கோவை அருகே மூதாட்டி வீட்டில் மளிகை பொருட்கள் எனக்கூறி குட்கா பதுக்கல்: ராஜஸ்தானை சேர்ந்தவரை கைது செய்தது போலீஸ்

கோவை: கோவை கோபிசெட்டிபாளையம் பகுதியில் மூதாட்டி வீட்டில் மளிகை பொருட்கள் எனக்கூறி குட்காவை பதுக்கிய நபர் கைது செய்யப்பட்டார். ஒரு டன் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த ராஜஸ்தானை சேர்ந்த ரமேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

வாக் ஷீர் நீர்மூழ்கி கப்பல் மும்பையில் நேற்று அறிமுகம்| Dinamalar

மும்பை,-நம் கடற்படையின், ‘பிராஜெக்ட் – 75’ திட்டத்தின் கீழ், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆறு நவீன நீர்மூழ்கி கப்பல்களில் கடைசி கப்பலான, ஐ.என்.எஸ்., வாக் ஷீர் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. நம் கடற்படைக்கு, ஆறு புதிய நவீன நீர் மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க, பிராஜெக்ட் – 75 திட்டம் உருவாக்கப்பட்டது. மும்பையை சேர்ந்த, ‘மசாகான் டாக் ஷிப்பில்டர்ஸ்’ என்ற கப்பல் கட்டும் பொதுத் துறை நிறுவனம், ஐரோப்பிய நாடான பிரான்சின், ‘நேவல் குரூப்’ நிறுவனத்தின் உதவியுடன், இந்த கப்பல்களை உள்நாட்டிலேயே … Read more

2 நாள் பயணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகை…!

அலகாபாத், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு இரு முறை போரிஸ் ஜான்சன் இந்தியா வர திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்த இருமுறையும் கொரோனா காரணமாக அவரது இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டு இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவும் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டிருந்தார். … Read more

இலங்கையை காப்பாற்றும் இந்தியா.. கடைசியில் கடன் கொடுக்க தயாரான சீனா..!

இலங்கை தனது சுதந்திரத்திற்குப் பின்பு மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி, வாழ்வாதாரத்தை இழந்த மக்கள், பொறுமையை இழந்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திடீர் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து மக்கள் நெடுஞ்சாலையை மறித்தும், ரம்புக்கன பகுதியில் ரயில் தண்டவாளத்தில் போராட்டம் நடத்தியதில், காவல்துறையின் நடவடிக்கையில் போலிசார் துப்பாக்கி சூடு மூலம் ஒருவர் கொல்லப்பட்டு 13 பேர் காயமுற்றனர். இதன் பின்பு மக்கள் போராட்டம் மிகப்பெரியதாக வெடித்துள்ளது. … Read more

மதுரை சித்திரை திருவிழாவில் இத்தனை குளறுபடிகளா?! – தொடர் குற்றச்சாட்டுகளும் அமைச்சரின் பதிலும்!

“இறந்தவர், காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு கொடுத்தால் மட்டும் போதுமா? கள்ளழகர் திருவிழாவில் நடந்த மோசமான சம்பவத்துக்கும், இன்னும் பல குற்றச்சாட்டுகளுக்கும் யார் காரணம் என்பதை கமிஷன் அமைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற கோரிக்கையை மதுரையைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். கள்ளழகர் மதுரையில் சமீபத்தில் நடந்து முடிந்த சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசலில் இருவர் மரணமடைந்தும், 12 பேர் காயமடைந்த சம்பவமும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு … Read more

ரஷ்யாவுக்கு முடிவு கட்ட ஐரோப்பியாவில் ரகசிய இடத்தில் வைத்து உக்ரேனியர்களுக்கு அமெரிக்கா பயிற்சி!

ஐரோப்பிய நாடு ஒன்றில் உக்ரேனிய வீரர்களுக்கு அமெரிக்க ஆயுத பயிற்சியை தொடங்கியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மூத்த பாதுகாப்பு அதிகாரி கூறியதாவது, உக்ரைனுக்கு வெளியே ஐரோப்பிய நாடு ஒன்றில் ரகசியமான இடத்தில் வைத்து அமெரிக்காவின் 155mm Howitzers-ஐ பயன்படுத்த உக்ரேனிய வீரர்களுக்கான பயிற்சியை அமெரிக்கா தொடங்கியுள்ளது. புதிததாக வழங்கப்பட்ட அமெரிக்காவின் பீரங்கிகளை உக்ரேனிய ராணுவம் பயன்படுத்துவதற்கான முயற்சித் தொடங்கப்பட்டுள்ளது. புதன்கிழமை அன்று 18 அமெரிக்க 155mm Howitzers பீரங்கிகள் சரக்கு விமானம் மூலம் ஐரோப்பியா வந்தடைந்தது … Read more

ஐபிஎல் 2022: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி அதிரடி வெற்றி

மும்பை: ஐபிஎல், தொடரில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி அதிரடி வெற்றி பெற்றது. இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 115 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. வைபவ் அரோரா 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி பந்துவீச்சில் அக்சர், குல்தீப், லலித், கலீல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். முஸ்டாபிசுர் 1 விக்கெட் கைப்பற்றினார். அக்சர் 4 ஓவரில் 10 … Read more

மனித உரிமை மீறலின் மிகப்பெரிய வடிவம் பயங்கரவாதம்- அமித் ஷா

மனித உரிமை மீறலின் மிகப்பெரிய வடிவம் பயங்கரதம் என்றும், மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அச்சுறுத்தலை வேரறுக்க வேண்டியது அவசியம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) 13வது நிறுவன தின விழாவில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேலும் கூறியதாவது:- ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்ததற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் யூனிசன் பிரதேசத்தில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த பெரிதும் உதவியுள்ளன. பயங்கரவாதத்தை விட மனித … Read more

உக்ரைனின் நகரமான மரியுபோல் நகரை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அதிபர் புடின் அறிவிப்பு

கீவ் : உக்ரைனின் நகரமான மரியுபோல் நகரை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அதிபர் புடின் அறிவித்துள்ளார். பிப்ரவரி 24ம் தேதி முதல் உக்ரைனை தாக்கி வரும் நிலையில், தற்போது மரியுபோல் நகரை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. மரியுபோலில் உள்ள பிரம்மாண்ட உருக்காலையையும் முற்றுகையை தொடருமாறு ராணுவத்திற்கு அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்பு| Dinamalar

புதுடில்லி,-நாகாலாந்தின் மூன்று தீவிரவாத அமைப்புகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை, மேலும் ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், முதல்வர் நீபு ரியோ தலைமையில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு நீண்ட காலமாக தீவிரவாத பிரச்னை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு, தீவிரவாத அமைப்புகளுடன் பல சுற்று பேச்சு நடத்தியது. இதன் பலனாக, நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் என்.கே., நாகாலாந்து சீர்திருத்த … Read more