கோட்சே குறித்து டுவிட் செய்த குஜராத் சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கைது

அகமதாபாத்: கோட்சே குறித்து டுவிட் செய்த குஜராத் சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி, “கோட்சேவைக் கடவுளாகக் கருதும் மோடி, குஜராத்தில் நடைபெறும் வகுப்புவாத மோதல்களுக்கு எதிராக அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு குரல் கொடுக்க வேண்டும்” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், ஜிக்னேஷ் மேவானியை நேற்று இரவு 11:30 மணியளவில் இருந்து அசாம் போலீஸார் கைது செய்துள்ளனர். பாலன்பூர் சர்க்யூட் ஹவுஸில் … Read more

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் வரும் 30-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 30-ம் தேதி தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். தமிழக அரசு மழை நீர் வடிகால், அரசு திட்டப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகள் பல மாவட்டங்களிலும் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள இருக்கும்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளையும்,  துறை ரீதியான திட்டங்களையும் ஆய்வு செய்கிறார். இதற்காக வரும் 30-ம் தேதி தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய … Read more

திண்டுக்கல் அருகே இரிடியம் விற்பதாக கூறி மோசடி செய்ய முயன்ற 6 பேர் கைது: போலீசார் நடவடிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரப்பட்டியில் இரிடியம் விற்பதாக கூறி மோசடி செய்ய முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான சையது இப்ராஹிம், செல்வகுமார், சுந்தரராஜ், விக்னேஷ், அபுதாகீர், கோபாலகிருஷ்ணனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது இரிடியம் மோசடி கும்பல் சிக்கியது.

ரஷ்யாவுடனான வணிக உறவே வேண்டாம்.. டாடா ஸ்டீல் எடுத்த அதிரடி முடிவு..ஏன்?

ரஷ்யாவுடனான அனைத்து வணிக நடவடிக்கைகளையும் நிறுத்த உள்ளதாக, இந்தியாவின் முன்னணி ஸ்டீல் நிறுவனமான டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பில் சர்வதேச அளவில் மிகப்பெரிய இரும்பு உற்பத்தியாளராக இருந்து வரும் டாடா, உக்ரைனுக்கு தங்களது ஆதரவினை காட்டும் விதமாக ரஷ்யாவுடனான வணிக உறவினை துண்டிக்கும் என தெரிவித்துள்ளது. டாடா ஸ்டீலுக்கு ரஷ்யாவில் எந்த விதமான செயல்பாடுகளோ அல்லது ஊழியர்களோ இல்லை. எனினும் இரும்பு உற்பத்திற்கு தேவையான சில மூலதனங்களை இறக்குமதி செய்கிறது. மாஸ்டர் பிளான் போடும் … Read more

3 பல்புகள் மட்டுமே உள்ள வீட்டுக்கு ரூ.25,000 மின் கட்டணம்; ஷாக் கொடுத்த மின்வாரியம்! – நடந்தது என்ன?

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள எருமாடு ஆழிஞ்சால் பகுதியைச் சேர்ந்தவர் தேவகி. 78 வயதான இவரின் செல்போனுக்கு மின்வாரியத்தில் இருந்து சமீபத்தில் குறுஞ்செய்தி ஒன்று வந்திருக்கிறது. கடந்த 2 மாதம் மின்சாரம் பயன்படுத்தியதற்கு ரூபாய் 25 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை உடனடியாக செலுத்துமாறு அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. “மூன்று மின் விளக்குகள் மட்டுமே இருக்கும் வீட்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணமா?” என அதிர்ச்சி அடைந்த தேவகி, பலரிடமும் இது குறித்து முறையிட்டிருக்கிறார். இது குறித்து … Read more

உக்ரைன் போரில் வெற்றிக்கு நாள் குறித்த ரஷ்யா: அதிக துருப்புகளை களமிறக்க திட்டம்

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா இன்னும் 20 நாட்களில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற முடிவு செய்துள்ளது என பிரித்தானிய பாதுகாப்புத் தலைவர்கள் கூறியுள்ளனர். மே 9-ஆம் திகதிக்கு முன்னதாக உக்ரைனில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை கட்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் துடிப்பதாகவும், அதற்காக டான்பாஸ் பகுதியில் அதிகப்படியான ரஷ்ய துருப்புகளை களமிறக்கி கடுமையான போரில் தள்ளக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டாம் உலகப் போரில் நாஜிக்கள் சரணடைந்ததைக் குறிக்கும் இந்த நாள், ரஷ்ய இராணுவ நாட்காட்டியில் ஒரு … Read more

அரவிந்த் சாமியின் ” கள்ளபார்ட் “: எல்லோருமே வில்லன்கள்தான்!

விக்ரம் தமன்னா நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றிபெற்ற ஸ்கெட்ச் படத்தை தயாரித்தது மூவிங் பிரேம்ஸ் படநிறுவனம். இது தற்போது அரவிந்த்சாமி – ரெஜினா ஜோடியாக நடித்துள்ள ” கள்ளபார்ட் ” படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து உள்ளது. என்னமோ நடக்குது, அச்சமின்றி உள்ளிட்ட படங்களை இயக்கிய, பி. ராஜபாண்டி இந்த படத்தை இயக்கியுள்ளார். பார்த்தி, ஆதேஷ் பாலா, பேபி மோனிகா, ஹரிஷ் பெறாடி ஆகியோர் முக்கிய பத்திரத்தில் தோன்றுகின்றனர். படம் பற்றி இயக்குனர் பி.ராஜபாண்டி கூறும்போது, “இதுவரை … Read more

இந்தியா – பாகிஸ்தான் மோதுவதை போன்ற உணர்வு உள்ளது: ஹர்பஜன் சிங்

மும்பை: ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் இந்த சீசனில் மிக மோசமாக விளையாடி வருகின்றன. மும்பை அணி விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. சென்னை அணி ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் … Read more

சென்னை அணி வீரர் ஆடம் மில்னே காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

சென்னை: சென்னை அணி வீரர் ஆடம் மில்னே காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆடம் மில்னேவுக்கு மாற்றாக இலங்கை வீரர் மதீஷா பத்திரனாவை சென்னை அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

ரூ.2.34 லட்சம் கோடி முதலீட்டை கவர்ந்த மத்திய அரசின் பி.எல்.ஐ., திட்டம்!| Dinamalar

புதுடில்லி: கோவிட் உருவான காலக்கட்டத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை (பி.எல்.ஐ.,) திட்டத்தின் மூலம் ஆட்டோமொபைல் உள்ளிட்ட 14 துறைகளில் ரூ.2.34 லட்சம் கோடி முதலீடு உருவாகியிருப்பதாக பல்வேறு அமைச்சகங்களிடமிருந்து பெற்ற தரவுகள் தெரிவிக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களின் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு விற்பனையை விட அதிகமான விற்பனைக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை பணமாகவே வழங்கப்படுகிறது. மேலும் இதில் பயன்பெறும் இந்தியாவில் குறைந்தபட்ச … Read more