2001ம் ஆண்டில் ஒரு பங்கிற்கு 22 ரூபாய் டிவிடெண்டாக அறிவத்திருந்தது. 11 ஆண்டுகள் கழித்து சர்பிரைஸ் 2011ம் ஆண்டிற்கு பிறகு 11 ஆண்டுகள் … Read more

சென்னை: கட்டுப்பாட்டை இழந்து நடைமேடைக்குள் புகுந்த மின்சார ரயில்… குதித்துத் தப்பித்த ஓட்டுநர்!

சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு வந்த, கடற்கரை நிலையம் – தாம்பரம் புறநகர் மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து முதலாம் நடைமேடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. பிரேக் சரியாக செயல்படாததால்தான் ரயில் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். நடைமேடையில் மக்கள் கூட்டம் அதிகம் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும், ரயில் விபத்துக்குள்ளானபோது, தப்பிப்பதற்காக ஓட்டுநர் ரயிலிலிருந்து வெளியே குதித்ததில், ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னையில் மின்சார ரயில் தடம்புரண்டதால் விபத்து மேலும், முதலாம் நடைமேடையில் மேற்கூரை … Read more

புயல்வேக பந்துவீச்சு.. இரண்டாக உடைந்த ஸ்டெம்ப்! வைரல் வீடியோ

பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி வீசிய பந்தால் ஸ்டெம்ப் இரண்டாக உடைந்தது. கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் லங்காஷயர் – க்ளூசெஸ்டர்ஷைர் அணிகள் விளையாடி வருகின்றன. முதல் இன்னிங்சில் க்ளூசெஸ்டர்ஷைர் அணி 252 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஹசன் அலி அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய லங்காஷயர் 556 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதனைத் தொடர்ந்து ஆடிய க்ளூசெஸ்டர்ஷைர் 86 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணி … Read more

கல்லணை உள்ளிட்ட தமிழ்நாட்டின் மூன்று முக்கிய கட்டுமானங்களுக்கு உலக பாரம்பரிய அடையாளம்

உலகின் மிகப் பழமையான பாசன அமைப்புகளில் ஒன்றான இரண்டாம் நூற்றாண்டில் சோழ மன்னன் கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை, மற்றும் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய வீராணம் ஏரி தவிர ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள காலிங்கராயன் அணைக்கட்டு ஆகிய தமிழ்நாட்டின் மூன்று கட்டுமானங்களுக்கு உலக பாரம்பரிய அடையாளம் வழங்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையில் புகழ்பெற்ற அமைப்பான சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையம் (ஐசிஐடி – ICID), யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய … Read more