புதினை நேரில் சந்திக்க நான் தயார்… ஆனால் ஒருவர் கொல்லப்பட்டாலும் முடிந்தது ஜெலென்ஸ்கி எச்சரிக்கை!

செய்தி சுருக்கம்: இரும்பு ஆலையில் பதுங்கி இருக்கும் ஒற்றை உக்ரைனியர் கொல்லப்பட்டாலும் அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் ஈடுபடாது. கெர்சன் நகரில் ஏதேனும் சுதந்திர வாக்கெடுப்பு நடத்தக்கூடாது புதினுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு நான் தாயார் ஜெலென்ஸ்கி அறிவிப்பு மரியுபோல் நகரின் இரும்பு ஆலைக்குள் இருக்கும் ஒற்றை உக்ரைனியர் கொல்லப்பட்டாலும் ரஷ்யவுடனான அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் ஈடுபடாது என அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதலானது 60வது நாளை தொட்டு இருக்கும் நிலையில், … Read more

தமிழகத்தில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளது: டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: தமிழகத்தில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளது என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். நெல்லையில் அபராதம் விதித்தற்காக பெண் உதவி காவல் ஆய்வாளர் கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காயமடைந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவை இன்று காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு நெல்லையில் பெண் காவல் உதவி ஆய்வாளரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, ”இந்த சம்பவம் நடந்ததும் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவருக்கு ஆறுதல் கூறி … Read more

மின்தடைக்கு சொல்லப்படும் காரணம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது- சீமான் அறிக்கை

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பகல் முழுவதும் கோடை வெப்பத்தின் பிடியில் சிக்கிய மக்கள், இரவில் பல மணி நேரங்களாகத் தொடரும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உறக்கமின்றித் தவித்து வருவது மிகுந்த வேதனையை அளிக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 10-ந் தேதி தமிழ்நாட்டில் ஒரு நொடிகூட மின்வெட்டு இருக்காது, தேவையான நிலக்கரியைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய மின்சாரத்துறை அமைச்சர், தற்போது மத்திய தொகுப்பிலிருந்து … Read more

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் அதையொட்டியே மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு பெய்ய கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

முன்னெச்சரிக்கை டோஸ் டில்லியில் இலவசம்| Dinamalar

புதுடில்லி : டில்லியில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், முன்னெச்சரிக்கை ‘டோஸ்’ எனப்படும் ‘பூஸ்டர் டோஸ்’ இலவசமாக போட அரசு உத்தரவிட்டுள்ளது. டில்லியில் கடந்த வாரம் 100க்கும் குறைவாக இருந்த கொரோனா தொற்று பரவல், நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,009 ஆக உயர்ந்தது. இதையடுத்து பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. மீறுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.இந்நிலையில், இரு டோஸ் தடுப்பூசி போட்டு … Read more

சென்னையில் இருந்து புதுச்சேரி புறப்பட்டார் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா

சென்னை, அரசு முறை பயணமாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரி வருகிறார். இதற்காக சென்னை வந்த அவர், சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 9.55 மணிக்கு லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு செல்கிறார். அங்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சியினர் வரவேற்கின்றனர். அதைத்தொடர்ந்து கார் மூலம் காலை 10.20 மணிக்கு ஈஸ்வரன்கோவில் வீதியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்துக்கு வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள … Read more

“போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்… புதினைச் சந்திக்கத் தயார்!" – ஜெலன்ஸ்கி

நேட்டோவில் இணைவதாக உக்ரைன் விருப்பம் தெரிவித்ததையடுத்து, ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவின்பேரில் கடந்த பிப்ரவரி 24-ல் ரஷ்யப் படைக்கும், உக்ரேனியப் படைக்கும் இடையே தொடங்கிய போரானது, இரண்டு மாதங்களாகியும் இன்னும் முடிவடையாமல் தொடர்கிறது. இரு நாடுகளுக்கிடையே பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும், போரை நிறுத்துவதற்கான எந்தவொரு முடிவுகளும் இதுவரை எட்டப்படவில்லை. இந்த நிலையில், போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில், ரஷ்ய அதிபர் புதினைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். விளாடிமிர் புதின் … Read more

பிரபல தமிழ் திரைப்பட நடிகை கணவருடன் சேர்ந்து கைது! வெளியான காரணம்

பிரபல நடிகையும், எம்.பியுமான நவ்நீத் கவுர் கணவருடன் சேர்ந்து கைது செய்யப்பட்டார். தமிழில் விஜய்காந்துடன் அரசாங்கம் திரைப்படத்தில் நடித்தவர் நவ்நீத் கவுர். இவர் அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட தமிழ் படங்களிலும் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் எம்.பியாகவும் உள்ளார். இந்நிலையில் சிவசேனா கட்சித் தலைவரும், மகாராஷ்டிர மாநில முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே வீட்டின் முன்பு ஹனுமன் சாலீசா பாடப் போவதாக, நவ்நீத் ரானாவும், அவரது கணவரும், சுயேச்சை எம்.எல்.ஏ.,வுமான ரவி ரானாவும் அறிவித்தனர். பிரபல தமிழ் … Read more

செங்காடு ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

காஞ்சிபுரம்: தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு கிராமத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஊராட்சிகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது; திட்டங்களை கடைக்கோடி மக்களிடம் கொண்டு செல்ல ஊராட்சி அமைப்புகளால்தான் முடியும் என்றார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நிபுணர்களுடன் ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த 2 ஆண்டுகளாக ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மிகக்கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு மே மாதம் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற கால கட்டத்திலும் கொரோனா பரவல் தினசரி 26 ஆயிரம் ஆக உச்சத்தில் இருந்தது. அதன்பிறகு கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக ஒரு சில மாதங்களில் கொரோனா குறையத் தொடங்கியது. அதன்பிறகு அரசு விதித்த கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாக விலக்கிக்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த … Read more