சேவைகளை ஒருங்கிணைக்க கிராம செயலகங்கள் உருவாக்கப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: நாடுமுழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பஞ்சாயத்து ராஜ் தினம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. காஷ்மீரில் நடந்த பஞ்சாயத்து ராஜ் தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முதன் முதலாக கலந்துகொண்டார். மாநிலங்களில் நடந்த பஞ்சாயத்து ராஜ் நிகழ்ச்சிகளில் கிராம மக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர். தமிழ்நாட்டிலும் பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் ஏப்ரல் 24-ந்தேதி பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து … Read more

பெயிண்ட் லாரி கவிழ்ந்த விபத்தில் லாரி தீப்பிடித்து எரிந்தது

கோவை: கருமத்தம்பட்டி என்ற இடத்தில் பெயிண்ட் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. ஐதராபாத்தில் இருந்து கோவைக்கு பெயிண்ட் ஏற்றி வந்தபோது பாரம் தாங்க முடியாமல் கனரக லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுனர் மற்றும் கிளீனர் ஆகிய இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

பிரியங்காவிடம் ஓவியத்தை வாங்க நிர்பந்தம்: ராணா கபூர் வாக்குமூலம்| Dinamalar

மும்பை: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்காவிடம் இருந்து எம்.எப். உசைன் ஓவியத்தை ரூ.2 கோடிக்கு வாங்கும்படி முன்னாள் மத்திய அமைச்சர் முரளி தியோராவால் கட்டாயப்படுத்தப்பட்டேன். இது, பத்ம பூஷண் விருது கிடைக்க உதவி செய்யும் என முரளி தியோரா கூறியதாக, மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள யெஸ் வங்கி நிறுவனர் ராணாகபூர் கூறியுள்ளதாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமை இடமாக வைத்து, யெஸ் பேங்க் செயல்படுகிறது. … Read more

தினசரி கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரிப்பு: ஒரு நாளில் 2,593 பேருக்கு பாதிப்பு

புதுடெல்லி, நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு தினமும் ஏறுமுகம் கண்டு வருகிறது.  நேற்று முன் தினம் 2,451 நேற்று 2,527 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 2,593 ஆக உயர்ந்தது.  இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,30,54,952 லிருந்து 4,30,57,545 ஆக உயர்ந்துள்ளது.   ஒரே நாளில் கொரோனாவுக்கு 44 பேர் பலியாகினர். இதுவரை 5,22,193 பேர் உயிரிழந்தனர் இந்தியாவில் ஒரே நாளில் 1,755 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.  இதுவரை … Read more

“யாரும் பசியுடன் இருக்கக்கூடாது..!" – யாசகம் பெற்று கோயிலுக்கு ரூ.1,00,000 தானம் செய்த மூதாட்டி

கர்நாடகாவில் 80 வயது மூதாட்டி ஒருவர், யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதற்காக, தான் யாசகம் செய்து சம்பாதித்த 1 லட்சம் ரூபாயை, மங்களூரு அருகே உள்ள பொளலி ராஜராஜேஸ்வரி கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியிருப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம் கஞ்சகோடு கிராமத்தைச் சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி அஸ்வத்தம்மா. நாடக கம்பெனி நடத்திவந்த இவரின் கணவர் 20 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்ட காரணத்தால், அஸ்வத்தம்மா வாழ்வதற்கே பெரும் நெருக்கடிக்குள்ளாகி யாசகம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார். … Read more

அரசியலில் உறவும் தேவையில்லை பகையும் தேவையில்லை -மநீம தலைவர் கமல்ஹாசன்

சென்னை: அரசியலில் உறவும் தேவையில்லை பகையும் தேவையில்லை என்று மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வருடத்திற்கு 6 முறை கிராமசபை கூட்டம் நடைபெறும் எனும் தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது; அரசியலில் உறவும் தேவையில்லை பகையும் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும்- கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி

ஸ்ரீபெரும்புதூர்: செங்காடு கிராமசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்க முன்மாதிரி கிராம விருது, உத்தமர் காந்தி விருது, அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்பட கூடிய சிறந்த தொழில் மற்றும் சிறந்த வணிக நிறுவனங்களுக்கு விருது என்ற பல்வேறு விருதுகளை அறிவித்து கொண்டிருக்கிறோம். மாநில அளவிலும் ஒன்றிய அளவிலும் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த திட்டங்களை திறம்பட தேவைக்கேற்ப ஒருங்கிணைத்து கடைக்கோடி மக்களிடம் சேர்ப்பது, அது உள்ளாட்சி அமைப்புகளால் தான் முடியும். எனவே … Read more

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2,015 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரிப்பு: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்டு மக்களிடையே அகில இந்திய வானொலி மூலம் ‘மனதின் குரல்‘ (மன்கிபாத்) என்ற நிகழ்ச்சி வழியாக உரையாற்றி வருகிறார். அந்தவகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றும் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர்களுக்கான அருங்காட்சியகத்தின் சிறப்பம்சம் குறித்து … Read more