மகன் புதைக்கப்பட்ட இடத்தில் தினமும் துடிக்கும் உக்ரேனிய தாய்! மனதை உருக்கும் புகைப்படங்கள்

  உக்ரைனில் மோதலில் கொல்லப்பட்ட மகன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தாய் கண்ணீர் விட்டு துடிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கலங்க வைத்துள்ளது. உக்ரைனின் புச்சா நகரிலே இச்சம்பவம் நடந்துள்ளது. புச்சா நகரில் பொதுமக்களின் சடலங்கள் சாலையில் கிடந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. புச்சா நகரில் ரஷ்ய படைகள் பொதுமக்களை கொன்று போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதேசமயம், புச்சா படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கத்திய நாடுகள் … Read more

விமான நிலையங்களை தனியார் மயமாக்கினால் மாநில அரசின் பங்கை கொடுங்கள் : மத்திய அரசுக்கு தமிழக அரசு நிபந்தனை

விமான நிலைய சொத்துக்களை தனியாருக்கு மாற்றும் போது வரையறுக்கப்படும் மதிப்பில் ஒரு பங்கை மாநில அரசுடன் மத்திய அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் 30.57 ஏக்கர் பட்டா நிலத்தை சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக தமிழக அரசு வழங்க உள்ள நிலையில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்திற்காக (AAI) கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பை முதலீட்டில் ஒரு பங்காக மாநில … Read more

குறை பிரசவம் கருத்து… மன்னிப்பு கோரினார் பாக்யராஜ்

சென்னை: சென்னையில் பாஜக அலுவலகத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் பாக்யராஜ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. நிகழ்ச்சயில் பேசிய பாக்கியராஜ், ‘பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் 3 மாதத்தில் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள். ஏன் நான் இதை சொல்கிறேன் என்றால் 3 மாத குழந்தைக்குத்தான் வாய், காது இருக்காது’ என கூறினார். குறை பிரசவம் என பாக்கியராஜ் கூறிய கருத்து மாற்றுத்திறனாளிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தனர். இன்றைய புத்தக வெளியிட்டு … Read more

ஐபிஎல் 2022: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு

மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து பஞ்சாப் அணி முதலில் களமிறங்க உள்ளது.

மும்பையில் ஏழுமலையான் கோவில்| Dinamalar

மும்பை: திருமலை திருப்பதி தேவஸ்தானம், மஹா., மாநிலம், நவி மும்பை பகுதியில் வெங்கடேஸ்வரா கோவிலை கட்டுமானம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக இடம் ஒதுக்கீடு செய்து, மஹாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மும்பை: திருமலை திருப்பதி தேவஸ்தானம், மஹா., மாநிலம், நவி மும்பை பகுதியில் வெங்கடேஸ்வரா கோவிலை கட்டுமானம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக இடம் ஒதுக்கீடு செய்து, மஹாராஷ்டிர அமைச்சரவை ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…! சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான … Read more

பியூச்சர் குரூப் திட்டம்.. யோசிக்கும் முகேஷ் அம்பானி.. வங்கிகள் நெருக்கடி..!

இந்திய ரீடைல் சந்தையில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாகப் பார்க்கப்பட்ட பியூச்சர் குரூப் – ரிலையன்ஸ் ரீடைல் டீல் தொடர்ந்து வழக்குகள் மூலம் தடை பெற்று இருக்கும் நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சுமார் 900க்கும் அதிகமான பியூச்சர் ரீடைல் கடைகளைக் கைப்பற்றியுள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைலின் இந்தச் செயல்பாடு கண்டு பியூச்சர் குரூப் மட்டும் அல்லாமல் அமேசானும் அதிர்ச்சி அடைந்த நிலையில் தற்போது முக்கியமான திட்டத்தைப் பியூச்சர் குருப் முன்வைத்துள்ளது. இந்தத் திட்டம் … Read more

ஆந்திரா: பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட 13 வயது சிறுமி – 74 பேரைக் கைது செய்த காவல்துறை

ஆந்திரா மாநிலம், குண்டூர் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்துவந்திருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் அந்த சிறுமியின் தாயார் கொரோனா பாதிப்பு காரணமாக குண்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுமியின் தாயார் உயிரிழந்தார். இந்த நிலையில்தான், மருத்துவமனையில் சிறுமியின் தாயுடன் நட்புடன் பழகிவந்த சொர்ணகுமாரி என்ற மருத்துவமனை பணியாளர், சிறுமியைத்தான் தத்தெடுத்து வளர்த்துக் கொள்வதாகக் கேட்டிருக்கிறார். பாலியல் வன்கொடுமை சிறுமியின் தந்தையும், அவர் மகளை சொர்ணகுமாரியிடம் ஒப்படைத்துள்ளார். … Read more

உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தும் நியோ-நாஜி குழு! வெளியான வீடியோ ஆதாரம்

மரியுபோலில் ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிட்டு வரும் நியோ-நாஜி போராளிகள் குழுவான அசோவ் படைப்பிரிவு, இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. முன்னதாக, உக்ரைனுக்கு தங்கள் நாடு அனுப்பிய ஆயுதங்கள் என்ன ஆனது என்பது குறித்து ஏதுவும் தெரியவில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆயுதங்கள் தவறான நபர்களின் (போராளிகள்) கைகளுக்கு சென்றதாக அமெரிக்கா கருதுவதாக தகவல்கள் வெளியானது. இதனால், நீண்ட நாட்களாக மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அனுப்பும் ஆயுதங்கள் தவறான நபர்களின் கைகளுக்கு சென்றிருக்கலாம் … Read more

பண்ருட்டி அருகே தொழிற்பேட்டை -ஜவ்வரிசிக்கு வணிக அடையாள குறியீடு! சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பரசன் தகவல்…

சென்னை: பண்ருட்டி அருகே தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜவ்வரிசிக்கு வணிக குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பரசன் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதங்களைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டார். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகளை குடும்ப தலைவிகள் பெயரில் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று அறிவித்துள்ளார். தமிழகத்தில் 30,392 … Read more

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளி பலி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி பர்மா காலனியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், ஒரு அறை முழுவதும் தரைமட்டமானது. அந்த அறையில் வேலை செய்துகொண்டிருந்த அரவிந்த் என்ற தொழிலாளி இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.  இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். பின்னர் கட்டிட இடிபாடிற்குள் சிக்கி கருகிய நிலையில் கிடந்த வாலிபர் அரவிந்தன் உடலை … Read more