தேதியை முடிவு செய்வதில் அரசு மும்முரம்!| Dinamalar

புது டில்லி: நாட்டின் மிகப்பெரும் பொதுத் துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி.,யின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கான தேதியை இறுதி செய்வதில் அரசு மும்முரம் காட்டி வருகிறது. எல்.ஐ.சி., பொதுப் பங்கு வெளியீடு மூலம் அந்நிறுவனத்திலுள்ள 5 சதவீத பங்குகளை அரசு விற்க உள்ளது. இதன் மூலம் ரூ.65,000 முதல் 70,000 கோடி திரட்ட இருந்தது. மார்ச் மாதத்திற்குள் இதனை முடிக்க திட்டமிட்டிருந்தனர். பிப்ரவரியில் ஏற்பட்ட ரஷ்யா – உக்ரைன் போரினால் உலகப் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன. … Read more

“இ.பி.எஸ் என் காரை எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம், ஆனால்..!" – சட்டசபையில் உதயநிதி கலகல

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி வரும் மே மாதம் 10-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் அனைத்துத் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். இன்று சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தில் உதயநிதியின் பேச்சால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.  சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்றுவரும் சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், “சென்ற முறை நான் பேசியபோது … Read more

உக்ரைன் நகரில் புடினின் படுகொலைகளை அம்பலப்படுத்திய செயற்கைக்கோள் படங்கள்

உக்ரைனில் இருந்து மரியுபோல் நகரம் விடுவிக்கப்பட்டதாக விளாடிமிர் புடின் தெரிவித்துள்ள நிலையில், ரஷ்ய துருப்புகளின் கொடூரங்கள் செயற்கைக்கோள் படங்களாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் ரஷ்ய துருப்புகளால் முற்றுகையிடப்பட்டு, கடுமையான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. சுமார் 2,000 வீரர்களும் பல நூறு அப்பாவி பொதுமக்களும் மட்டுமே தற்போது மரியுபோல் நகரில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ரஷ்ய துருப்புகள் மரியுபோல் நகரில் முன்னெடுத்த படுகொலைகள், கொடூரங்களை தனியார் நிறுவனம் ஒன்று செயற்கைக்கோள் படங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது. … Read more

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 16வது நாளாக இன்றும் மாற்றமில்லை

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 16வது நாளாக இன்றும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி தொடர்ந்து வருகிறது. இதன்படி, சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 110 ரூபாய் 85 காசுகளாகவும், டீசல் … Read more

மேலும் 800 மில்லியன் டாலர் உதவி – ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்தார் அதிபர் ஜெலன்ஸ்கி

கீவ்: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், பல்வேறு நாடுகள் அந்நாட்டுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே, ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். இந்நிலையில், உக்ரைனுக்கு தொடர்ந்து ராணுவ உதவிகளை அளித்து வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவிதுள்ளார். இதையும் படியுங்கள்…20 நாட்களில் 2 முறை … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,235,948 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.35 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,235,948 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 507,653,989 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 459,900,769 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 41,825 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நட்சத்திரப் பலன்கள்: ஏப்ரல் 22 முதல் 28 வரை! #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

ஐபிஎல்2022: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி

மும்பை: ஐபிஎல்2022 மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன் குவித்தது. சென்னை பந்துவீச்சில் முகேஷ் சவுதாரி 3, டுவைன் பிராவோ 2, சான்ட்னர், தீக்‌ஷனா தலா 1 விக்கெட் வீழ்த்தினர் 56 ரன் எடுத்தால் வெற்றி என்ற … Read more

இலங்கையில் அதிபர் கோத்தபய ஆட்சிக்கு முடிவு? எதிர்க்கட்சி மசோதா தாக்கல்| Dinamalar

கொழும்பு,: இலங்கையில் அதிபர் ஆட்சி முறைக்கு முடிவு கட்டி, ஜனநாயக அரசை ஏற்படுத்தும் அரசியல் சாசன சட்ட திருத்த மசோதாவை, முக்கிய எதிர்கட்சி ஒன்று பார்லி சபாநாயகரிடம் வழங்கி உள்ளது. நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, மின்வெட்டு போன்ற பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இதற்கு அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், அவரது திறனற்ற அரசும் தான் காரணம் எனக் கூறி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் முக்கிய எதிர்கட்சியான சமாகி … Read more

மாதம் 7 பில்லியன் டொலர்… உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளிப்படை

உக்ரைனில் தற்போதைய பொருளாதரா நெருக்கடியை எதிர்கொள்ள மாதம் 7 பில்லியன் டொலர் தேவைப்படுவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ரஷ்ய படையெடுப்பால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள உக்ரைன் கடுமையாக போராடி வருவதாக கூறியுள்ளார் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி. இந்த நிலையில் மீண்டும் பொருளாதார உதவிகளை அறிவித்துள்ள அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜெலென்ஸ்கி, உக்ரைனில் பொருளாதாரத்திற்கு உதவும் அனைத்து பொருட்களையும் அழிப்பதை ரஷ்ய இராணுவம் நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும், ரயில் நிலையங்கள், உணவுக் கிடங்குகள், எண்ணெய் சுத்திகரிப்பு … Read more