இதுதான் திமுகவின் விடியல் ஆட்சியா? இதுக்கு அணில் தான் காரணமா? சீமான் காட்டம்

தமிழ்நாடு அரசு இனியாவது விழிப்படைந்து தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின்தடையைப் போக்க வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், பகல் முழுவதும் கோடை வெப்பத்தின் பிடியில் சிக்கிய மக்கள், இரவில் பல மணி நேரங்களாகத் தொடரும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உறக்கமின்றித் தவித்து வருவது மிகுந்த வேதனையை அளிக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 10-ந் திகதி தமிழ்நாட்டில் ஒரு நொடிகூட மின்வெட்டு இருக்காது, … Read more

9,999 ராதிகாக்கள் தேவை! தமிழர்கள் கவனிக்க!

தொலைக்காட்சி தொடர்கள், படங்கள் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே வைத்திருக்கிறார் ராதிகா சரத்குமார். ரடான் மீடியாவொர்க்ஸின் நிர்வாக இயக்குநராகவும் இருக்கும் அவருக்கு, தொழிற்துறையில் செய்த சாதனைகளுக்காக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விருது அளிக்கப்பட்டது. தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர். இந்த உயரிய விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ராதிகாவும் ஒருவர். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விருது பெற்ற கையோடு, … Read more

வேலூர் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கு- 496 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 17 ஆம் தேதி இரவு, பெண் மருத்துவர் ஒருவர், தனது நண்பருடன் சென்றபோது, அந்த வழியாக ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், பெண் மருத்துவரை மறைவான இடத்திற்கு கொண்டு சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு இளம் சிறார் உள்பட 5 குற்றவாளிகளில் பார்த்திபன், மணிகண்டன், சந்தோஷ்குமார், பரத் ஆகிய 4 … Read more

சிம்லாவில் காட்டுத் தீ : விலை மதிப்பற்ற மரங்கள் மூலிகைகள் எரிந்து நாசம்

சிம்லா: சிம்லாவில் தாராதேவி வனப்பகுதியில் காட்டுத்  தீ வேகமாக பரவி வருகிறது. தீயில் கருகி ஆயிரக்கணக்கான மரங்கள் சேதமடைந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை காட்டில் பிடித்த தீ வேகமாக பரவி வருவதால் தீயை அணைக்க தீயணைப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 5 நாட்களாக தொடர்ந்து எரியும் காட்டுத் தீயால் விலை மதிப்பற்ற மரங்கள், மூலிகைகள் எரிந்து நாசமாகியது.

டில்லியில் நடந்த கலவரம்; அமலாக்கத் துறை வழக்கு

புதுடில்லி : டில்லி, ஜஹாங்கீர்புரியில் சமீபத்தில் நடந்த கலவர வழக்கில் கைதானோர் மீது, அமலாக்கத் துறையினர் பண மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜஹாங்கீர்புரியில் சமீபத்தில் நடந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலம் மீது, மற்றொரு சமூகத்தினர் நடத்திய கல் வீச்சால் பெரும் கலவரம் உருவானது. இதில், முக்கிய குற்றவாளியான அதே பகுதியைச் சேர்ந்த முகமது அன்சார், 35, உள்ளிட்ட 25 பேரை போலீசார் கைது … Read more

“தாய் மொழி தமிழ், இணைப்பு மொழி ஆங்கிலம்… இருமொழிக் கொள்கையே தொடரும்!" – பள்ளிக் கல்வித்துறை

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கையை, நடப்பாண்டில் பள்ளிகளில் 6-ம் முதல் 9-ம் வகுப்புவரை மூன்றாவது மொழித்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், “தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் நீண்ட காலமாக அமலில் உள்ள இருமொழிக் கொள்கையை மாற்றி மும்மொழிக் கொள்கையைப் புகுத்தும் நடவடிக்கைகள் சத்தமின்றி … Read more

புடின் மிரட்டல்களை இப்படித் தான் நான் எதிர்கொண்டு இருப்பேன்…டிரம்ப் கருத்து!

செய்தி சுருக்கம்: புடினின் அணுஆயுத அச்சுறுத்தலுக்கு உலக தலைவர்கள் பயப்படுகிறார்கள். அமெரிக்காவிடம் வரலாற்றில் இல்லாத நீர்மூழ்கிக் கப்பல் சக்தி இருக்கிறது டிரம்ப் கருத்து.  அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் பதிலாக நான் ஜனாதிபதியாக இருந்து இருந்தால் ரஷ்யாவிற்கு பலமான பதிலடி கொடுத்து இருப்பேன் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். தொலைகாட்சி ஒன்றுக்கு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் Donald Trump அளித்த பேட்டியில், ரஷ்ய ஜனாதிபதி புடின் தொடர்ந்து அணுஆயுத அச்சுறுத்தல் வழங்கி வருகிறது … Read more

நாட்டில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையால் கடைகோடி மக்களும் பலனடைந்து உள்ளனர் – மோடி

Millions of people in the country have benefited from digital money transactions – Modi புதுடெல்லி: நாட்டில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையால் கடைகோடி மக்களும் பலனடைந்து உள்ளனர் என்று மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். மனதின் குரல் நிகழ்ச்சி பேசிய மோடி, மார்ச் மாதத்தில் ரூ.10 லட்சம் கோடி வரை யூபிஐ டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. நாள்தோறும் ரூ.20 ஆயிரம் கோடி ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது. சிறிய … Read more

பிளாட்பாரத்தில் ஏறி விபத்துக்குள்ளான மின்சார ரெயில்- சென்னை ரெயில் நிலையத்தில் பரபரப்பு

சென்னை: சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்த மின்சார ரெயில் நடைமேடையில் ஏறி விபத்துக்குள்ளானது. பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த ரெயில், தடம்புரண்டு நடைமேடையில் ஏறி கடைகள் மீது மோதியதாக தகவல் வெளியாகி உள்ளது.  தீயணைப்பு துறையினர் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சிலர் காயமடைந்திருக்கலாம் தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்து காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னையில் மின்சார ரயில் விபத்து: நடைமேடையில் இருந்த கடைகளின் மீது மோதி விபத்து

சென்னை:சென்னையில் மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகுள்ளானது பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு சென்ற மின்சார ரயில் கட்டுபாட்டை இழந்து நடைமேடையில் இருந்த கடைகளின் மீது மோதி விபத்துக்குள்ளானது. மின்சார ரயில் கட்டுபாட்டை இழந்தது தான் இந்த விபத்துக்கு கரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.