`நண்பா… இனி உங்கள் பெயர் துளசிபாய்!' – WHO தலைவர் டெட்ராஸுக்கு இந்தியப் பெயர் வைத்த மோடி

குஜராத்தில், சர்வதேச ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க உச்சிமாநாடு சமீபத்தில் நடைபெற்றது. அதில் பிரதமர் நரேந்திர மோடி, உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் மருத்துவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய மோடி, “டெட்ராஸ் காலையில் என்னைச் சந்தித்தபோது நான் ‘பக்கா’ குஜராத்தியாக மாறிவிட்டதாகவும், நரேந்திர மோடி 250 மில்லியன் டாலர் மதிப்பில் உலக பாரம்பர்ய மருத்துவ மையம்; அடிக்கல் நாட்டிய மோடி; என்ன சிறப்பு? தனக்கொரு குஜராத்தி பெயரை வைக்குமாறு கேட்டுக்கொண்டார். … Read more

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் எந்த தடையும் இல்லை! ஜேர்மனி அறிவிப்பு

 உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் எந்த தடையும் இல்லை என ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பேர்பாக் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது 57வது நாளாக தொடர்ந்து போர் தொடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் கார்கிவ் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா தாக்குதலில் இருந்த உக்ரைனை தற்காத்துக் கொள்ள ஆயுதங்கள் தந்து உதவுமாறு மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தொடர்ந்து கோரிக்கை விடுத்தார். ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை ஏற்று அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல நாடுகள் உக்ரைனுக்கு … Read more

பந்திப்பூர் சரணாலயத்தில் காட்டு யானைக்கு இரட்டை கன்று…

பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் காட்டு யானை ஒன்று இரட்டை கன்று ஈன்ற சம்பவம் சமூகவலைத்தளத்தில் வைரலானது. சரணாலயத்தின் பழைய டிக்கெட் கவுன்டர் அருகே கடந்த மூன்று தினங்களுக்கு முன் சுற்றித் திரிந்த நிறைமாத யானை ஒன்று அருகில் உள்ள நீர்நிலைக்குச் சென்று கன்று ஈன்றுள்ளது. இந்த சம்பவத்தை அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்த்துள்ளனர் அதோடு சிலர் அதை படம்பிடிக்கவும் செய்தனர். கூட்டமாக இருப்பதைக் கண்டு நீர்நிலைக்கு அருகிலேயே யானை இருந்ததைக் கண்டு வனத்துறை அதிகாரிகள் … Read more

மும்பை அணிக்கு எதிரான ஆட்டம்- டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33வது ஆட்டம் இன்று மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்கிறது. சென்னை அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மொயீன் அலி மற்றும் கிறிஸ் ஜோர்டானுக்கு பதிலாக பிரிட்டோரியஸ் மற்றும் சான்ட்னர் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர். ரிலே மெரிடித், ஹிருத்திக் ஷாக்கீன் மற்றும் … Read more

திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திருச்சி: திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரங்கநாதர் சாமி கோவில் சித்திரைத்தேர் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு வெளியிட்டுள்ளார். விடுமுறையை ஈடுசெய்ய மே 7ஆம் தேதி பணிநாளாக செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

டாடா திடீர் முடிவு.. வெளிநாட்டு வர்த்தகத்தில் இருந்து வெளியேற்றம்.. என்ன காரணம்..?!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் டாடா பல துறையில் வேகமாக வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வந்தாலும், பல பிரிவுகளில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. இதனால் மந்தமான வர்த்தகம், நஷ்டத்தில் இயங்கும் வர்த்தகங்கள், முதலீடு இல்லாமல் தவிக்கும் சிறிய வர்த்தகப் பிரிவு, நிர்வாகம் சரியாக இல்லாத பிரிவு எனப் பல பிரச்சனைகளைச் சரி செய்ய முடியும். அந்த வகையில் டாடா குழுமம் தற்போது மிகவும் முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இலங்கையை காப்பாற்றும் இந்தியா.. கடைசியில் … Read more

How to: தனியார் பள்ளி இலவச சேர்க்கை, விண்ணப்பிப்பது எப்படி? How to apply for RTE admission online?

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள், மற்றும் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகள், சுய நிதி பள்ளிகளில் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் (RTE – Right To Education), வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்தோர்களின் குழந்தைகளுக்கு என LKG அல்லது ஒன்றாம் வகுப்புகளில் 25% இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் நேற்று முதல் (ஏப்ரல் 20) தொடங்கி மே 18 வரை பெறப்படுகின்றன. இதற்கான அறிவிப்புகள் சம்பந்தப்பட்ட பள்ளிகள், மாவட்ட, வட்டார கல்வி அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இணையதளம் மூலமாகவும், மாவட்ட … Read more

சிறைப்பிடித்த உக்ரைனியர்களை கட்டாயப்படுத்தி பயங்கர தீவு ஒன்றிற்கு அனுப்பி வைத்துள்ள புடின்: அவரது நோக்கம்?

ரஷ்யா சுமார் 500,000 உக்ரைனியர்களை கட்டாயத்தின் பேரில் ரஷ்யாவின் ஒரு தொலைதூர மூலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அங்கிருந்து அவர்கள் வெளியேறுவதற்கு தடை விதித்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிரந்தர பிரதிநிதியாகிய Sergiy Kyslytsya என்பவர், 121,000 சிறுபிள்ளைகள் உட்பட, சுமார் 500,000 உக்ரைனியர்களை ரஷ்யா கட்டாயத்தின் பேரில் ரஷ்யாவுக்கு இடமாற்றம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அப்படி உக்ரைனியர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ள இடங்களில் ஒன்று Sakhalin என்னும் தீவு ஆகும். தனியாக, பிரம்மாண்ட சிறை போலக் … Read more

பிரியா பவானி ஷங்கர் – அசோக் செல்வனின் ‘ஹாஸ்டல்’ டிரெய்லர் வெளியானது

அசோக் செல்வன் – பிரியா பவானி சங்கர் இருவரும் நடிக்கும் ஹாஸ்டல் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு போபோ சசில் இசையமைத்திருக்கிறார், ஒளிப்பதிவு அப்சர். சதிஷ், ‘கலக்கப் போவது யாரு’ யோகி, ரவி மரியா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாளத்தில் வெளியான ‘அடி கேப்யாரே கூட்டமணி’ என்ற படத்தின் ரீ-மேக்கான இந்தப் படம் வரும் 28ம் தேதி திரைக்கு வருகிறது. So happy to launch entertaining trailer … Read more

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- சசிகலாவிடம் நாளை மீண்டும் விசாரணை

சென்னை: கொடநாடு கொலை, கொளளை வழக்கு விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, சசிகலாவின் உறவினரான விவேக், கொடநாடு பங்களா மானேஜர் நடராஜன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சசிகலாவிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது. தி.நகரில் உள்ள சசிகலாவின் வீட்டில் வைத்து விசாரணை நடைபெற்றது.  ஐ.ஜி சுதாகர் தலைமையில் 8 … Read more