தமிழகத்தில் கொரோனா அதிகரிக்க வாய்ப்புள்ளது -ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா படிபடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பொது இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்களில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது வரை 365 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றார். மஐம் மாநிலம் முழுவதும் பரிசோதனைகள் எண்ணிக்கை 25 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

20 நாட்களில் 2 முறை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் சுகாதார பணியாளராக பணியாற்றி வரும் 31 வயதான பெண் ஒருவர் 20  நாட்களுக்குள் 2 முறை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நபருக்கு அடுத்தடுத்து இரண்டு முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இதுவரை அறியப்பட்ட குறைந்தபட்ச கால இடைவெளி இதுவே என்று ஸ்பெயினை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அந்த பெண்ணுக்கு கடந்த டிசம்பர் மாதத்தின் இறுதியில் டெல்டா வைரஸும், ஜனவரியில் ஒமிக்ரான் வைரஸும் பாதித்துள்ளது என … Read more

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் தனிப்படை போலீஸ் நடத்திய விசாரணை நிறைவு..!!

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் தனிப்படை போலீஸ் நடத்திய ஐந்தரை மணி நேர விசாரணை நிறைவு பெற்றது. சசிகலாவிடம் நாளை காலை 10 மணிக்கு மீண்டும் விசாரணை நடைபெறும். சென்னை தியாகராயர் நகரில் உள்ள வீட்டில் சசிகலாவிடம் தனிப்படை ஐ.ஜி. சுதாகர், நீலகிரி எஸ்.பி. ஆஷிஸ் ராவத் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். கோடநாடு எஸ்டேட் வாங்கியது எப்போது? அங்கு எத்தனை பேர் வேலை பார்க்கிறார்கள்? என்பது உள்பட சசிகலாவிடம் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன.

வங்கிகள் MCLR & EBLR விகிதத்தினை அதிகரித்தால் என்ன பிரச்சனை.. வட்டி அதிகரிக்குமா?

இந்தியாவில் வளர்ச்சி விகிதமானது படிப்படியாக மீண்டு வரத் தொடங்கியுள்ளது. கொரோனாவில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ள மக்கள், இனி வரும் மாதங்களில் வங்கிக் கடன்களுக்கான தவணைத் தொகையும் அதிகமாக செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சில வங்கிகள் எம்சிஎல்ஆர் விகிதத்தினை அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இனி படிப்படியாக ஒவ்வொரு வங்கிகளும் இந்த விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கோடக் மகேந்திரா உள்ளிட்ட வங்கிகள் … Read more

கருத்தடைக்கு பெண்கள் பயன்படுத்தும் 'அந்தாரா' ஊசி – மும்பையில் ஓர் ஆண்டில் மூன்று மடங்கு அதிகரிப்பு!

பெண்கள் கருத்தடைக்கு பலவிதமான வழிகளைப் பின்பற்றினாலும், தற்காலிக கர்ப்ப தடைக்கு காப்பர் டி பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. மேலும், ஊசி மூலம் செலுத்திக்கொள்ளும் கர்ப்பத்தடை மருந்தும் கிடைக்கிறது. மும்பையில் பெண்கள் எந்த மாதிரியான கருத்தடை சாதனங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர் என்பது குறித்து புள்ளி விவரங்களை, மும்பை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட கருத்தடை சாதனங்கள் குறித்து வெளியிடப்பட்ட அந்தத் தரவில், கடந்த ஓர் ஆண்டில் மட்டும், பெண்கள் தற்காலிக கருத்தடைக்கு ஊசி … Read more

சொந்த வீட்டை குண்டுவீசி தகர்க்க சொன்ன உக்ரைனிய கோடீஸ்வரர்! கூறிய காரணம்..

உக்ரைனிய கோடீஸ்வரர் ஒருவர் தனது சொந்த மாளிகையை குண்டு வீசி தகர்த்துவிடுமாறு ஆயுத படைகளை கேட்டுக்கொண்டது தெரியவந்துள்ளது. உக்ரைனில் TransInvestService எனும் ஐடி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆண்ட்ரே ஸ்டாவ்னிட்சர் (Andrey Stavnitser) எனும் தொழிலதிபர் தான் உக்ரைனிய இராணுவத்திடம் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார். உக்ரைனில் போர் தொடங்கியதையடுத்து குடும்பத்துடன் போலாந்துக்கு சென்ற அவர், தனது பாதுகாப்புக் குழு உறுப்பினர்களை தனது புதிதாக கட்டப்பட்ட மாளிகையில் விட்டுச் சென்றுள்ளார். மேலும், தனது வீடு மற்றும் நிலத்தைச் சுற்றி … Read more

7 பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டன – தமிழக அரசு தகவல்

சென்னை: எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் ஆளுநரிடமிருந்து ஜனவரி 27- ம் தேதியன்று குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டன என்று தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுவிப்பது தொடர்பான அனைத்து கோப்புகளையும் 2021 ஜனவரி 27ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கு தமிழக ஆளுநர் அனுப்பியுள்ளதாக அட்வகேட் ஜெனரல் ஆர்.சுண்முகசுந்தரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். குற்றவாளி எஸ். நளினி தரப்பு வழக்கறிஞர் … Read more

உதவித்தொகை வழங்குவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு பாரபட்சம் காட்டவில்லை- தமிழக அரசு விளக்கம்

சென்னை: பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை அதிகரித்து வழங்குவது தொடர்பாக நேத்ரோதயா என்ற அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது சொற்ப அளவிலான உதவித்தொகை வழங்கி மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்த வேண்டாம் என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.  உதவித்தொகையை அதிகரித்து வழங்குவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உதவித்தொகையை அதிகரித்து வழங்கும் விஷயத்தில் சமூக நலத்துறை செயலாளர் அக்கறையுடன் செயல்படவில்லை … Read more

பொது இடங்களுக்குச் செல்லும் போது மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும்: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

சென்னை: பொது இடங்களுக்குச் செல்லும் போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அரசு கூறியது போல் கருத்துகளை பரப்புவது தவறு என ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை ஐஐடியில் இதுவரை 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

இன்போசிஸ் போட்ட புதிய கண்டிஷன்.. ஊழியர்கள் ஷாக்..!!

இந்திய மென்பொருள் ஏற்றுமதியில் முன்னோடியாக இருக்கும் இன்போசிஸ், சமீபத்தில் வேலையை ராஜினாமா செய்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடு ஊழியர்களின் வளர்ச்சிக்கும், எதிர்காலத்திற்கும் பெரிய முட்டுக்கட்டையாக இருக்கும் காரணத்தால், இன்போசிஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நாட்டின் முன்னணி ஐடி ஊழியர்கள் யூனியன் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தங்கம் விலை சரியலாம்.. அடுத்த முக்கிய லெவல் என்ன.. நிபுணர்களின் பலே கணிப்பு..! இன்போசிஸ் இன்போசிஸ் நிறுவனத்திலிருந்து சமீபத்தில் வெளியேறிய … Read more