இந்தியா ரஷியாவை சார்ந்து இருப்பதை விரும்பவில்லை: அமெரிக்கா சொல்கிறது

வாஷிங்டன், இந்தியா தனது பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ரஷியாவை சார்ந்து இருப்பதில் அமெரிக்காவுக்கு விருப்பம் இல்லை என்று பெண்டகன் தெரிவித்துளது.  அமெரிக்காவின் ராணுவ தலைமையகமாக பெண்டகன் செய்தி  தொடர்பு செயலர் ஜான் கிர்பி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “பாதுகாப்புத் தேவைகளுக்காக ரஷ்யாவை நம்பியிருப்பதை நாங்கள்  விரும்பவில்லை என்பதை இந்தியா மற்றும் பிற நாடுகளுடன் தெளிவாக எடுத்துரைத்துள்ளோம்.  அதேநேரத்தில்,  இந்தியாவுடன் நாங்கள் கொண்டிருக்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மதிக்கிறோம்.  இதை மேம்படுத்துவதற்கான வழிகளையும் நாங்கள் … Read more

ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. பிரெஷ்ஷர்களுக்கும் காத்திருக்கும் சூப்பர் வாய்ப்புகள்..!

இந்தியாவில் கொரோனா தாக்கம் சற்று ஓய்ந்திருந்தாலும் அடுத்தடுத்த அலை குறித்த அச்சம் இருந்து வருகின்றது. இதற்கிடையில் கொரோனா காலகட்டத்திலும் வழக்கத்திற்கு மாறாக ஒரு துறை மிகுந்த வளர்ச்சி கண்டது எனில் அது ஐடி துறை தான். சொல்லப்போனால் கொரோனா காலகட்டத்தில் தான் வழக்கத்திற்கு மாறாக தேவை அதிகரித்தது. அந்த காலகட்டத்தில் தேவை காரணமாக பணியமர்த்தலும் அதிகரித்தது. ஒரு காலகட்டத்தில் ஐடி துறையில் பணி நீக்கம், வேலையின்மை பிரச்சனை இருந்து வந்த நிலையில், இன்று ஊழியர்களுக்கு பற்றாக்குறையே நிலவி … Read more

“தமிழகத்தில் கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லை'' – எடப்பாடி பழனிசாமி காட்டம்

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூரில் கோயில் கோடை விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்.ஐ மார்க்கெட் தெரசாவிடம் ஆறுமுகம் என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஆறுமுகம் என்பவர் அண்மையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஆறுமுகம் என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், தன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த பெண் காவல் அதிகாரியின் கழுத்தை அறுத்து … Read more

நீதிமன்ற கட்டிடம் அடிக்கல் -வணிக நீதிமன்றம் திறப்பு! வழக்கறிஞர் சேமநல நிதி ரூ.10 லட்சமாக உயர்ததப்படுவதாக முதல்வர் அறிவிப்பு…

சென்னை: சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் புதிய நீதிமன்ற கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா மற்றும், தமிழகத்தின் முதல் வணிக வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை திறந்துவைத்து முதல்வர் ஸ்டாலின்,  வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி ரூ.10 லட்சமாக உயர்ததப்படுவதாக அறிவிப்பினை வெளியிட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு இடவசதி வழங்கும் பொருட்டு, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ரூ. 20.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட வுள்ள நீதிமன்றக் கட்டடத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, சென்னை, எழும்பூரில், … Read more

தமிழக பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கான மாநாடு வரும் ஏப்ரல் 25,26 நடைபெறுகிறது

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கான இரண்டு நாள் மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஏப்ரல் 25-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில், வளர்ந்து வரும் புதிய உலகின் இந்தியாவின் பங்கு மற்றும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா உலகத் தலைவராக இருப்பதற்கான யோசனைகள் மற்றும் செயல் திட்டங்கள் விவாதிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநிலப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் பங்கேற்கின்றனர். … Read more

கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.

உலகின் மிகப்பெரிய மருந்தகம் மற்றும் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது – மன்சுக் மாண்டவியா

புதுடெல்லி, இந்திய மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் மாநாட்டின் 7வது பதிப்பு ஏப்ரல் 25 முதல் 27 வரை திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக நடைபெற்ற ஊடக மாநாட்டில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியா உரையாற்றினார். இந்திய மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் மாநாட்டில்  பேசிய அவர் கூறியதாவது:- “இன்று, நாம் உலகின் மருந்தகமாக இருக்கிறோம், மேலும் இந்தியா மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடாகவும் உள்ளது. 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 17 கோடிக்கும் அதிகமான … Read more

“ஒவ்வொரு வாசகரையும் ஆசுவாசப்படுத்தும் 1001 அரேபிய இரவுகளின் கதைகள்!” – சஃபி நேர்காணல்

மனித நாகரிகத்தின் பெரும் செல்வங்களில் ஒன்று ‘1001 அரேபிய இரவுகள்’ கதைத் தொகுதி. சொல்லப்பட்ட காலம்தொட்டு இன்றுவரை வாசிப்பில் புதிய திறப்புகளை வழங்கிக் கொண்டிருக்கும் இக்கதைகளின் நவீனத் தமிழ் மொழிபெயர்ப்பை, தேனி மருத்துவக் கல்லூரியில் கிளினிக்கல் சைக்காலஜிஸ்டாகப் பணிபுரிந்துவரும் முகமது சஃபி கொண்டுவந்துள்ளார். உளப்பகுப்பாய்வில் தீவிர ஈடுபாடு கொண்டிருக்கும் சஃபி, அரேபிய இரவுகள் கதைகளில் பல்வேறு அம்சங்கள் குறித்து இங்கு பகிர்ந்துகொள்கிறார். முகமது சஃபி “ ‘1001 அரேபிய இரவுகள்’ கதைகளை நீங்கள் முதன்முறையாகக் கண்டடைந்த தருணம் … Read more

ஆட்டத்தை நிறுத்த சொன்ன ரிஷப் பண்ட்.. வெடித்த சர்ச்சை!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டத்தை நிறுத்துமாறு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணித்தலைவர் ரிஷப் பண்ட் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐபிஎல் தொடரின் நேற்று நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தியது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் இறுதி ஓவரில் டெல்லியின் வெற்றிக்கு 36 ஓட்டங்கள் தேவைப்பட்டது. மெக்காய் வீசிய அந்த ஓவரில் முதல் இரண்டு பந்துகளை பாவெல் சிக்ஸருக்கு விளாசினார். 3வது பந்தை மெக்காய் … Read more

11 மற்றும் 12-ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான செய்முறைத்தேர்வு 2மணி நேரமாக குறைப்பு 

சென்னை: தமிழ்நாட்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டு இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் நடைபெறவுள்ளது. மேலும் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி செய்முறை தேர்வு நடைபெற உள்ளது.  11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள் வரும் திங்கள்கிழமை தொடங்க உள்ளது. … Read more