ஜேசிபி வண்டியில் ஏறி போஸ் கொடுத்த போரிஸ் ஜான்சன்! இந்தியாவில் சர்ச்சையை கிளப்பிய சம்பவம்

இந்தியா சென்றுள்ள பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், குஜராத்தில் நேற்று JCB எந்திரத்தின் மீது ஏறி போஸ் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா சென்ற நிலையில், நேற்று குஜாரத் மாநிலத்திற்கு பயணம் செய்தார். அப்போது, JCB எந்திர தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்ற போரிஸ் ஜான்சன், அங்கு வேலை பார்த்த ஊழியர்களுடன் சிறிது உரையாடினார். அதுமட்டுமின்றி, அங்கிருந்த JCB வாகனத்தின் மீது ஏறி … Read more

கோவை போக்குவரத்துத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் ரூ.28.35 லட்சம் பறிமுதல்! லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிரடி

கோயமுத்தூர்: கோவை மண்டல போக்குவரத்துத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.28.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சென்னை எழிலகத்ததில் உள்ள  போக்குவரத்துதுறை அலவலகத்தில் தமிழக போக்குவரத்து துறை  துணை ஆணையராக இருப்பவர் நடராஜன் அறையிலும், அவரது உதவியாளர் முருகன் அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. அதில், 35 லட்சம் ரூபாய் லஞ்ச பணம் கைப்பற்றப்பட்டது. இந்த சர்ச்சை முடிவுக்கு வருவதற்குள் கோவையில் ரூ.28 லட்சம் லஞ்சப்பணம் … Read more

சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது- அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக சென்னை, தலைமை அலுவலகத்தில் செயல்பட்டுவரும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம், சென்னை மாநகர மின் கட்டுப்பாட்டு மையம் மற்றும் 24 மணி நேர மாநில மின் நுகர்வோர் சேவை மையம் மின்னகம் ஆகியவற்றை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  வி செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்  செந்தில் பாலாஜி, மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய 796 மெகாவாட்  மின்சாரம் கடந்த … Read more

நிடி ஆயோக் அமைப்பின் துணை தலைவர் நியமனம்| Dinamalar

புதுடில்லி : ‘நிடி ஆயோக்’ அமைப்பின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, பொருளாதார நிபுணர் சுமன் பெர்ரி அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த 2015 ஜனவரியில் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு, நிடி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் துணைத் தலைவராக இருந்த அரவிந்த் பனகாரியா ராஜினாமா செய்ததை தொடர்ந்து, 2017 ஆகஸ்டில், மூத்த பொருளாதார நிபுணர் ராஜிவ் குமார் அப்பதவியை ஏற்றார். ராஜிவ் குமாரின் பதவிக்காலம் வரும் 30ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், … Read more

RCB vs SRH: ஏப்ரல் 23-ஐ இனி ஆர்சிபி-யால் மறக்க முடியுமா? பழைய டானாக மிரட்டும் சன்ரைசர்ஸ்!

உம்ரான் மாலிக்கின் வேகம், புவனேஷ்வரின் ஸ்விங்கிங் டெலிவரிகள், நடராஜனின் யார்க்கர்கள், ஜேன்சனின் துல்லியம் என வேகப்பந்து அச்சுறுத்தலின் மொத்த பேக்கேஜான சன்ரைசர்ஸின் தாக்குதலை, ஆர்சிபியின் பேட்டிங் லைன் அப் தாக்குப்பிடிக்குமா அல்லது சன்ரைசர்ஸ் துவம்சம் செய்யுமா என போட்டிக்கு முன்னதாகவே, விவாதங்கள் தூள் பறந்தன. ஆனால், ஆர்சிபியின் ஆணிவேர் முதல் பிடுங்கி எறிந்து சன்ரைசர்ஸ் அதகளம் காட்டியிருக்கிறது. ஏப்ரல் 23 – ஆர்சிபிக்கு எப்பொழுதும் ஏதோ ஒரு வகையில் நினைவு கொள்ளத்தக்க நாளாகவே இருந்து வந்திருக்கிறது. கெய்ல் … Read more

