கோயிலுக்கு நன்கொடை தரமறுத்த பட்டியலினத்தவர்; கொடுமைப்படுத்திய கிராமசபைத் தலைவர் – போலீஸ் விசாரணை!

ஒடிசா மாநிலம் திக்கிரி கிராமத்தில், கோயிலுக்கு நன்கொடை தரமறுத்த பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை, கிராமசபைத் தலைவர் சமேலி ஓஜா என்பவர் ஊர் மக்கள் முன்னிலையில் கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கடந்த செய்வாய்க்கிழமையன்று மார்சகாய் காவல் நிலையத்துக்குச் சென்ற அந்த பட்டியலினத்தவர், “கோயிலை புதுப்பிக்கவேண்டி கோயில் கமிட்டியினர் என்னிடம் நன்கொடை கேட்டனர். நான் நன்கொடை தரமறுத்ததற்கு முதலில் என் குடும்பத்தை ஊரைவிட்டு வெளியேற்றிவிடுவோம் என மிரட்டினர். குற்றம் மீண்டும் அடுத்த நாள், கிராமசபைத் தலைவரின் … Read more

புலம்பெயர்வோரை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பும் திட்டம்: பிரீத்தி பட்டேலுக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல்

பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் புலம்பெயர்வோரை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பும் பிரித்தானிய உள்துறை செயலர் பிரீத்தி பட்டேலின் திட்டத்துக்கு, அவரது அலுவலகத்திலேயே கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. பிரீத்தியின் உள்துறை அலுவலகப் பணியாளர்கள், அவரது திட்டத்தை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்கள். பிரீத்தியின் திட்டம் முற்றிலும் தர்மத்துக்கு எதிரானது என்று கூறியுள்ள உள்துறை அலுவலகப் பணியாளர்களில் சிலர், அத்திட்டம் தொடர்பில் பணி செய்ய மறுக்க தங்களுக்கு அனுமதி கிடைக்குமா என கேட்டிருக்கிறார்கள். இதில் இன்னொரு … Read more

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 15வது நாளாக இன்றும் மாற்றமில்லை

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 15வது நாளாக இன்றும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி தொடர்ந்து வருகிறது. இதன்படி, சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 110 ரூபாய் 85 காசுகளாகவும், டீசல் … Read more

பல மாவட்டங்களில் மின்தடை: அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

சென்னை: தமிழகத்தில் நேற்று பல மாவட்டங்களில் கடுமையான மின்தடை ஏற்பட்டது. பல மணி நேரத்துக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். டெல்டா மாவட்டங்களில் நேற்றிரவு பெரும்பாலான நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மின்வெட்டு நீண்ட நேரம் நீடித்தது. இரவு 7 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் சுமார் 5 மணி நேரமாக வரவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று திணறல் ஏற்பட்டது. பல மாவட்டங்களில் … Read more

தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 10,663 குழந்தைகளுக்கு ரூ.309.75 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது: கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 10,663 குழந்தைகளுக்கு ரூ.309.75 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டில் சமரசம் கிடையாது: பிரதமர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். குடிமைப்பணிகள் தினத்தை முன்னிட்டு நடந்த விழாவில், சிறப்பாக பணியாற்றிய சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கி பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாடு சுதந்திரம் பெற்ற 100வது ஆண்டிற்கான கொள்கையை நாம் வடிவமைக்க வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கான நோக்கங்கள் மற்றும் இலக்குகளை ஒவ்வொரு மாவட்டமும் நிர்ணயிக்க வேண்டும். … Read more

பள்ளி பஸ்சின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த 3 ஆம் வகுப்பு மாணவன் தலையில் மின்கம்பம் மோதி உயிரிழப்பு!

லக்னோ, உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்திலுள்ள மோடி நகரில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், பள்ளி பஸ்சில் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தான். அப்போது, ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த அந்த மாணவன், ஜன்னலின் வெளியே எட்டிப்பார்த்துள்ளான். அப்போது எதிர்பாராத வகையில், மின்கம்பம் ஒன்று சிறுவனின் தலையில் பயங்கரமாக மோதியது. இதனால், தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  இந்த சம்பவத்தில், பள்ளி … Read more

இந்தியாவின் வளர்ச்சிக்கு இது தான் சரியான வழி.. ஐஎம்எஃப் கூறியது என்ன?

கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கைக்கு இந்தியா செய்து வரும் உதவிகளுக்கு, சர்வதேச நாணய நிதியம் பாராட்டினை தெரிவித்துள்ளது. இந்தியா அதன் வருடாந்திர பட்ஜெட்டில், பொது முதலீட்டுக்கு முன்னுரிமை அளித்ததற்காக இந்தியாவை பாராட்டியுள்ளது சர்வதேச நாணய நிதியம். மேலும் உக்ரைன் போர் பிரச்சனைக்கு மத்தியில் தூண்டப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து, உணவு பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும், பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு இடமாற்றங்களை விரிவுபடுத்தவும் இந்தியாவை வலியுறுத்தியுள்ளது. 450 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. புதிய உச்சத்தைத் தொட்ட ரிலையன்ஸ்..! பொருளாதார … Read more

Madhan Bob | "என் திக்குவாய் குணமானது அந்த மகானின் ஆசியால்தான்" – நடிகர் மதன் பாப்

நடிகர் மற்றும் இசையமைப்பாளரான மதன்பாப் திருப்பதி பெருமாள் மீது தீவிர பக்தி கொண்டவர். இவர், தன் ஆன்மிகம் குறித்தத் தன் கருத்துகளையும் தன் வாழ்வில் திருப்பதி பெருமாள் நிகழ்த்திய அற்புதங்களையும் சக்தி விகடன் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறார். Source link

இன்னும் கொஞ்சம் நேரத்தில் வீழ்ந்துவிடும்… புடின் ஆதரவு செசன்ய தலைவர் அறிவிப்பு

உக்ரைனின் மரியூபோல் நகரம் இன்னும் கொஞ்ச நேரத்தில் வீழ்ந்துவிடும் என புடின் ஆதரவு செசன்ய தலைவர் தெரிவித்துள்ளார். புடின் ஆதரவாளரும், செசன்யாவின் தலைவருமான Ramzan Kadyrov என்பவர், மரியூபோல் நகரம், இன்று மதிய உணவு வேலைக்கு முன் அல்லது பின் ரஷ்யப் படைகளிடம் வீழ்ந்துவிடும் என்று கூறியுள்ளார். மரியூபோலில் தற்போது சுமார் 1,000 பேர் மட்டுமே Azovstal ஸ்டீல் தொழிற்சாலை என்னும் இடத்தில் பதுங்கியிருக்கிறார்கள். ரஷ்யப் படைகள் அந்த இடத்தை நெருங்கி வரும் நிலையில், இன்று மதிய … Read more