பான் மசாலா பிராண்ட் அம்பாசிடர் பதவியில் இருந்து விலகுவதாக அக்ஷய் குமார் அறிவிப்பு

மும்பை: நடிகர் அக்ஷய் குமார் பான் மசாலா பிராண்ட் அம்பாசிடர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பாலிவுட் நடிகர்களிலேயே நடிகர் அக்சய் குமார் மிகவும் வித்தியாசமானவர். இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சிகள், மது விருந்துகள் என அனைத்தும் மும்பை திரையுலகில் மிகவும் சகஜம். நடிகர் – நடிகைகள் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது, புகைப்பிடிப்பது என்பது அங்கு சர்வ சாதாரணம். இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் தினமும் வெளிவரும் அளவுக்குதான் பாலிவுட் நட்சத்திரங்களின் வாழ்க்கை முறை இருக்கிறது. ஆனால், … Read more

தமிழக கவர்னர் உயிருக்கு அச்சுறுத்தல்- அதிமுக புகார்

சென்னை: அ.தி.மு.க. சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரும், வழக்கறிஞர் மற்றும் இணைச்செயலாளருமான ஆர்.எம்.பாபு முருகவேல் ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு ஒரு புகார் மனுவை அனுப்பியுள்ளார். அதில், தமிழக கவர்னர் சமீபத்தில் மயிலாடுதுறை சென்றிருந்தபோது, அவருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு மற்றும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம், பாலியல் வன்கொடுமை அதிகரித்தல் ஆகியவற்றில் திறம்பட செயலாற்றாத திமுக அரசின் மீது அரசியல் சாசன விதிகளின்படி நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த மனுவில் … Read more

அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் : தமிழக அரசு

சென்னை : அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.  பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்வது சட்ட விரோதம் என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

தொழிலாளர் சேமநல நிதியத்தில் பிப்.,ல் 14.12 லட்சம் பேர் சேர்ப்பு| Dinamalar

புதுடில்லி : இந்தாண்டு பிப்ரவரியில் ‘இ.பி.எப்.ஓ.,’ எனப்படும் தொழிலாளர் சேமநல நிதியத்தில் புதிதாக, 14.12 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இது குறித்து மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2021 அக்., முதல் தொழிலாளர் சேமநல நிதியத்தில் புதிதாக இணைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது, நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகி வருவதை குறிக்கிறது. இந்தாண்டு பிப்.,ல் தொழிலாளர் சேமநல நிதியத்தில், 14.12 லட்சம் பேர் சந்தாதாரர்களாக ஆகியுள்ளனர். ஜனவரியை விட, பிப்.,ல், 31 … Read more

தங்கம் விலை சரியலாம்.. அடுத்த முக்கிய லெவல் என்ன.. நிபுணர்களின் பலே கணிப்பு..!

தங்கம் விலையானது கடந்த திங்கட்கிழமையன்று அவுன்ஸூக்கு 2003 டாலர்களை எட்டிய நிலையில், 1948 டாலர் என்ற லெவலில் வர்த்தகமாகி வருகின்றது. இது அமெரிக்காவின் நேர்மறையான பொருளாதார வளர்ச்சி குறித்த கருத்துகள், அமெரிக்க பத்திர வருவாய் ஏற்றம் ஆகியவை தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியது. 3 மாதத்தில் 1218 சதவீத லாபம்.. இதை மிஸ் பண்ணிட்டோமே.. சிறு முதலீட்டாளர்கள் புலம்பல்..! அமெரிக்க பத்திர சந்தையானது டிசம்பர் 2018ல் 2.907 என்ற லெவலில் இருந்து, 2.975 என்ற லெவலுக்கு உச்சம் … Read more

“எதிரிகள் இனி இருமுறை யோசித்துவிட்டு மோதுங்கள்” -சக்தி வாய்ந்த ஏவுகணை வெற்றி… எச்சரிக்கும் புதின்

உக்ரைனில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முதல் ரஷ்யா நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போரை கண்டித்து, உலக நாடுகள் பலவும் உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்கள் அளித்தல் போன்ற உதவிகளை செய்து வருகின்றன. மேலும், இந்தப் போரில் ரஷ்யாவை எதிர்க்க அமெரிக்க படைகள் நேரடியாக களத்தில் இறங்காது, ஆனால் உக்ரைனுக்குத் தேவையான அனைத்து ராணுவ உதவிகளையும் அமெரிக்க அளிக்கும் என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை அளிக்கும் அமெரிக்கா உள்ளீட்ட அனைத்து நாடுகளையும் … Read more

சட்டபேரவையில் இன்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்

சென்னை: சட்டபேரவையில் இன்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூகநலன் & மகளிர் உரிமைத் துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இந்த விவாதத்தில் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் அமைச்சர் கீதா ஜீவன், புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றார்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் இன்று விசாரணை

சென்னை : கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் இன்று விசாரணை நடைபெறுகிறது. தனிப்படை போலீசார் இன்று காலை சென்னை வந்து விசாரணை நடத்த உள்ளனர்.இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கே.எஸ்.அழகிரியை கண்டித்த மாநில நிர்வாகி பதவி பறிப்பு… குமரி காங்கிரஸில் நடப்பது என்ன?

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருப்பவர் டாக்டர் பினுலால் சிங். இவரின் தலைமையில் மார்த்தாண்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த், எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சிக்கு எதிராக போட்டி வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றதுடன், காங்கிரஸ் தலைவர் வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி 7 கவுன்சிலர்கள் உள்பட 10 பேர் கட்சியில் … Read more

நூதன போராட்டம்… உலக மக்களுக்கு அழைப்பு விடுத்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி

ரஷ்ய படையெடுப்பு தொடர்பில் உலக நாடுகளின் ஆதரவை பெற நூதன போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி. உக்ரைனின் டான்பாஸ் நகர் மீது ரஷ்ய துருப்புகள் உக்கிர தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையிலேயே, ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இந்த நூதன போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஜெலென்ஸ்கி, உலக நாடுகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்கள் நாட்டின் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைக்க வேண்டும் எனவும், அதில், உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை அனுப்ப கேளுங்கள் எனவும் … Read more