திருமணமான 15 நாள்களில் புதுமாப்பிள்ளை வெட்டி கொலை‌! – சோகத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்

திண்டுக்கல் அனுமந்தநகர் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் பிரபாகரன். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 15 நாள்களுக்கு முன்பு தான் திருமணம் முடிந்துள்ளது. காவல் நிலையம் இந்த நிலையில் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் அருகே உள்ள ஏர்போர்ட் நகர்ப்பகுதியில் சூர்யா என்ற நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரபாகரன் சென்றுள்ளார். அவரின் நண்பர்கள் கார்த்திக், வினோத் கண்ணன், குணசேகரன் ஆகியோர் ஒன்று கூடி மது அருந்தியுள்ளனர். அப்போது அங்கு வந்த … Read more

CSK அணிக்கு அடுத்த அடி! முக்கிய வீரர் ஐபிஎல்லில் இருந்து விலகல்

ஐபிஎல் தொடரிலிருந்து முக்கியமான சிஎஸ்கே அணி வீரர் ஒருவர் வீரர் விலகியுள்ளார். தொடர் தோல்வியில் தத்தளிக்கும் சிஎஸ்கே அணிக்கு இது மேலும் ஒரு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அந்த அணி விளையாடிய 6 போட்டியில் ஒன்றில் மட்டுமே வென்று 5 போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் அந்த அணி 9வது இடத்தை பிடித்துள்ளது. சிஎஸ்கே அணியிலிருந்து ஏற்கனவே தீபக் சாஹர் காயம் காரணமாக விலகியுள்ளார். இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் தொடக்க வீரரான … Read more

ஆளுநர் உயிருக்கு அச்சுறுத்தல்-அதிமுக புகார்

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அதிமுக புகார் மனு அளித்துள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தருமபுரம் ஆதீனத்தைச் சந்திக்க சென்றபோது, மயிலாடுதுறையில் அவர் கார் மீதும், பாதுகாப்பு அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தி.மு.க அரசு மீது எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டிவருகின்றனர். இந்நிலையில், அதிமுக சார்பில் குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்டுள்ள மனுவில் திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆளுநர் உயிருக்கு அச்சுறுத்தல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, … Read more

கொடநாடு கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்- டிடிவி தினகரன்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சென்னையில் இன்னும் சற்று நேரத்தில் சசிகலாவிடம் விசாரணை நடைபெற உள்ளது. தி.நகரில் உள்ள சசிகலா வீட்டில் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை விசாரிக்க உள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அமமுக செயல்பட்டு வருவதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதையும் … Read more

2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குஜராத் சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை..!!

குஜராத்: 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குஜராத் சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்துள்ளார். மகாத்மா காந்தி நூல் நூற்ற ராட்டையில் நூல் நூற்றி போரிஸ் ஜான்சன் மகிழ்ந்தார். மகாத்மா காந்தி எழுதிய ‘Guide to London’ புத்தகம் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் சபர்மதி ஆசிரமத்தை சுற்றிப்பார்த்தார்.

இந்தியாவில் மேலும் 2,380 பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,380 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,380 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,49,974 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 1,231 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,25,14,479 ஆனது. தற்போது 13,433 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் காரணமாக 56 … Read more

காளையின் பிடியில் சந்தை.. சென்செக்ஸ் மீண்டும் தொடர் ஏற்றம்..முதலீட்டாளர்கள் ஹேப்பி!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. கடந்த அமர்வில் அமெரிக்க சந்தையானது ஏற்ற இறக்கத்தில் முடிவடைந்த நிலையில், இன்று ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்திலேயே தொடங்கியுள்ளன. இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. இன்போசிஸ் போட்ட புதிய கண்டிஷன்.. ஊழியர்கள் ஷாக்..!! ரூபாய் நிலவரம் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 9 பைசா குறைந்து, 76.29 … Read more

சிதம்பரத்தில் சபதம்; டெல்லி பயணம்… ஆளுநரின் மனநிலை என்ன?

ஆன்மிக சுற்றுப்பயணம்: டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆன்மிக திருத்தலங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்த சுற்றுப்பயணத்தின் போது தருமை ஆதீனத்தில் அவர் கலந்துகொள்வதற்கு ஒரு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பயணத்தின் போது தான் அவரின் கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதனை காவல்துறை அதிகாரப்பூர்வமாக மறுத்திருந்தாலும், பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆளுநரின் மனநிலை குறித்து அவருக்கு நெருக்கமான முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். பெரிய கோயிலில் பட்டு வேட்டி, … Read more

கொடியேற்றத்துடன் தொடங்கியது ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை திருவிழா

திருச்சி: சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேர் திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இதற்காக அதிகாலை 2.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கொடியேற்றம் மண்டபம் வந்தடைந்தார் பின்னர் அங்கு கொடி படத்திற்கு பட்டர் சுவாமிகள் மற்றும் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்யப்பட்டு சரியாக 5.05 மணிக்கு கொடியேற்றம் செய்யப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகின்ற 29ஆம் அன்று நடைபெற இருக்கின்றது. இரண்டு வருடங்களுக்குப் … Read more

மின்சார, மெட்ரோ ரெயில்களை போல 500 மாநகர பஸ்களில் பஸ் நிறுத்தம், வழித்தடம் அறிவிக்கும் வசதி

சென்னை: மெட்ரோ ரெயில், மின்சார ரெயில்களில் பயணிகள் வசதிக்காக அடுத்து வரும் நிலையங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அதுபோல சென்னை மாநகர பஸ்களில் ஜி.பி.எஸ். உதவியுடன் இந்த வசதியை பயணிகளுக்கு அளிக்க மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக 500 மாநகர பஸ்களில் இந்த வசதியை அளிப்பதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. அடுத்து வரும் பஸ் நிறுத்தம், நிலையங்கள் குறித்தும் வழித்தடங்கள் பற்றிய தகவல் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்படுகிறது. அடுத்த பஸ் நிறுத்தம் வருவதற்கு 200-300 மீட்டருக்கு … Read more