ஐபிஎல் 2022: தனது 6வது வெற்றியை பதிவு செய்தது குஜராத்

மும்பை: கொல்கத்தா அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. … Read more

நாடு முழுவதும் 2,000 ரயில் நிலையங்களில் டிஜிட்டல் திரைகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள 2,000 ரயில் நிலையங்களில் டிஜிட்டல் திரைகளை அமைக்க இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இரண்டாயிரம் ரயில் நிலையங்களில் 65,000 டிஜிட்டல் திரைகளை அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ரயில்களின் நேரம் உள்ளிட்ட ரயில் சேவை விவரங்களை அறிந்து கொள்ள வசதியாக ரயில்வே நிர்வாகம் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த டிஜிட்டல் திரைகள் ரயில் நிலையங்களில் நடை மேம்பாலம், நடைமேடைகள் மற்றும் … Read more

மாதம் ரூ.10,000 முதலீடு.. 3 ஆண்டில் ரூ.5 லட்சத்திற்கு மேல் வருமானம்..!

எல்லோரும் பாதுகாப்பான ரிஸ்க் குறைவான முதலீடு மூலம் சம்பாதிக்க நினைக்கின்றனர். ஆனால் எதில் முதலீடு செய்வது? எதிர்பார்க்கும் லாபம் கிடைக்குமா? என்றால் தெரிவதில்லை. இன்றைய காலகட்டத்தில் முதலீட்டு ஆலோசகர்கள் முதலீடு என்றாலே மியூச்சுவல் ஃபண்டுகளைத் தான் பரிந்துரை செய்கின்றனர். குறிப்பாக எஸ்ஐபி முதலீட்டினையே பரிந்துரை செய்கின்றனர். அந்த வகையில் நாம் இன்று பார்க்க விருப்பது மாதம் 10000 ரூபாயினை முதலீடு செய்வதன் மூலம், 3 வருடம் கழித்து 5 லட்சம் ரூபாய் கிடைக்குமா? எதில் முதலீடு செய்யலாம்? … Read more

`குழந்தை திருமணம், சிறார்வதை நகர்ப்புறங்களில்தான் அதிகம்!' – கருத்தரங்கில் அதிர்ச்சி தகவல்

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, யுனிசெஃப் மற்றும் தோழமை அமைப்பு ஆகியவை இணைந்து குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பத்திரிகையாளர்களுக்கான பயிற்சி கூட்டரங்கை கிருஷ்ணகிரியில் நடத்தினர். நிகழ்ச்சியில் சமகால குழந்தைத் திருமண பிரச்னைகள் என்ற தலைப்பில் பேசிய சென்னை குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சரண்யா சதீஷ், “2014-2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வு (NHFS) கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 26.8% குழந்தைத் திருமணங்கள் நிகழ்ந்துள்ளன. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு குறித்த … Read more

கனடாவில் மாயமாகியுள்ள ஐந்து வயது சிறுவன்… நான்கு நாட்களாக தேடியும் கிடைக்காததால் ஏற்பட்டுள்ள சோகம்

கனடாவில், Red Earth Cree Nation என்ற பூர்வக்குடியின பகுதியைச் சேர்ந்த Frank Young என்ற ஐந்து வயது சிறுவன் செவ்வாயன்று மாயமானான். Carrot River என்னும் நதியின் அருகில் தன் வீட்டின் முன் அமைந்துள்ள புல்வெளியில் விளையாடிருந்த அவன் காணாமல் போயுள்ளான். Saskatchewan மற்றும் மனித்தோபாவிலுள்ள மக்கள் உட்பட ஒன்பது தன்னார்வலர்கள் குழுக்கள் Frankஐத் தேடி வருகிறார்கள். ஆனால், Frank காணாமல் போய் நான்கு நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அவனைக் கண்டுபிடிக்க கூடுதல் தன்னார்வலர்களுக்கு அழைப்பு … Read more

சபரிமலை ஆன்லைன் முன்பதிவை தேவசம்போர்டிடம் ஒப்படைக்க கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

திருவனந்தபுரம்: சபரிமலை ஆன்லைன் முன்பதிவை அரசு சார்பில் காவல்துறை மேற்கொண்டு வந்து நிலையில், அதை கோவிலை நிர்வகிக்கும்  தேவசம்போர்டிடம் ஒப்படைக்க கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், அதை அவ்வப்போது மாநில அரசு தலையிட்டு, நடைமுறைகளை மாற்ற முயற்சித்து வருகிறது. இதற்கிடையில் கொரோனா காலக்கட்டத்தில், பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில், பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு போன்றவற்றை அறிவித்து, மாநில … Read more

தமிழகம் முழுவதும் நாளை கிராம சபை கூட்டங்கள்- செங்காடு கிராமத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு, நாளை தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஊரக வளர்ச்சி மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கு என்ற தலைப்பில் நடைபெறும் இக்கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு கிராமத்தில் நாளை நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

ஐபிஎல் 2022: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு

மும்பை: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து பெங்களூரு அணி முதலில் களமிறங்க உள்ளது.

பகலில் நோட்டம் விட்டு  இரவில் திருடியோர் கைது | Dinamalar

சஞ்சய் நகர் : பகலில் நோட்டமிட்டு இரவில் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 79 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.பெங்களூரு சஞ்சய் நகர் போலீசார், திருட்டு வழக்கில் ரோகித் மண்டல், 35, வினோத் குமார், 33 ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், வங்கதேசத்தை சேர்ந்த இவர்கள் பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளை பகலில் நோட்டமிட்டு இரவில் திருடி வந்தது தெரியவந்தது.இவர்களிடமிருந்து 79 … Read more

“இந்தியாவை தாக்கினால்… எல்லையை தாண்ட தயங்கமாட்டோம்!" – ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

1971 இந்தியா – பாகிஸ்தான் போரில் அஸ்ஸாமை  தளமாகக் கொண்டு சண்டையிட்ட வீரர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “இந்திய நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை ஒழிக்க மத்திய பா.ஜ.க அரசு தீவிரமாகச் செயல்படுகிறது. பயங்கரவாதத்தைக் கடுமையாக இந்தியா எதிர்க்க முன்வந்துள்ளது. ராணுவ வீரர்கள் இந்தியாவின் எல்லையிலிருந்து இந்தியா குறிவைக்கப்பட்டால், எங்கள் எல்லையைத் தாண்ட தயங்கமாட்டோம். வங்க தேசம் நட்பு … Read more