உக்ரைன் மக்களுக்கு ரஷ்யாவின் ஈஸ்டர் பரிசு: ஏவுகணையால் சின்னாபின்னமாகும் முக்கிய நகரம்

உக்ரைனின் ஒடெசா நகர் மீது விளாடிமிர் புடின் துருப்புகள் முன்னெடுத்த க்ரூஸ் ஏவுகணை தாக்குதலில் மூன்று மாத குழந்தை உட்பட 5 பேர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரேனிய மக்கள் ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் தினத்தை கொண்டாடவிருக்கும் நிலையில், விளாடிமிர் புடினின் பரிசாக குறித்த தாக்குதலை அரசியல் நோக்கர்கள் பார்க்கின்றனர். மேலும், குறித்த தாக்குதலில் 18 பேர் காயங்களுடன் தப்பியதாகவும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். குடியிருப்பு வளாகம் ஒன்றில் குறைந்தது … Read more

தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டிற்கு மத்தியஅரசுதான் காரணம்! திமுகவுக்கு தோள் கொடுக்கும் கே.எஸ்.அழகிரி

கும்பகோணம்: தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டிற்கு மத்தியஅரசுதான் காரணம் என ஆளும்  திமுகவுக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பொற்கால ஆட்சி நடைபெற்று வருவதாகவும் தமிழகத்தில் தற்போது மின்வெட்டு இல்லை எனவும் இனி வரும் காலங்களிலும் மின்வெட்டு இருக்காது என தமிழக மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 19ந்தேதி சட்டப்பேரவையில் கூறினார். ஆனால், அவரது வாய்முகூர்த்தம், அடுத்தடுத்த நாட்களில் … Read more

ஐபிஎல் கிரிக்கெட் – பிளே ஆப் மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

மும்பை: ஐ.பி.எல். தொடரின் 15-வது சீசன்  கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலால் ஐ.பி.எல். தொடரின் லீக் போட்டிகள் மும்பை மற்றும் புனே நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐ.பி.எல். பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் இடங்களை பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி அறிவித்துள்ளார் . அதன்படி, முதல் பிளே ஆப் சுற்று மற்றும் எலிமினேட்டர் சுற்று போட்டிகள் மே 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கொல்கத்தாவில் நடைபெறும் … Read more

மாநிலத்திற்கென தனி கல்விக் கொள்கையை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருகிறோம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: மாநிலத்திற்கென தனி கல்விக் கொள்கையை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருகிறோம்  என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்தார். வகுப்பில் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்வது இங்கொன்றும், அங்கொன்றுமாக உள்ளது என கூறினார். பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக முதல்வர் முடிவெடுப்பார் எனவம் தெரிவித்தார்.

இளம்பெண்ணின் தோலை உரித்து ஆடை தயாரித்த கொடூரன்: முடிவுக்கு வராத ஒரு மிக நீண்ட வழக்கு

போலந்து நாட்டில் ஒரு கல்லூரி மாணவி திடீரென மர்மமான முறையில் மாயமானார். Katarzyna Zowanda (32) என்னும் அந்த இளம்பெண் மாயமாகி இரண்டு மாதங்கள் ஆன நிலையில், போலந்திலுள்ள நதி ஒன்றில் ஒரு படகு பழுதாகி நின்றுபோனது. படகு ஏன் நின்றது என ஆராயும்போது, அந்தப் படகின் புரொப்பல்லரில் ஏதோ சிக்கியிருப்பது தெரியவந்தது. அது என்ன என கவனமாக ஆராயும்போது, அது ரப்பராக இருக்கலாம் என படகிலிருந்தவர்கள் நினைக்க, அப்போதுதான் அதன் கூடவே மனிதக் காது ஒன்றும் … Read more