உக்ரைனுக்கெதிராக பயன்படுத்தப்படும் ஜேர்மன் ஆயுதங்கள்: எழுந்துள்ள மற்றொரு பரபரப்புக் குற்றச்சாட்டு

ஏற்கனவே உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க ஜேர்மனி தயக்கம் காட்டுவதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், உக்ரைனுக்கெதிராக ஜேர்மன் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடும் என புதிதாக தற்போது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு, ரஷ்ய கிரீமிய பிரச்சினையின்போது, புடினுக்கு ஏவுகணைகள், துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட்கள் முதலான ஆயுதங்கள் அனுப்பப்பட்டதாக பிரித்தானிய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. அந்த நேரத்தில் ஜேர்மனி மட்டுமின்றி பிரான்ஸ் நாடும் ரஷ்யாவுக்கு போர் உபகரணங்களை அனுப்பியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கிரீமியாவை … Read more

அறிவு வேட்கைக்கான திறவுகோல் புத்தகங்களே! முதலமைச்சரின் புத்தநாள் டிவிட்…

சென்னை: அறிவு வேட்கைக்கான திறவுகோல் புத்தகங்களே என உலக புத்தக நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். ஏப்ரல் 23 ஆம் நாள் உலகப் புத்தக நாள் (World Book Day) அல்லது உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) என கொண்டாடப்படுகிறது. உலக புத்தக நாள், என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் … Read more

உலகின் நம்பர் 1 நாடாக இந்தியாவை மாற்ற பிரதமர் மோடி இலக்கு – அமித் ஷா

ஜக்தீஷ்பூர்: வரும் 2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை உலகின் நம்பர் நாடாக மாற்ற பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாக உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். 1857ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கலகத்தில் பங்கேற்ற வீர் குன்வர் சிங்கின் நினைவு நாள் இன்று பீகாரில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.  இதையடுத்து அவரது நினைவிடத்திற்கு சென்ற அமித் ஷா மரியாதை செலுத்தினார். அவரது வருகையையொட்டி 77,000 பாஜக உறுப்பினர்கள் தேசிய கொடியை ஏந்தியபடி வந்திருந்தனர்.  அப்போது அமித்ஷா பேசியதாவது:- பிரதமர் மோடி அரசு … Read more

திண்டிவனத்தில் மின்சார இருசக்கர வாகனம் தீ பற்றி எரிந்து விபத்து

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மின்சார இருசக்கர வாகனம் தீ பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்த வாகனங்கள் மீதும் தீ பரவியதால் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

கொரோனா விதிகளை பின்பற்ற சுகாதார அமைச்சர் அறிவுறுத்தல்| Dinamalar

மைசூரு : ”மாநிலத்தில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கவில்லை. முக கவசம் அணியாதவர்களுக்கு, அபராதம் விதிக்கும் சூழ்நிலை ஏற்படவில்லை. ஆனால் கூட்டம், நிகழ்ச்சிகள் உட்பட, உள் அரங்க நிகழ்ச்சிகளில் முக கவசம் அணிய வேண்டும்,” என சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார். மைசூரில் அவர் நேற்று கூறியதாவது:நாட்டில் கொரோனா அதிகரிக்கிறது. பொது மக்கள் கொரோனா விதிமுறைகளை, தவறாமல் பின்பற்ற வேண்டும். நம் மாநிலத்தில் தொற்று இல்லை, தொலைவிலுள்ள டில்லியில் உள்ளது என, மக்கள் அலட்சியப்படுத்தக்கூடாது.டில்லி உட்பட, வட … Read more

சூப்பர் சரிவில் தங்கம் விலை.. எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா.. !

நடப்பு வாரத்தில் 6 நாட்களில் 4 நாட்கள் தங்கம் விலையானது சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக குறைந்துள்ளது. இன்றும் தங்கம் விலையானது குறைந்துள்ளது. இது சாமானியர்களுக்கு தங்கம் வாங்க சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இன்று சர்வதேச சந்தை விடுமுறை என்பதால், தங்கம் விலையில் அது எதிரொலிக்க வாய்ப்பில்லை. இந்திய எம்சிஎக்ஸ் சந்தையும் இன்று விடுமுறையாகும். இதற்கிடையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சரிவினைக் கண்டுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கும், தங்க ஆர்வலர்களுக்கும் கிடைத்த மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. தேவை அதிகரிக்கலாம் … Read more

சென்னை: ஆண் நண்பருடன் பேச்சு; காட்டிக் கொடுத்த கால் ரெக்காடர் – காதல் மனைவியைக் கொலை செய்த கணவர்

சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் புகழ்கொடி (எ) டில்லி (23) இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர், சரிதா (19) என்பவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை மீறிதான் இவர்களுக்குத் திருமணம் நடந்துள்ளது. அதனால் இருவரும் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். குமரி: சிறுமி மீது ஒருதலைக் காதல்; மனைவி கொலை – காதல் கடிதத்தால் சிக்கிய கணவர்! … Read more

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் மாரடைப்பால் காலமானார்! தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சக்கரவர்த்தி மாரடைப்பால் காலமானார். ரிஷி மூலம், ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளில்லாத ரோஜா, ராஜாதி ராஜா, ஊரை தெரிஞ்சிக்கிட்டேன் போன்ற 100க்கும் அதிகமான படங்களில் சிவாஜி, ரஜினி, கமல், சிவகுமார் உள்ளிட்ட நடிகர்களுடன் அண்ணன், மகன், நண்பன் என பல்வேறு விதமான குணச்சித்ர வேடங்களில் நடித்துள்ளவர் சக்கரவர்த்தி (62) ஒருக்கட்டத்தில் சினிமாவிலிருந்து விலகி மும்பையில் குடும்பத்துடன் செட்டிலானார் சக்கரவர்த்தி. இந்நிலையில் இன்று அதிகாலை தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு சக்கரவர்த்தி மரணமடைந்தார். காலையில் … Read more

தென்தமிழகம், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு…

சென்னை: தென் தமிழகம், கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்.” இலங்கை மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, இன்று தென்தமிழகம் உள்பட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. 23.04.2022: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் … Read more

அறிவு வேட்கைக்கான திறவுகோல் புத்தகங்களே… மு.க.ஸ்டாலின் டுவிட்

சென்னை: உலக புத்தக நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- அறிவு வேட்கைக்கான திறவுகோல் புத்தகங்களே! திட்டமிட்ட பொய்ப்பரப்புரைகள் உள்ளங்கைக்கே வந்துவிடும் இக்காலத்தில், உண்மை எனும் புதையலை அடைய புத்தகங்களே வழிகாட்டி! ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வோம்! ஆழ வாசிப்போம்! புத்தகங்களை நேசிப்போம்! என பதிவிட்டுள்ளார். இதையும் படியுங்கள்… கலெக்டர் அலுவலகங்களில் போலி சான்றிதழை கண்டறிய ஏற்பாடு- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி