5-12 வயதிற்குட்பட்டவர்களுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு Corbevax தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது

5-12 வயதிற்குட்பட்டவர்களுக்கு Corbevax என்ற கோவிட் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு துறை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி தற்போது 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பயோலாஜிக்கல் ஈ நிறுவனத்தின் கார்பிவாக்ஸ் தடுப்பூசிக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (DCGI) பரிந்துரைத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இதனை அவசரகால பயன்பாட்டுக்கு அங்கீகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, 5-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே பாரத் பயோடெக்கின் … Read more

ஜாஸ் பட்லர் அசத்தல் சதம் – டெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜாஸ் பட்லர், தேவ்தத் படிக்கல் இருவரும் அதிரடியாக ஆடினர். படிக்கல் 35 பந்தில் 7 பவுண்டரி, … Read more

இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை… மோடி வருகைக்கு மத்தியில் ஜம்முவில் பதற்றம்!

ஜம்மு-வின் சுஞ்ச்வான் பகுதியில் இன்று அதிகாலை இரண்டு தீவிரவாதிகள் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் இந்தியப் பிரதமர் மோடியைக் கொலை செய்ய வந்த தற்கொலைப்படையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இன்று அதிகாலை 4:25 மணியளவில் சுஞ்ச்வான் ராணுவ முகாமை நோக்கிச் சென்று கொண்டிருந்த இரண்டு தீவிரவாதிகளைக் கண்ட எல்லை பாதுகாப்புப் படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில், இரண்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் சி.ஐ.எஸ்.எஃப் உதவி … Read more

இறுதி மூச்சு வரை…ரஷ்யாவுக்கு பகிரங்க சவால் விடுத்த உக்ரேனிய வீரர்கள்

உக்ரைனின் மரியுபோல் நகரில் தாங்கள் உயிருடன் எஞ்சும் வரையில் விளாடிமிர் புடினின் கனவு பலிக்காது என உக்ரைன் வீரர்கள் பகிரங்க சவால் விடுத்துள்ளனர். உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் ரஷ்ய துருப்புகளின் பிடியில் சிக்கியுள்ளதாகவும், Azovstal இரும்பு தொழிற்சாலையில் மட்டும் சில நூறு உக்ரைனிய வீரர்களும் அப்பாவி பொதுமக்களும் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குறித்த தகவல் உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிரடி தாக்குதல் எதுவும் முன்னெடுக்க வேண்டாம் என விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளதாகவும், ஆனால் உக்ரைனிய … Read more

மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தால், திரும்பப் பெற உத்தரவிடப்படும்! நிதின் கட்கரி எச்சரிக்கை

டெல்லி: மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தால், அதை திரும்பப் பெற உத்தரவிடப்படும் என மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய சாலை போக்கு வரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் மின்சார வாகனங்கள் தயாரிப்பு அதிகரித்து வரும் நிலையில், சில வாகனங்கள் அவ்வப்போது தீப்பிடித்து எரிவது வாடிக்கையாகி வருகிறது. இதனால், மின்சார வாகனங்கள் வாங்கும் பயனர்கள், யோசிக்கத் தொடங்கி உள்ளனர். இந்த நிலையில், மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தால், திரும்பப் பெற உத்தரவிடப்படும் என … Read more

வயதானாலும் இன்னமும் மாணவராகவே உணர்கிறேன்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியின் 30-ம் ஆண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். பின்னர் மாணவர்களிடையே அவர் பேசியதாவது:- கொளத்தூர் தொகுதி நிகழ்ச்சிக்கு வருவதில் மகிழ்கிறேன். வயதானாலும் இன்னமும் மாணவராகவே உணர்கிறேன். மாணவச் செல்வங்களைச் சந்திப்பது எனக்கு எப்போதும் உற்சாகம் தருவதாக உள்ளது. மாணவர்களை பார்க்கும்போது எனக்கு 10 வயது குறைந்ததுபோல் இருக்கிறது. எனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் பணியாற்றுவேன் என்று சொன்னதை இப்போது செய்து வருகிறேன். எந்த பொறுப்பில் இருந்தாலும் நான் உங்களில் … Read more

டி டி வி தினகரனிடம் 4 மணி நேரமாக அமலாக்கத்துறை விசாரணை

சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி தினகரனிடம் 4 மணி நேரமாக அமலாக்கத்துறை விசரானை நடத்தியுள்ளது . நீதிமன்றங்களில் டி.டி.வி தினகரன் சமர்ப்பித்த ஆவணங்கள், வங்கி கணக்குள் விவரத்தை அதிகாரிகள் கேட்டு பெற்றுள்ளனர். டி.டி.வி தினகரன் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். டிடிவி தினகரனின் வங்கி கணக்கில் இருந்து அதிக பணம் எடுத்திருந்தால் ஏன் எடுக்கப்பட்டது என்ற கோணத்திலும் ஹவாலா பண பரிவர்த்தனை செய்துள்ளாரா என்றும் … Read more

பி.யு.சி., பொதுத்தேர்வு இன்று ஆரம்பம் | Dinamalar

பெங்களூரு:பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு கர்நாடகாவில் 1,076 மையங்களில் இன்று ஆரம்பமாகிறது. முறைகேடு தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில் பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு மூன்று முறை தேதி குறித்து, பின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி இன்று தேர்வு துவங்குகிறது. மே 18 வரை நடக்கிறது.மாநிலம் முழுதும் 1,076 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று லட்சத்து 46 ஆயிரத்து 936 மாணவர்கள்; மூன்று லட்சத்து 37 ஆயிரத்து 319 மாணவியர் என ஆறு லட்சத்து … Read more

இந்தியாவை விட்டு தெறித்து ஓடிய நிறுவனங்கள்.. 5 வருடத்தில் எத்தனை தெரியுமா..?!

இந்தியாவில் சமீப காலமாக வர்த்தகத்தைத் துவங்கப் பல வெளிநாட்டு நிறுவனங்கள் கோடி கோடியாய் முதலீடு செய்து வரும் நிலையில், ஆட்டோமொபைல் துறையில் மட்டும் தொடர்ந்து நிறுவனங்கள் வெளியேறி வருகிறது. கடந்த 5 வருடத்தில் பல முன்னணி மற்றும் பிரபலமான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளது. நிஸ்ஸான் ஜப்பான் நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான நிஸ்ஸானின் கிளை நிறுவனமான டட்சன் பிராண்டை இந்தியாவில் மூட உள்ளதாக அறிவித்துள்ளது. 9 வருடங்களுக்கு முன்பு மறு அறிமுகம் செய்யப்பட்ட நிஸ்ஸான் … Read more

“உதயநிதி ஸ்டாலின் கார் கமலாலயம் வர அருகதையில்லை..!" – அண்ணாமலை தாக்கு

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்படுகிறது. இந்த நிகழ்வுகள் கடந்த 2006 – 2011 தி.மு.க-வின் இருண்ட கால ஆட்சியை நினைவூட்டுகிறது. அண்ணாமலை மின்வெட்டுக்கு முதலமைச்சரும், மின்சாரத்துறை அமைச்சரும் மத்திய அரசையே குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தியாவில் 777 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது 2.2 கோடி இருப்புள்ளது. முக்கியமாக, மத்திய மின்துறை … Read more