நெல்லை: அபராதம் விதித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்… கோயில் கொடை விழாவில் நேர்ந்த விபரீதம்!

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர், மார்க்ரெட் கிரேஸி. 29 வயது நிரம்பிய இவர், விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர். நேர்மையாகப் பணியாற்றி உயரதிகாரிகளின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கினார். கழுத்து அறுபட்ட நிலையில் மருத்துவ சிகிச்சை சுத்தமல்லி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பழவூர் கிராமத்தில் உள்ள கோயில் கொடைவிழா நேற்றிரவு நடந்தது. அதில், மார்க்ரெட் கிரேஸி பாதுகாப்புப் பணியில் இருந்தார். கோயிலில் நள்ளிரவு பூஜை முடிந்த பிறகு சற்று ஓய்வாக சக போலீஸாருடன் அவர் அமர்ந்திருந்தார். சப்-இன்ஸ்பெக்டருக்கு … Read more

பிரித்தானியருக்கு ஆற்றில் கிடைத்த புதையல்… அவர் அதை என்ன செய்திருக்கிறார் பாருங்கள்

காந்தம் மூலம் ஆறுகளுக்குள் புதையல் தேடும் பிரித்தானியக் குடும்பம் ஒன்றிற்கு புதையல் ஒன்று கிடைத்தது. Nottinghamshireஇல் வாழும் ஜார்ஜ் (George Tindale, 15), தன் தந்தையான கெவின் (Kevin, 52)உடன் Lincolnshireஇலுள்ள Witham ஆற்றில் காந்தத்தின் உதவியுடன் வழக்கம் போல புதையல் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஜார்ஜுக்கு பழைய பணப்பெட்டி ஒன்று கிடைத்துள்ளது. தந்தையும் மகனுமாக அந்தப் பெட்டியைத் திறந்து பார்க்க, அதற்குள் 2,500 அவுஸ்திரேலிய டொலர்கள்(தோராயமாக 1,400 பவுண்டுகள்) இருந்துள்ளன. அந்தப் பெட்டிக்குள் சில … Read more

எவர்கிரீன் (84) எஸ்.ஜானகி…

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… நமக்குத் தெரிந்த வரையில் எஸ்.ஜானகி மிகப்பெரிய பாடகி என்றாலும் அவருடைய வாழ்க்கையில் வெற்றியும் அங்கீகாரமும் அவருக்கு தாமதமாகத்தான் கிடைத்தன. இந்தக் கோபத்தை அவரே ஒருமுறை நன்றாக வெளிப்படுத்தினார். 2013ஆம் ஆண்டு.மத்திய அரசின் மத்திய அரசின் மிக உயர்ந்த மூன்றாவது விருதான, பத்ம பூஷண் அறிவிப்பு. ஆனால் ஜானகியோ தனக்கு வேண்டவே வேண்டாம் என்று விருதையே நிராகரித்தார். ஒரு இசையரசின் தன்மான உணர்வு அது.. ஆறின கஞ்சி பழங்கஞ்சி … Read more

அ.தி.மு.க. பொதுக்குழு மே 2-வது வாரம் கூடுகிறது

சென்னை: அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் பல்வேறு கட்டமாக நடந்து வருகிறது. கிளை கழகம் முதல் மாவட்ட கழகம் வரை தேர்தல் படிப்படியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாளுடன் (25-ந்தேதி) அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் நிறைவடைகிறது. திங்கட்கிழமை 38 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடக்கிறது. பிற மாநிலங்களுக்கான தேர்தல் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி ஆகிய மாநிலங்களில் இத்தேர்தலை நடத்துவதற்கு பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு சென்றுள்ளனர். … Read more

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக  தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. திண்டுக்கல், குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், புதுக்கோட்டையில் ஓாிரு நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என கூறப்படுகிறது.

சாந்திகிரி மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை முகாம்| Dinamalar

புதுச்சேரி: சாந்திகிரி ஆயுர்வேதா, சித்தா மருத்துவமனையில் நாளை மருத்துவ ஆலோசனை முகாம் நடக்கிறது. கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சாந்திகிரி ஆஸ்ரமத்தின் புதுச்சேரி கிளை எஸ்.வி.,பட்டேல் சாலை பழைய சாராய ஆலை அருகில் இயங்கி வருகிறது. இம்மருத்துவமனையில் நாளை (24 ம் தேதி) மருத்துவ ஆலோசனை முகாம் நடக்கிறது. காலை 9 முதல் மாலை 6 மணி வரை நடக்கும் ஆலோசனை முகாமில் கழுத்து வலி, முதுகு வலி, மூட்டு வலி, ஆர்த்தரைடிஸ், ஸ்பான்டிலேசில் உள்ளிட்ட பல்வேறு … Read more

சம்பள உயர்வு: ஹெச்சிஎல் கொடுத்த குட்நியூஸ்.. ஐடி ஊழியர்கள் கொண்டாட்டம்..!

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை மற்றும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாக விளங்கும் ஹெச்சிஎல் நிறுவனம் சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டு முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிலையில், தற்போது ஊழியர்களைக் குஷிப்படுத்தும் வகையில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பு மூலம் இந்திய ஐடி துறையில் புதிதாகப் போட்டி உருவாகியுள்ளது என்றால் மிகையில்லை, ஏற்கனவே ஊழியர்களைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடி வரும் நிலையில் ஹெச்சிஎல்-ன் இந்த அறிவிப்பு புதிய தலைவலியாக மாறியுள்ளது. ஹெச்சிஎல் டெக் மார்ச் … Read more

“மின்வெட்டினால் திமுக ஆட்சியே பறிபோனது… கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா?” – ஓபிஎஸ் காட்டம்

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை பேசு பொருளாக மாறியிருக்கிறது. தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதாக, திமுக அரசை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் சட்டமன்றத்தில் நேற்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமும் அளித்தார். இந்தநிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கோடைக்காலத்தில் மின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதை மனதில் நிறுத்தி நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கையை திமுக அரசு எடுத்திருக்க வேண்டும். மின்வெட்டு … Read more

மே 6 முதல் உலகெங்கும் வெளியாகிறது ‘டேக் டைவர்ஷன் ‘திரைப்படம்!

மே 6 முதல் உலகெங்கும் வெளியாகிறது ‘டேக் டைவர்ஷன் ‘திரைப்படம்! இப்படத்தை இயக்கி இருக்கும் சிவானி செந்தில் ஏற்கெனவே’கார்கில்’ என்ற படத்தை 2018-ல் இயக்கி இருந்தார் .அந்தப் படம் தமிழில் ஒரே ஒரு கதாபாத்திரம் தோன்றும் படமாக ஊடகங்களில் பேசப்பட்டது. நாயகன் காரில் செல்கிற பயணம் சார்ந்த காட்சிகள் தான் அந்தப் படத்தின் கதையாக இருக்கும்.சிவானி பிலிம்ஸ் சார்பில் சுபா செந்தில் மற்றும் நண்பர்களுடன் இணைந்து தயாரித்துள்ளார். டேக் டைவர்ஷன் படத்தின் ட்ரெய்லர் மற்றும் சில காட்சிகளைப் … Read more

24 பள்ளி மாணவிகளை மாடியில் பூட்டிவைத்த ஆசிரியர்கள்- உ.பியில் பரபரப்பு

லக்கிம்பூர்: உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் பெக்ஜம் பகுதியில் கஸ்தூரிபா பல்லிக்கா வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மனோரமா மிஸ்ரா மற்றும் கோல்டி கதியார் என்ற இரண்டு ஆசிரியர்களுக்கு பணியிடை மாற்றம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த இரண்டு ஆசிரியர்களும் சேர்ந்து அப்பள்ளியில் இருந்த 24 மாணவிகளை மாடியில் அடைத்து வைத்துள்ளனர். தங்களது பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தை மிரட்டுவதற்காக இவ்வாறு அவர்கள் செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட … Read more